Sunday, February 5, 2017

எழுதிக் கொண்டே இருப்போம்

எழுதிக் கொண்டே இருப்போம்--நாம்
எழுதிக் கொண்டே இருப்போம்

வலிமை கொண்டு அதர்மம்-இங்கு
எளிதாய் வெல்லும் சூழல்
அழிவு காணும் வரையில்--முழுதாய்
அடங்கி ஒடுங்கும் வகையில்      (எழுதிக் )

எளிமை தூய்மை  எல்லாம் _இங்கு
ஏற்றம் கொள்ளும் சூழல்
நிலையாய் ஆகும் வரையில்-என்றும்
நிலைத்து வாழும் வகையில்     (எழுதிக் )

பொய்மைப் போலி எல்லாம்--இங்குத்
தலைமை ஏற்கும் சூழல்
நைந்து போகும் வரையில்-முழுதாய்த்
தொலைந்துச் சாகும் வகையில்   (எழுதிக் )

உண்மை நேர்மை எல்லாம்--இயல்பாய்
ஏற்றம் கொள்ளும் சூழல்
திண்மை கொள்ளும் வரையில்--நல்லோர்
துணிவு கொள்ளும் வகையில்    (எழுதிக் )


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அனைவருக்கும்...!

கோமதி அரசு said...

திண்டுக்கல் தனபாலன் சொல்வதை நான் வழி மொழிகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பொய்மைப் போலி எல்லாம்--இங்குத்
தலைமை ஏற்கும் சூழல்
நைந்து போகும் வரையில்-முழுதாய்த்
தொலைந்துச் சாகும் வகையில்

எழுதிக் கொண்டே இருப்போம்--நாம்
எழுதிக் கொண்டே இருப்போம்//

காலத்துக்கு ஏற்ற மிக அருமையான ஆக்கம்.

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்தும் ஒரு ஆயுதம்தானே
அருமை ஐயா

ராமலக்ஷ்மி said...

எழுத்தினால் ஏற்படட்டும் மாற்றங்களும் ஏற்றங்களும்.

G.M Balasubramaniam said...

அந்தக்காலம் வருமா / என்றும் எழுதிக் கொண்டுதான் இருக்க வேண்டும் எழுத்தின் பலன் இல்லாமல்

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் எழுதிக் கொண்டே இருப்போம்....மாற்றங்கள் வரும் என்று நம்பி ..எழுதிக் கொண்டே இருப்போம்..

Post a Comment