Tuesday, February 20, 2018

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
நல்ல மனிதர்களாய் இருந்தோம்

எம் நல்வாழ்வு  குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள்  உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
அன்று உண்மையாய் இருந்தது

அதனாலேயே 
உ ங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்தும் இருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
துண்டு விரித்துக் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

4 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கடைசியாக சொன்ன உதாரணம் இருக்கிறதே அடடா! இதைவிட நாசுக்காகவும் நறுக்காகவும் சொல்லவே முடியாது.

சுபா ரவீந்திரன் said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்ம். ஸ்ரீராம் சொல்வது போல அபுரி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பழக்க தோஷம். முன்னர் நான் கேட்டுள்ள செய்திதான். இருந்தாலும் கூறியவிதம் அருமை.

Post a Comment