Saturday, January 21, 2017

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு தென்றால்

சந்தாக் கட்டி சண்டை போடும்
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு

சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு

சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்

ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே

ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி

கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி

வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்

நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே

உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை

உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து  நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்

உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்

( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி ஐயா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உலக அரிமா இயக்கத்திற்கும், அதிலுள்ள உங்களைப்போன்ற உண்மை அரிமாக்களுக்கும் நூற்றாண்டு நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அரிமாசங்கம் மேலும் பல சேவைகள் ஆற்றிட தழைத்து ஓங்கிட வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் ஜி...

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன், கவிதையை. வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

திருச்சியில் இருந்தபோது என் மனைவிஅரிமாசங்கச் செயலாளராக இருந்தார் மெம்பர்கள் தங்கள் பிசினெசுக்கு இக்கூடலை உபயோகிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தொண்டும் தோழமையும் தான்
இதன் தாரக மந்திரம்
சிலர் நீங்கள் சொல்வது போல
தோழமையை பிஸினசுக்கும்
பயன்படுத்திக் கொள்வதுண்டு

Post a Comment