சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக
பதவி ஏற்பதால் அ. இ அ.தி.மு.க கட்சிக்கு
உண்டாகும் சாதக பாதக விஷயங்களை
அலசும் முன்பு ...
அண்ணா அவர்களின்
மறைவுக்குப் பின் நேர்ந்த அரசியல் சூழலை
ஆராய்ந்ததைப் போல..
http://yaathoramani.blogspot.in/2016/12/blog-post_13.html.http://
.htmlhttp://yaathoramani.blogspot.in/2016/12/2.html
புரட்சித்தலைவர்
அவர்களின் மறைவுக்குப்பின் ஏற்பட்ட
அரசியல் சூழலை ஆராய்வது இன்னும்
சரியாகப் புரிந்து கொள்ள உதவும்
என நினைக்கிறேன்
1967க்குப்பின் முதலமைச்சர் பதவி வகிக்கையில்
காலமான மூன்று முதலமைச்சர்களுக்கும்
உள்ள ஒற்றுமை, மூன்று முதலமைச்சர்களும்
அவர்கள் காலமான காலத்தில் சட்டமன்றத்தில்
முழு மெஜாரிட்டியுடனேயே பதவியில் இருந்தார்கள்
எனவே அவர்கள் காலமானதால் உடனடியாக
ஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல்
எப்போதும்( இப்போதும் போல ) ஏற்படவில்லை
ஆனால் கட்சியில்தான் அவர்கள் காலமானச் சூழலில்
அவர்கள் நினைத்தது போல் இல்லாமல்
மாறுபாடாக வேறு ஒருவர் தொடர்ந்து
தலைமைப் பதவி ஏற்கும்படியாய் அமைந்தது
அண்ணாவுக்குப் பின் அவர் சொல்லிக் கொண்டிருந்த
நாவலருக்குப் பதில் தன்
அரசியல் சாணக்கியத் தனத்தால்
கலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்
தன் சாதுர்யத்தால் இன்றுவரை தொடர்ந்து கொண்டும்
வருகிறார்
ஆனால் புரட்சித் தலைவர் விஷயத்தில்
அவர் அவர் மறைவுக்குப் பின் ஒரு பெரும்
குழப்பம் ஏற்பட்ட பின்பே ஒரு தெளிவும் கிடைத்தது
அதற்குக் காரணம் ஒருவகையில் புரட்சித் தலைவர்
என்று கூடச் சொல்லலாம்
புரட்சித் தலைவர் முதல்வராயிருக்கையில்
மத்திய அரசுடன் ஏதாவது மனக் கசப்பெனில்
அதை தான் பொது வெளியில் பேசாது
காளிமுத்து அவர்களை காங்கிரஸைத் தாக்கிப் பேசும்
ஒரு உசுப்பேத்தி விடுவார்
அவரும் அவர் பங்குக்கு அன்றையத் தினசரிகளில்
தலைப்புச் செய்தி பிடிக்கும்படியாக
ஒரு அருமையான வசனமாக பேசி வைப்பார்
("கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிபுகாது "
முணியாண்டி விலாஸுக்குக் கூட அதிக
பிராஞ்ச் தமிழகத்தில் உண்டு ஆனால் காங்கிரஸுக்கு.."
