Thursday, August 25, 2016

ரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )

                        காட்சி   ( 4  ) தொடர்ச்சி

(குறைந்தப்  பொழுதெனினும் கனத்துப்
பெய்து விடுகிறக் கோடை மழை போலச்
சுருக்கமாக எனினும்கனமான விஷயத்தை
மிக எளிதாகச் சொல்லிப்போன
ரஜினியை மலைப்புடன் பார்த்தபடி
நெகிழ்ச்சியுடன்..)

ரஞ்சித்:
எவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா
மற்றும் நடிப்புச்  சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்
கிராமத்துல நடக்கிறதைக் கூட  மிகச் சரியா
தெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்

ரஜினி:
(சப்தமாய்ச் சிரித்தபடி )
உச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி
அதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்
சைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்
ஆனா விமானத்தில இருந்து விழுந்தா...
மேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை

(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )

சரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..
என்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க
முடிஞ்சா ஒன் லைனா.....

ரஞ்சித்:
சார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து
உங்களுக்குச் சரியா இருக்கும்படியா
சீரியஸா ஒன்  லைன் யோசித்தேன் சார்

நீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்
திரும்பத் திரும்ப உங்க படம்னா
நினைப்புல வந்து நிக்கிறது
மூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி
முள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட
ஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்
அப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்
காரணம் வில்லத்தனமான  அந்தக் கதா நாயகன்
பாத்திரங்கள் தான் சார்

அந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு
ரொம்பப்பொருத்தமாகவும், ஜனங்களுக்குப்
ரொம்பப் பிடிக்கும்படியாகவும் இருக்கும்ங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

ரஜினி:
நீங்க சொல்றது ரொம்பச் சரி
மனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்
அந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட
பொருத்தம் இருக்காது

என்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி
அதுதான் எனக்கும் மிகச் சரியா
பொருந்தி வருது. ஜனங்களுக்கும்
அதுதான் பிடிச்சுப் போகுது..

ஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண
உடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
ஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி
இந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு
கேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா
சரியா வரும் சார்.

ரஜினி
சரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்
உங்கள் பாணிக்கு......

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
அந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்
சேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா
வந்திரும் சார்...

ரஜினி:
ஓ...ஏற்கெனவே  கொஞ்சம் யோசிச்சிட்டுத்தான்
வந்திருக்கீங்க ரொம்பச் சந்தோஷம்
அதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா ?
அப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க
சரியாய் வரும்...

ரஞ்சித்:
(கொஞ்சம் தயங்கியபடி )
ஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்
வேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்

ரஜினி
அப்படியா...பரவாயில்லையே சொல்லுங்க
டெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்
இந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்
இப்ப வந்ததுதானே...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்
சார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....

ரஜினி
என்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்:
வந்துசார்   ஒரு தோசையை அப்படியே
தலை கீழா திருப்பிப் போடுற  மாதிரி
ஒரு படத்தோடக்கதையை
அப்படியே அடையாளம் தெரியாம
திருப்பிப் போடறோம் சார்
ஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..

ரஜினி:
அப்படியா சும்மா சொல்லுங்க
 நாம தானே பேசறோம் எந்தப் படம்......

ரஞ்சித்:
கமல் சாரோடா நாயகன் சார்

(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ
என அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்
அவரையே உற்றுப் பார்க்கிறார் )

(முற்றிலும் எதிர்பாராத  ஒன்றை
கேள்விப்பட்டவரைப் போல சிறுஅதிர்ச்சியுடன்
சோபாவில் இருந்து எழுந்து மெல்ல
நடக்கத் துவங்குகிறார் )


(தொடரும் )

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தொடர்கிறேன் ஐயா
தம +1

G.M Balasubramaniam said...

ரஜினி கமல் மாதிரி ...இண்டெரெஸ்டிங்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அடுத்து?

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! அப்ப கபாலி நாயகனா!!!!!??????புதிதாக இருக்கிறதே...!!!

Post a Comment