Thursday, May 19, 2016

தேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்

ஜெயித்தால் மக்கள் அரசியல்    
தெளிவு பெற்றுவிட்டார்கள்
தோற்றால் மதுவுக்கும் பணத்திற்கும்
அடிமையாகி விட்டார்கள் எனப் பேசுவது
ஒருவகையில் போதையில் பிதற்றுவதைப்
போலத்தான்

ஓட்டுப்போடாதவர்களுக்கு முதல்வராக
அவர்களது சர்வ அதிகாரப்போக்கு
மிகத் துரிதமாக செயல்படவேண்டிய நேரத்தில்
செயலின்மை,எதிர்காலம் குறித்த நீண்ட நோக்கில்
திட்டமிடாது ஓட்டுக்கான குறுகிய நோக்கில்
திட்டமிடுதல் செயல்படுதல்,அரசு நிர்வாகத்தில்
வெளிப்படைத்தன்மை இன்மை,
மது விற்பனைப் பெருக்கதின் மூலமே அரசை
நிர்வகிக்க முயல்வது போன்ற பல
காரணங்கள் இருந்தாலும்

இதையும் மீறி கலைஞருக்குப் பதில்
இவரே தேவலாம எனச் சொல்லும்படியாக
பெரும்பாலான மக்களுக்கு ஒரு எண்ணம்
இருப்பதே இந்தத் தேர்தலின் முடிவாக
எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது

ம. ந. கூட்டணி  சோதனை முயற்சியாக
மாற்று அரசியலுக்கு முயன்றது கூட
நல்ல முயற்சிதான்

ஆனாலும் கூட கூட்டணியின் ஒருங்கிணப்பாளராக
வை. கோ செயல்பட்டவிதம், முதல்வர் வேட்பாளரான்
விஜயகாந்த அவர்கள் நடந்து கொண்ட விதம்
மக்களுக்கு அந்த அணியின் மீது நம்பிக்கை
ஏற்படுத்தவில்லை என்பதையே
இந்தத் தேர்தல்  முடிவுகள்
திட்டவட்டமாகக் காட்டிவிட்டது

சீமான் தன் பலம் அறியாது
கொஞ்சம் ஓவராகக் கூவி விட்டார்

மருத்துவர் அன்புமணி அவர்களின் தேர்தல்
அறிக்கைகளும்  பிரச்சாரங்களும்
கொஞ்சம் கவனிக்கும்படியாக இருந்தது
என்றாலும் அவர் கட்சியின் மீது
விழுந்துள்ள ஜாதிப் பூச்சைக் கடக்க
இன்னும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்

நிச்சயமாக தி. மு. க பொறுப்பான
எதிர்க்கட்சியாகத் திகழும்

அதற்காகத்தானே மக்கள் இத்தனை
அதிக இடங்களைக் கொடுத்துள்ளார்கள்

வென்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

12 comments:

Anonymous said...

//ஜெயித்தால் மக்கள் அரசியல்
தெளிவு பெற்றுவிட்டார்கள்
தோற்றால் மதுவுக்கும் பணத்திற்கும்
அடிமையாகி விட்டார்கள் //

In 98 seats people have shown maturity.
In 134 seats people received money and liquor.

!!!!!!!

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல அலசல். ஜனநாயக கடமை ஆற்றிட போட்டியிட்ட அனைவருக்கும் நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எல்லாக் கட்சியனரும் இந்த தேர்தலை பாடமாகக் கொள்ளவேண்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எல்லாக் கட்சியனரும் இந்த தேர்தலை பாடமாகக் கொள்ளவேண்டும்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழ் இளங்கோ அவர்களின் பதிவினைப் படித்துவிட்டு வந்தேன். தங்கள் பதிவும் அருமையான அலசல்.

Unknown said...

வைகோவின் சதி திட்டத்தை முறியடித்து இருந்தால் dmk ஜெயித்து இருக்கும் !

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான அலசல்
வென்றோரை வாழ்த்துவோம்

sury siva said...

இந்த தேர்தலில் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் தனது செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு.

இரண்டாவதாக,


காங்கிரசுக்கும் மற்ற கட்சிகளுக்கும் அவர்களது பலத்திற்கு மேல் அதிகமான தொகுதிகளை தானம் தந்தது ஒரு காரணம். இதில், முக்கியமாக, தே.தி.மு.கே. விலிருந்து பிரிந்து வந்த மூவரின் நிலையம் பாருங்கள். இந்த தொகுதிகளில் தி.மு.க நின்றிருந்தால் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்து இருக்கலாம்.

நிற்க. இனி.

தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைக் கூறும் அதே நேரத்தில்,

சட்ட அவையை ஒரு சண்டைக் களமாக மாற்றாது, பொறுப்புடன் நடந்து கொள்வது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டு கட்சிகளின் பொறுப்புமே.

தனிப்பட்ட நபர்களை விமர்சிக்காது, எடுத்துக்கொண்ட பொருள் பற்றி மட்டும் பேசி சட்ட சபையின் விவாதங்களை நல்ல முறையில் எடுத்துச் செல்வது வெற்றி பெற்ற இரு கட்சிகளுக்குமே நல்மதிப்பைத் தரும்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

எனும் வள்ளுவன் குரலை, குரளை

அவையின் இருபக்கத்தில் உள்ளோரும் மனதில் ஈர்த்து நடந்து
கொள்ளவேண்டும்.

1952 முதல் இருந்து மக்களின் உண்மை நிலை தனை பிரதிபலித்து வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் இனி அவையில் குரல் கொடுக்க இல்லை என்பது ஒன்று தான் வருத்தம் அளிக்கிறது.

சுப்பு தாத்தா.

வலிப்போக்கன் said...

அருமை அய்யா......

வை.கோபாலகிருஷ்ணன் said...

’தேர்தல் முடிவுக்குப் பின் ஓர் அலசல்’ என்று தலைப்புக் கொடுத்திருக்கலாம்.

இதுவே முடிவு இல்லாத ஓர் ஆரம்பம் அல்லவா !

எனினும் நியாயமான நல்லதோர் அலசல். பாராட்டுகள்.

வெற்றிபெற்ற அனைவருக்கும் நம் வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல்! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அலசல்..... வெற்றி பெற்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள்.

Post a Comment