Thursday, May 26, 2016

தேர்தல்--- யுத்தக் களமல்ல

பழிக்குப் பழி
இரத்தம் முண்டம்
அழிவு சீரழிவு
தொடரும் வன்மம்
இவைகளுக்குப் பின்
பெறுகிற வெற்றியினை
உயர்வாகக் கொள்ளுதல்
யுத்தத்  தர்மம்

இதில் தோற்பவர்கள்
அழிவது அல்லது
அழிக்கப்படுவது
ஒப்புக்கொள்ளப்பட்ட  நீதி

தேர்தல் களம்
யுத்தக்  களமல்ல
அது விளையாட்டு மைதானம்

பயிற்சி
முயற்சி
முறையான அணுகல்
மகிழ்ச்சி ஆரவாரம்
இவைகளோடுப்  பெறுகிற
வெற்றியினை
அடித்தளமாய்க் கொண்டது
தேர்தல் களம்

இதில் வெற்றிக்கொடி நட்டவர்கள்
தோற்பதுவும்
தோற்பவர்கள் தொடர்ந்து முயன்று
வெல்லுவதும்
அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை

விளையாட்டு மைதானத்தை
யுத்தக் களமாக் க விழையும்
சமூகக் காரணிகள் விஷயத்தில்
விழிப்போடுக்  கவனமாய்  இருப்போம்
 இந்தத் தேர்தலைப் போலவே

மேம்பட்டப் பார்வையாளர்களாய்
நாமும் இந்த  உன்னத
ஜனநாயக விளையாட்டில்
அதன் தரத்தை மேம்படுத்துவோம்
இந்தத் தேர்தலைப் போலவே  

10 comments:

ஸ்ரீமலையப்பன் said...

கட்டபிடிக்கப்பட்டால் நன்மையே ...அருமை

சிவகுமாரன் said...

\\\இந்தத் தேர்தலைப் போலவே ???!!!///
அப்படினா அந்த 570 கோடி ?
http://sivakumarankavithaikal.blogspot.com

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யுத்தம் என்று கருதி பழிவாங்கும் செயல்களை தவிர்கது ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று தங்கள் பாணியில் சொன்னது அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யுத்தம் என்று கருதி பழிவாங்கும் செயல்களை தவிர்கது ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று தங்கள் பாணியில் சொன்னது அருமை

KILLERGEE Devakottai said...

அருமையாக சொன்னீர்கள் கவிஞரே
தமிழ் மணம் 3

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான முன்னெச்சரிக்கை. நன்றி.

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள். மக்கள் நலனை மட்டும் பார்த்தால் போதும்.

G.M Balasubramaniam said...

தேர்தல் யுத்தமல்ல போட்டியே என்று சொன்னவிதம் நன்று

Unknown said...

Nice statement.

Unknown said...

Nice statement.

Post a Comment