Monday, May 8, 2017

ரூபத்தை அரூபம் வெல்லும் அதிசயத் திருநாள்...


உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து ஓய்ந்து
அலுத்த இதயம்
இயலாது தன் நுனியை
மருத்துவரிடம் சேர்க்க
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்குக்  கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் எளிதாய் வெல்லும்
அதிசயத் திருநாள்தான்
நமது  இறுதி நாளா ?

8 comments:

பிலஹரி:) ) அதிரா said...

உண்மைதான்...ரெயின் ஓடிக்கொண்டே இருக்கிறது, நமக்குரிய ஸ்டேசன் வந்ததும் இறங்கும் நாள்தான் கடேசி நாள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சொல்லிய ஒவ்வாரு வரியிலும் ஒவ்வொரு தத்துவம் நிறைந்துள்ளது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பட்டினத்தார் பாடலைப் படித்ததுபோல இருந்தது.

Unknown said...

மெய் என்று மேனியை யார் சொன்னது ,ரூபம் அரூபம் தத்துவமென்று நம்ம ரூபனே சொல்லிட்டாரே :(

இராய செல்லப்பா said...

தத்துவக்கவியாக மாறிட வேண்டும் என்னும் அவா தெரிகிறது ஐயா!

-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

சென்னை பித்தன் said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான தத்துவம்!!!

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா.... நினைவுக்கு வந்தது.

Post a Comment