Monday, December 5, 2016

சென்று வா எங்கள் அன்புச் சகோதரி

மகம் ஜெகம் ஆளும் என்னும்  
ஆன்றோரின் வாக்கினுக்கு
ஒரு நிரூபனமாய் விளங்கிய
அற்புதமே அதிசயமே

படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்செமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி

19 comments:

Unknown said...

மீண்டும் எங்கோ நீ பிறந்து விட்டாய்.
புலவர் வாக்கு ஒருபொழுதும் பொய்க்காது.

Unknown said...

Nanba un pulamai vaalga

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வோம்

Thulasidharan V Thillaiakathu said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

Murugeswari Rajavel said...

அம்மா குறித்து அழகாய்ச் சாெ ல்லி விட்டீர்கள் சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

போராட்டங்களே வாழ்க்கையையாய்க் கொண்டு வாழ்ந்தார்.சாதனைப் பெண்மணியின் மரணம் தமிழகப் பெண்மணிகளுக்கு பேரிழப்பு

Anonymous said...

She is an one woman army who led AIADMK single handedly
and thwarted the attempts of a mega family from ruling Tamilnadu. Many welfare schemes started by her gave her continous victories by the poor people of Tamilnadu who treated her as their own mother.

கோமதி அரசு said...

ஆழ்ந்த இரங்கல்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழக அரசியலில் இவருக்கு எதிராக ஆயிரம் பிரச்சனைகளும், அச்சுறுத்தல்களும், சோதனைகளும், வேதனைகளும் வந்திருப்பினும், ஓர் மிகச்சிறந்த தைர்யமுள்ள பெண் சிங்கமாகத் திகழ்ந்து, ஆணித்தரமான முடிவுகள் எடுத்து, அவற்றிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல், எதிரிகள் அனைவருக்குமே ஓர் கிலியாக விளங்கிய அற்புதமான பிறவி என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

அவரின் இந்த திடீர் மறைவு, இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும், இங்கு வாழும் ஏழை எளிய மக்களுக்கும், அவருடைய கட்சிக்கும் ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.

மேலும் மேலும் சிகிச்சை என்ற பெயரில் சித்திரவதை பட்டுக்கொண்டே இருக்காமல் இறைவன் திருவடிகளை அடைந்து விட்டார்கள்.

அவரைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள இந்தக் கவிதை பொருத்தமாக உள்ளது.

எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

Below msg is from Ms.Lavanya, DSP Chennai. Kindly spread the word and support if possible for our uniformed service personnel! Show solidarity!

"Plz gv
Food ,
water
and if possible using restroom fr police near ur house.. biggest challenge for them now is all three.
No shops open for them fr all these"

G.M Balasubramaniam said...

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எங்கள் உக்கும் அந்த எண்ணம் எழுந்தது இத்தனை காவல் துறையினருக்கும் நீர் வேண்டுமானால் எங்கே போவார்கள் நல்லவர்கள் எப்க்கும் இருப்பார்கள் என ஆறுதல் படுத்திக் கொண்டோம்

G.M Balasubramaniam said...

தட்டச்சுப் பிழைகள் பொறுத்தருளவும்

Avargal Unmaigal said...


இரங்கல் கவிதையை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள்

Unknown said...

நான்அரசுபணியில்இருந்ததால்அவரின் நிர்வாக வல்லமையை உணரந்து வியந்துள்ளேன்.இழப்பைஈடுசெய்ய இயலாது.அவரேமீண்டும்பிறந்துவந்துநாளைய தலைமுறைக்குதலைமைதாங்கி நல்லாட்சிபுரிந்துதமிழினம் காக்கட்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அழகான ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட இரங்கல்
கவிதை. ஒரு தைரியமான பெண்மணியை இழந்து வாடும் இந்த நாட்டுக்கு தாங்கள் கூறியது போல் நடந்தால், நன்றாகவிருக்கும.

மறைந்த அவருக்கு ஏன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

srikanth said...

Well said sir.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இரும்புப்பெண்மணியைப் போற்றியவிதம் அருமை.

அது ஒரு கனாக் காலம் said...

உண்மையான வரிகள், அர்த்தமுள்ள வார்த்தைகள். சென்ற வருடம் , எல்லா மாவட்டங்களிலும் , தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் தங்கி படிப்பதற்கு , ஹாஸ்டெல் திறப்பு விழா நடந்தது ...அருமையான கட்டமைப்புடன் , நல்ல டைல்ஸ் , சமயல் அறை , மின் விசிறி , மின் விளக்கு , ஒரு 25 அல்லது 30 குழந்தைகள் தங்கி படிக்க முடியும். இது ஒரு பெரிய புரட்சி என நம்புகிறேன் , இன்னும் சில வருடங்களில் , அங்கிருந்து நிச்சயமாக சில IAS மற்றும் IPS வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான இரங்கற்பா.....

ஆழ்ந்த இரங்கல்கள்....

Post a Comment