Monday, December 12, 2016

புரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள்

புரட்சித் தலைவர் மறைந்து அ இ அ தி. மு கவில்
ஒரு மாபெரும் வெற்றிடம் தோன்றிய காலச் சூழல்

இப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள்
பெரும்பாலானோர்  சசிகலா அம்மையார்  அவர்களை
ஆதரிப்பதைப் போல அன்று ஜானகி அம்மையாரை
ஆதரித்த நேரம்

பின் கட்சி இரு கூறாய்ப் பிரிந்து சின்னம் முடக்கப்பட
 வேறு வேறு தொகுதிகளில்
சேவல் மற்றும் புறா ஆகிய சுயேட்சை சின்னங்களில்
புரட்சித் தலைவி அவர்களும் ஜானகி அம்மையார்
அவர்களும்தனித்தனியே போட்டியிட்ட நேரம்

அப்போது தமிழகத்தில் இருவரில் நிஜமான வாரிசு
யார்தான் என்கிற குழப்பம் தலைவர்கள் மத்தியில்
மட்டுமல்ல, கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
மட்டுமல்ல,மக்களிடையே கூட இருந்த நேரம்

சென்னையில் இருந்து ஒரு பிரபல
பத்திரிக்கை ஆசிரியர் தன்னுடைய நிருபரை
ஜானகி அம்மையார் மற்றும்
மற்றும் புரட்சித்  தலைவி அவர்கள் போட்டியிடும்
தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்கள்
கருத்தை அறிந்து அறிக்கைத் தருமாறு பணிக்கிறார்

அந்த நிருபரும் நகர் பகுதியைச் சாராது
கிராமப் பகுதியில் விசாரித்தால்தான் சரியாக
இருக்கும் எனக் கருதி ஆண்டிப்பட்டித் தொகுதியைச்
சார்ந்த வருசநாடு பகுதியில் மக்கள் கருத்தைக்
கேட்டு பதிவு செய்து வருகிறார்

அந்தச் சமயம் அந்த ஊரில் ஒரு வயதான
அண்ணா தி.மு.க பெண்மணியிடம்
"புரட்சித் தலைவரின் துணைவியாரும்
புரட்சி தலைவியும் இந்த ஊரில் நேரடியாகப்
 போட்டியிட்டால் ,இந்த  இருவரில்
உங்கள் ஆதரவு யாருக்கு " என வழக்கமான
கேள்வியைக் கேட்டு வைக்க

அந்தப் பெண்மணி சட்டென யாரும் எதிர்பாராத
ஒரு வித்தியாசமான பதிலைச் சொல்கிறார்

"தலைவர் அந்த அம்மாவை வீட்டுக்குள்தானே
வைத்திருந்தார். இந்த அம்மாவைத்தானே அரசியலுக்கு
என அறிமுகம் செய்துவைத்தார்

வீட்டுக்கென இருந்த அம்மா இப்ப ஏன்
நாட்டுக்கு வருது.அது தப்பு. என் ஒட்டு
நாட்டுக்குன்னு புரட்சித் தலைவர் அறிமுகம் செய்த
ஜெயலலிதா அவர்களுக்குத் தான் எனது ஆதரவு "
என்கிறார்

இந்த சுதந்திரம் வந்ததைக் கூட பல வருடம்
கழித்துத் தெரிந்து கொண்ட ஒரு பகுதியான
ஒரு உள்காட்டுக் கிராமத்தில்,

புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
புரிந்து வைத்திருந்த விதம்
அந்த நிருபரை மட்டுமல்ல அவரை அனுப்பி வைத்த
பத்திரிக்கை ஆசிரியருக்கும் மிகுந்த
ஆச்சரியத்தை அளித்தது

பின் அதை அந்தப் பத்திரிக்கையில் மக்கள்
கருத்தாக இதைப் பதிவு செய்திருந்தார்

பின்னர் உண்மையில் தமிழகத்தின் கருத்தாக அந்த
உள்காட்டுப் பகுதியைச் சார்ந்த வயதான
பெண்மணியின் கருத்தே வெளிப்பட்டது