என்பன போன்ற வசனங்கள் எல்லாம் அப்போது
மிகப் பிரபலம் )
காங்கிரஸுடன் ஏற்படுகிற மனக் கசப்பை
காளிமுத்து அவர்களை வைத்துப் பேசவைத்து
அவ்வப்போது அதைச் சரிசெய்து கொண்டதைப் போல
தனக்குக் கட்சி நடவடிக்கைகளில் ஆர். எம் வீரப்பன்
அவர்கள் பாலும் புரட்சித்தலைவியின் பாலும்
ஏற்படும் அதிருப்தியை அவர்களில் ஒருவருக்கு
முக்கியத்துவம் கொடுத்தும் ஒருவரை ஒதுக்கியும்
என மாற்றி மாற்றி வைத்து அரசியல் சதுரங்கம்
ஆடுவார்
அதுவேஅவர் மறைந்து அவரது பூத உடல்
அன்று இராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி
செலுத்த வைக்கப் பட்டபோது உலகமே
பார்க்கும்படியாய் வெட்டவெளிச்சமாக்கியது
அன்று ஆரம்பம் முதல் கடைசியில் வரை
புரட்சித் தலைவி அவர்கள் தலைவரின்
பூத உடலுக்கு அருகிலேயே சோகவடிவமாய்
இருந்ததும்
உலக மக்கள் அனைவரும் பார்க்கும்படியாய்
புரட்சித் தலையின் மீது இரக்கம் கொள்ளும்படியாய்
அது இருந்ததும்
அதற்கு ஈடு கொடுக்கும்வகையில்
ஜானகி அவர்களையும் புரட்சித் தலைவரின்
அருகில் இறுதி வரை இருக்கும்படியாகச் செய்ததும்
இராணுவ ஊர்தியில் புரட்சித் தலைவரின் உடல்
ஏற்றப்பட்டதும் புரட்சித் தலைவியும் அதில்
ஏறமுற்பட்டதும்..
அவர் கே.பி.ராமலிங்கம் அவர்களால் பிடித்துக்
புரட்சித் தலைவி கீழே தள்ளப்பட்டதும்...
அது அன்று தொலைக்காட்சி மூலம்
உலக மக்கள் அனைவராலும் நேரடிக் காட்சியாய்
பார்க்கப்பட்டதும்...
அது பெரும் அதிர்ச்சித் தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
புரட்சித் தலைவியின்பால் கூடுதல் இரக்கம்
மக்களுக்கு வந்ததும்...
அந்த நிகழ்வே பின்னால் அவர் கட்சித் தொண்டர்களையும்
பொது மக்களையும் ஈர்ப்பதற்கு ஒரு
மிகப் பெரும்காரணமாய் இருந்தது என்றால்
அது மிகையில்லை
ஆனால் இன்று...அதே போல
புரட்சித் தலைவி அவர்களின்
பூத உடல் அதே இராஜாஜி ஹாலில் மக்களின்
அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்போது
சின்னம்மா அவர்களும்
புரட்சித் தலைவி இருக்கிறவரையில் ஊடகங்கள்
கண்ணில் பட்டுவிடாது,மறைமுக அரசியல் செய்து
கொண்டிருந்த, புரட்சித் தலைவி அவர்களால்தனக்கு
துரோகம் செய்கிறவர்கள் என அடையாளம்
காட்டப்பட்டவர்கள் எல்லாம் சுற்றி நின்றதும்..
ஒரு பெரும் அதிர்ச்சிசி தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
சின்னம்மா அவர்களின் பால் கூடுதல் வெறுப்பும்
வந்திருக்கிறது என்றால் அதுவும் மிகையில்லை
அன்று ஆர்.எம் வீரப்பன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்த பலத்தில் ஜானகி அவர்களை முதல்வராக்கி
புரட்சித் தலைவியை அவர்களை ஒதுக்கிச் செய்ததெல்லாம்
சில காலங்களுக்குத் தான் செல்லுபடியானது
பின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் மக்களைச்
சந்திக்க நேர்கையில்தான் மக்கள் யார்ப்பக்கம்
என்பது புரிந்தது
அந்த வகையில் இப்போது மெஜாரிட்டி
இருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பில்
இருக்கும் நிலையில், சின்னம்மாவை
இடைத்தேர்தலில் நிற்கவைத்து முதல்வராக்குவதோ
கட்சியின் பொது குழுக் கூடி
பொதுச் செயலாளராக்குவதோ
சித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்
கொடுப்பதோ இப்போது மிக எளிதானப் பணிதான்
ஆனால் அதையும் தாண்டி மக்களைச்
சந்திக்க நேர்கையில்.....
