Saturday, May 27, 2017

பதிவர்கள் ஊடக எழுத்தாளரினும்....

அன்றாட நிகழ்வுகளைத் தான்
பதிவு செய்து போகிறோம்
 எனினும்
பதிவெழுத்தினை
நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை

 ஆயினும்
நிகழ்வுகளின்சாரத்தை,
அதன் உள்ளார்ந்த காரணத்தைக்
குறிப்பாகப் பதிந்து போவதால்

அது நாட்குறிப்பினும்
அதிகம்  மேம்பட்டதே     

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை

ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை

ஆயினும்
அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்

பதிவர்களின் படைப்புகள்
கவித்துவத்தில்
அதனினும்அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை

ஏனெனில்
ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை

ஆயினும்
 சுயக் கட்டுப்பாடும்ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்

பதிவர்களின் ஆக்கங்கள்
வேறு ஊடகத்தினும் நிச்சயம்  உயர்வானதே

பதிவர்கள்
 ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை

ஆயினும்
போட்டிப் பொறாமையின்றி
ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்

பதிவர்கள் வேறு  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

15 comments:

K. ASOKAN said...

அருமையான வரிகள்

Yarlpavanan said...

இந்த மணித்துளி வரை
வலைப்பூவைத் திறம்பட நடாத்தும்
வலைப்பதிவர்கள் எல்லோரும்
ஊடக எழுத்தாளர்களை விட
சற்று உயர்வானவர்களே!

Unknown said...

அவர்களில், காசுக்காக சோரம் போகிறவர்களும் இருக்கிறார்கள் ,நம்மாளுங்க அப்படியா :)

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் மாயக் கண்ணாடி வலைப்பதிவர் உலகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த ஆக்கம் வலைப்பதிவர்களுக்குத் தரும் ஊக்கம் + உற்சாக டானிக்கும் ஆகும்.

சோர்ந்திருக்கும் சில பதிவர்களுக்கு, ஹிதமான ஒத்தடம் கொடுத்துள்ள தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

கோமதி அரசு said...

அருமையாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

பதிவர்கள் உள்ளத்தால் உயர்வானவர்களே.... உண்மை.

சென்னை பித்தன் said...

அருமை
நான் எழுதுவது கவுஜ!

Angel said...

மிக்க நன்றி அண்ணா :) மிகவும் அருமையான உண்மையான விளக்கம் பதிவர்களுக்கு ..அதனால்தான் முகப்புத்தகத்தை ஒரு நொடியில் விலக்கி விட்டு மீண்டும் பதிவுலகம் வந்துவிட்டேன்

தலை மறைவான அதிரா said...

///ஆயினும்
போட்டிப் பொறாமையின்றி
ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
///

மிகவும் உண்மையான வரிகள். வலையுலகில் எனக்குப் பிடிச்சதே இந்த விசயம்தான், முக்கியமாக எல்லோரும் ஒரு வீட்டு உறவுகள்.. தனிக்குடித்தனத்தில் இருப்பது போலவும் அப்பப்ப ஒவ்வொரு வீட்டுக்கும் போய் நலம் விசாரித்து ரீ குடித்து வருவது போலவும் ஒரு ஃபீலிங் எப்பவும் எனக்கிருக்கும்.

இப்படியான இந்த நல்ல உறவும், மனப்பான்மையும் எப்பவும் நீடிக்க வேண்டும் எல்லோருக்கும் என கடவுளை வேண்டுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை ஐயா...

G.M Balasubramaniam said...

பதிவர்கள் தங்களைத் தாங்களே தட்டிக்கொள்வதுதவறு இல்லை

மனோ சாமிநாதன் said...

அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா
உண்மை

Thulasidharan V Thillaiakathu said...

அத்தனையும் நூறு சதவிகிதத்தினும் அதிகமான....உண்மை....

...துளசி, கீதா

Post a Comment