மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்
பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..
மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிறத் திமிறத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய்ப் படர்கின்றன
தலைமுறையைத் தாண்டியும்
நிழலாய்த் தொடர்கின்றன
பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல
நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிறத் திமிற த் திணிக்கப்பட்டவையே
எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது
இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்
கற்றுக் கொள்வோம்
பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..
மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிறத் திமிறத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய்ப் படர்கின்றன
தலைமுறையைத் தாண்டியும்
நிழலாய்த் தொடர்கின்றன
பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல
நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிறத் திமிற த் திணிக்கப்பட்டவையே
எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது
இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்
8 comments:
இதை கூடிய வரை என்பதிவுகளில் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறேன்
உண்மைதான் ஐயா
மீண்டும் மீண்டும் கூறக் கூறி நம்இரத்தத்திலேயே ஊற வைத்துவிட்டார்கள்
நாம்தான் வெல்லக்கற்றுக் கொள்ள வேண்டும்
அருமை
நன்றி
தம 1
சொல் புத்தி ஒன்று...
சுய புத்தி ஒன்று...
எது வெல்லும்...?
எது வெல்ல வேண்டும்...?
நல்ல விஷயம்தான். நடைமுறையில் சாத்தியமாக வேண்டும்.
கருத்தான கவிதை
"இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்" என்பதை
வரவேற்கிறேன்!
அருமையான பதிவு
அருமையான கருத்து!!! ஆம் மீண்டும்மீண்டும் சொல்லப்படும் போது உண்மையாகிவிடுவதால் அதையே நம்பி திணித்தும் விடுகின்றனர்தான். சுயசிந்தனையால் இவற்றை எல்லாம் மீறி வர வேண்டும்!
நல்லதோர் கவிதை.
Post a Comment