அதே சூழல்தான் இன்றும். புரட்சித்தலைவி
அவர்கள் மிகக் கடினமான காலக்கட்டங்களில்
தான் முற்றிலும் நம்பத் தக்க நபராக
வைத்திருந்தது இன்றைய முதல்வர்
.ஓ.பன்னீர்செல்வம் அவர்களைத்தான்

உயிர்த் தோழியாக, உற்ற தோழியாக
வைத்திருந்த சசிகலா அம்மையார் அவர்களை
கட்சியை விட்டு நீக்கிய பின் பின்னர்
தன் இல்லத்தில் சேர்த்துக் கொண்டாரே ஒழிய

அவருக்கோ அன்று அவரது பூத உடலை
சுற்றிக் காத்து நின்றிருந்த அவரின் உறவினர்
யாருக்குமோ கட்சியில் எந்தப் பதவியும் கடைசிவரைத்
தரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே

அப்போதைப் போலவே ஏற்கென்வே புரட்சித்
தலைவியால் பதவி பெற்றவர்கள் பதவியைத்
தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அன்றைய
பதவியாளர்களைப்போல இன்று முடிவு எடுக்கலாம்

ஆனால் நிச்சயம் மீண்டும் மக்களைச் சந்திக்க
நேர்கையில் அவர்கள் மோசமான முடிவினைத் தான்
சந்திக்க வேண்டியிருக்கும்

ஏனெனில் மக்களுக்கும், கட்சியின் அடிமட்டத்
தொண்டர்களுக்கும் புரட்சித் தலைவியின்
மானசீகச் செய்தி ....

அன்று புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
பதிவு செய்யப்பட்டிருந்ததைப் போலவே

இப்போதும் திட்டவட்டமாய் பதிந்து உள்ளது

இதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியும் நடக்கும்... நடக்கலாம்...

K. ASOKAN said...

மிக அருமையான பதிவு

K. ASOKAN said...

மிக அருமையான பதிவு

அது ஒரு கனாக் காலம் said...

Well said ...

கோமதி அரசு said...

காலம் பதில் சொல்லும்.

Unknown said...

புரட்சித்தலைவியால் முதல்வர் பதவிக்கு அறிமுகம் செய்யப்பட்ட பன்னீரே சசிகலாவின் தலைமையை ஏற்று காவடி தூக்க தயாரான பின் இந்தப்பதிவு அர்த்தமற்றுப்போகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்றைய தினம் இவரா அவரா என்ற கேள்வி எழுந்தது இரு பெண்மணிகளுக்கு இடையே. இன்று அதுபோல இல்லை.

இருப்பினும் மிகவும் அருமையாக அலசி இந்தப் பதிவினில் சில முக்கியமான விஷயங்களை தங்கள் பாணியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

//இதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்//

வருங்காலம் என்ன .... உடனடியாகவே சில விளைவுகளை பொது மக்களாகிய நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம்.

G.M Balasubramaniam said...

இந்த தலைவர் பதவியை கட்சி உறுப்பினர்களிடம் ஓட்டுக்கு விட வேண்டும் சசிகலாவின் தயவால் பதவியில் இருப்பவர்கள் நன்றிக் கடனாக ஏதாவது செய்ய விரும்புவார்கள் சசிகலா வந்தால் பன்னீர்செல்வம் இடம் ஆபத்தாய்விடும்

Unknown said...

Nice msg

இருதயம் said...

அம்மையார் யாரையும் அரசியலுக்கு வாரிசாக அறிவிக்கவில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஓன்று...

Yaathoramani.blogspot.com said...

உங்கள் கருத்து மிகச் சரி

இருதயம் //

ஆனால் சிலரை கட்சிக்குள் வேண்டாம்
என ஒதுக்கி இருந்தார்
என்பதைக் கவனத்தில் கொள்ளலாம் இல்லையா

வர்மா said...

இது தான் யதார்த்தம்

bandhu said...

நான் உங்கள் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன். என் கருத்தை பதிவாக எழுதியிருக்கிறேன். ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப் போங்களேன்!
http://eliyavai.blogspot.com/2016/12/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல். காலம் பதில் சொல்லும் என்பது தான் எனது எண்ணமும்.

த.ம. +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சில சமயங்களில் சில சூழலை சிலர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். என்ன செய்வது?

Post a Comment