Saturday, February 11, 2017

பன்னீரா...கழிவு நீரா

வழக்கம்போல்
குழம்பி இருக்கிற குட்டையை
மீன் பிடிக்கத் தெரியாதவர்கள்தான்
மீன் பிடிக்க முடியாதவர்கள்தான்
அதிகம்  குழப்புகிறார்கள்

பந்திக்கே அழைக்கப்படாதவர்கள்தான்
இலைப்பீத்தல் என்று
அதிகம் அங்களாய்க்கிறார்கள்

நாம் தெளிவாய் இருப்போம்

இன்றைய நிலையில்
பூதாகாரமான
கேள்விக்கான பதில்
இரண்டில் ஒன்றுதானே ஒழிய

இரண்டும் அல்லது
இரண்டுமல்ல
என்பதல்ல

இரண்டில்
நிச்சயம் வேண்டாதது எது
சகித்துத் தொலைக்கவேண்டியது
என்பதுதானே ஒழிய

இரண்டையும்
ஒழிப்பதல்ல
இரண்டையும் ஆதரிப்பதுமில்லை

மூன்றாவது
இரண்டில் ஒன்றை
சில காலம் ஆதரிப்பதன் மூலம்

முதலாவதாக
நிச்சயம் வாய்ப்புண்டு

அதற்கும் தேவை
பொறுமையும்
அரசியல் சாதுர்யமுமே

பார்ப்போம் .....

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய நிலைமையில் நியாயமான ஆதங்கமே.

பொதுமக்களாலும், தொண்டர்களாலும் வேறு எதுவும் உடனடியாக செய்வதற்கு இல்லையே.

பொறுத்துப் பார்க்க வேண்டியது ஒன்றே இப்போதைக்கான ஒரே வழி.

அன்பே சிவம் said...

பொறுத்தார் புவி ஆள்வார். பொங்கியவர்.

?

KILLERGEE Devakottai said...

பார்ப்போம் ???

G.M Balasubramaniam said...

அப்படித்தான் நடக்கும் போல் இருக்கிறது

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனையளிக்கும் நிகழ்வுகள்

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனையளிக்கும் நிகழ்வுகள்

Thulasidharan V Thillaiakathu said...

பார்ப்போம் வேதனையான நிகழ்வுகள்...

Bhanumathy Venkateswaran said...

தமிழகத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

இன்னும் என்னன்ன நடக்கப் போகிறதோ... பார்க்கலாம்!

Post a Comment