மந்திரி முதல் மாவட்டச் செயலாளர்,
வட்டம் சதுரம் என பதவியில் இருக்கிற
கட்சித் தலைவர்களைத்
தாண்டித் தொண்டர்களைச் சந்திக்க நேருகையில்..
என்ன நடக்கும்....
..
(நீளம் கருதி அடுத்த பதிவில் )
14 comments:
தோற்றுப் போகும்.
மக்களின் மனதில் இருப்பது
தேர்தல் வந்தால் தெரிந்து விடும்
தம +1
’என்ன நடக்கும்’....
என ஓர் கேள்வியைக் கேட்டுவிட்டு அத்துடன் ’தொடரும்’ போட்டு முடித்துவிடாமல், இடையில் ஓர் படத்தினைக் காட்டியுள்ளதில், அந்தப்படமே அந்தக் கேள்விக்கான பதில் போல அமைந்துள்ளது என சிலர் அப்பாவித்தனமாக நினைக்கக்கூடும்.
உங்கள் பாணியில் அலசல்கள் தொடரட்டும்.
வை.கோபாலகிருஷ்ணன் //
எனக்கு சின்னம்மா முகத்தில்
கரி பூசியவர்களை புரட்சித் தலைவி
ஆசிர்வதிப்பது போலவும் படுகிறது
தங்கள் உடன் வரவுக்கும்
ஒளித்து வைத்த இரகசியம் அறிந்து
பின்னூட்டமிட்டமைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
"சித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்
கொடுப்பதோ இப்போது மிக எளிதானப் பணிதான்." சித்தப்பாவை குறிப்பிட்டு எழுதியதை ரசித்தேன். தொடருங்கள்.
ஸ்ரீராம். //
ஆணித்தரமாகவும்
திட்டவட்டமாகவும்
சொல்ல நினைப்பதை
மிகமிகச் சுருக்கமாகவும்
சொல்லமுடியும் என்பதற்கு
இந்த "நறுக் "பின்னூட்டமே சான்று
வாழ்த்துக்களுடன்...
Sampath Kalyan //
புரட்சித் தலைவியைச் சுற்றி
நின்றவர்கள எல்லாம் என்ன சொந்தம்
எனத் தெரியவில்லை
கட்சியின் உயர் "மட்டத் "தலைவர்கள்
ஒருலிஸ்ட் கொடுத்தால்
நம் போன்றோருக்கு குறிப்பிட வசதியாய்
இருக்கும்
(சின்னம்மாவின் கணவர் சித்தப்பா தானே )
கரந்தை ஜெயக்குமார் //
அவ்வளவு காலமாகாது
இவர்கள் கூடுதலாய்ச் செய்யச் செய்ய
மக்களிடம் எதிரலை சீறத் துவங்கிவிடும்
உறவு முறைகள் தமிழ் நாட்டில் களங்கப்பட்டு விட்டன...
சின்னம்மாவுக்குக் கடன் பட்டவர்கள் அவர் பின் போகலாம் ஆனால் தேர்தல் என்று ஒன்று வந்தால் மக்களை அல்லவா சந்திக்க வேண்டும்
G.M Balasubramaniam //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
பதவியில் உள்ளவர்கள்
இதைச் சிந்திக்கவேண்டும்
KILLERGEE Devakottai said...//
உறவு முறைகள் தமிழ் நாட்டில் களங்கப்பட்டு விட்டன...//
உறவு முறைகள் சரியாகத்தான்
இருக்கின்றன
நீங்கள் சொல்வதுபோல
அரசியல்வாதிகள்தான்
அதை களங்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள்
அருமையான பகிர்வு
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
மிகவும் சரியே...வெற்றிக்கு வழியில்லை! மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுவே!
முந்தைய இதன் தொடர்பான கலைஞர் பாணி சின்னம்மாவையும் வாசித்துவிட்டோம் நண்பரே! சரியாகச் சொல்லி வருகிறீர்கள்.
Post a Comment