Saturday, February 18, 2017

முதல் குற்றவாளி சமாதி ஆகிப்போக .....

முதல் குற்றவாளி
சமாதி  ஆகிப்போக

இரண்டாம் குற்றவாளி
மற்றும்
மூன்றாம் நான்காம்
குற்றவாளிகள்
சிறைக்கைதிகளாக

அவர்களையே

ஆசிர்வதிப்பவர்களாக
வழிகாட்டிகளாக
காட்டிக் கொள்பவர்கள்
எவ்வித குற்ற உணர்வுமற்று
ஆள்பவர்களாக

அவர்களை
கண்மூடித்தனாமாய்
ஆதரிப்பதே கடமையெனக்
கொண்டவர்களே
மக்கள் பிரதிநிதிகளாக

தன் முட்டையை
விழுங்கும்
நாகம் கண்டும்
கையறு நிலையில்
கதறித் திரியும்
காகங்களாய்
பொது ஜனங்களாக

மல மேட்டிலமர்ந்து
அறுசுவை உணவருந்தும்
நிலை வந்தததுபோல்
இங்கு வாழநேர்ந்ததுக் குறித்து
மனம் வெறுத்துப்  போக

சாக்கடையை
அரசியலுடன் ஒப்பிடுவது கூட
சாக்கடையை இழிவுபடுத்தும் ஒப்பீடு
என்பது நிதர்சனமாகிப் போக

தர்மம் தன்னை
சூது கவ்வும்
பின் மெல்ல மெல்ல
கடித்து விழுங்கும் என்னும்
புது மொழி  இங்கு நிஜமாகிப் போக..

தமிழகம் மட்டுமே
இப்போது
தலைகவிழ்ந்த நிலையில்.....

என்ன செய்யப் போகிறோம் ?

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன்......

V Mawley said...



தங்களுடைய தார்மிக க்கோபத்தை நன்கு உணர முடிகிறது ..கனல் பறக்கிறது ..நாம் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை ..

மாலி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மறுக்க இயலாத உண்மைகள்

சிகரம் பாரதி said...

அரசியல் தலைவர்கள் மக்களை மறந்து செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் ஒரு மெரீனா புரட்சி மட்டுமே தீர்வு. https://www.sigaram.co

வைசாலி செல்வம் said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஐயா ..விதைத்தவன் யாருமில்லை நாம்தான் அதை தான் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்..

அன்பே சிவம் said...

உடனடி தேவை ஓர் முற்று புள்ளி..

இராய செல்லப்பா said...

கள்ளப்பணம் என்னும் ஆக்டோபஸ் பிடியில் அரசியல்வாதிகள் மயங்கிக்கிடக்கின்றபோது, பதவியிறக்கம் ஒன்றுதான் அவர்களுக்கு மீண்டும் தெளிவூட்டும் மருந்து.ஆனால் இன்னும் நாலரை ஆண்டுகள் இருக்கிறதாமே!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Anonymous said...

நம்பிக்கை வைப்போம்! எதற்கும் ஒரு முடிவுண்டு! வெகுவிரைவில் மாற்றம் வரும்!நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது! அதிகாரம் போதை தரும்! மறைமுகமாக இருந்த அதிகாரம் நேரடியாகவே கைக்கு வந்து விட்டது! எடைப்பாடி மாற்றப்பட்டு தினகரன் முதல்வர் நாற்காலியில் உட்காரும்போது நிலைமை உச்சகட்டத்துக்குப்போய் பின் முடிவுக்குவரும்!(அதுவரை வேறு மாற்றம் வராமல் இருந்தால்)

Post a Comment