Tuesday, December 27, 2016

பேய் அரசு செய்தால்தான்....

பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னச் சாத்தியமா ?

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

அதனால்தான்

முறையான  வாரிசைப்
பின் தள்ளி
உலகே வேடிக்கைப் பார்க்க
பெண் சடங்குகள் செய்ததும்

துரோகம் செய்தவர்கள் எல்லாம்
பிரேதம் சுற்றி நிற்க
இரத்த உறவுகள்
நெருங்கமுடியாது தவித்ததும்

ஊழல் பெருச்சாளியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்

புறக்கடை வழி
அரியாசனம் ஏறுதல் கூட
சாத்தியம்  ஆவதும்

எரிக்கும் சூரியனை
கூடைக்குள் அடைக்கும்
கண்கட்டு வித்தையாய்

பெரும் மரணத்தின்
காரணத்தைக் கூட
மிக எளிதாய் மறைக்கவும்

..............................
.......................................

இப்படி இதுவரை
தமிழகம் கண்டிராத
எத்தனையோ அசிங்கங்கள்
மிக இயல்பாய் அரங்கேறவும்

ஊமை ஜனங்களாய்
சோற்றுப் பிண்டங்களாய்
குருட்டுப் பார்வையாளர்களாய்
தமிழகமே திகழவும்

இதற்கு மேல்
என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது... ?

ஆம்
பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னும் என்பதில்லை

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

13 comments:

ஸ்ரீராம். said...

உண்மை எப்படித்தான், எப்போதுதான் மக்களுக்குத் தெரிவிக்கப்படும்?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தத்தைக் கூறியவிதம் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

உண்மை! சமீபத்தில் அரங்கேறும் காட்சிகளை இங்கு வரிகளில் வடித்தமை அருமை! எப்போதுதான் மக்களின் ஐயங்கள் தீர்க்கப்படுமோ....

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாமை
விலக வேண்டும்...
விலக்கவும் வேண்டும்...
அதிகரித்தால் இப்படித்தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஊழல் பெருச்சாலியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்//

இந்த வரிகளில் ‘பெருச்சாளி’ பெருச்சாலி என ஆகியிருப்பதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது போலத் தெரிகிறது. தங்களின் உடனடிக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. :)

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

ஊழலை சரிசெய்துவிட்டேன்
சுட்டிக்காட்டியமைக்கு
மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Ramani S said...to வை.கோபாலகிருஷ்ணன்

ஊழலை சரிசெய்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி//

ஆஹா ! மிக்க மகிழ்ச்சி.

இப்போதுதான் அந்தப் ’பெருச்சாளி’ பலசாலியாகக் காட்சியளிக்கிறது. :)

G.M Balasubramaniam said...

இப்படி வலைப்பூவுக்களில் அங்கலாய்ப்பு செய்வதால் விடிவு பிறந்தால் சரி. முறையான வாரிசென்று யார் இருந்தார்கள் அண்ணன்மகளா. அவர்தான் எல்லோருக்கும் அம்மாவாயிற்றே

UmayalGayathri said...

nitharsanamana ondru

வெங்கட் நாகராஜ் said...

என்ன நடக்கிறது என்பது கண்கூடு. பணமும் பதவி ஆசையும் என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

Yarlpavanan said...

அருமையான வரிகள்

Unknown said...

கோடிக்கணக்கானோர் உள்ளகிடக்கை கவிதைவரிகளாய்ஊற்றுப்பெருக்கெடுத்ததைப் பாராட்டியே ஆகனும்

Unknown said...

கோடிக்கணக்கானோர் உள்ளகிடக்கை கவிதைவரிகளாய்ஊற்றுப்பெருக்கெடுத்ததைப் பாராட்டியே ஆகனும்

Post a Comment