உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்
உடல் மீது
கவனம் கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய்
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்
நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக் காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்
'எதிரிலிருக்கும் கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல் அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு
"உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன
திரு மூலரின் வாக்கினைப்
புரிந்த நமக்கு
"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்
உடல் மீது
கவனம் கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய்
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்
நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக் காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்
'எதிரிலிருக்கும் கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல் அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு
"உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன
திரு மூலரின் வாக்கினைப்
புரிந்த நமக்கு
"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?
18 comments:
வணக்கம் சகோதரரே
/சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?/
இதுதான் இன்றைய வாழ்வுக்கு அவசியமான மூலமந்திரம். சுற்றுப்புறச் சூழல் காத்தல்தான், இன்றைய அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டிய கவிதை. அருமையான விளக்கங்கள். விளக்கிய வரிகளை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
வணக்கம்
ஐயா
மிக அற்புதமாக உவமையுடன் விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
’சுற்றுப்புற சூழல் காத்தல்’ பற்றிய
கத்தலும்,
கதறலும்,
விளம்பரங்களும்
அதிகரித்துள்ள அளவுக்கு,
நம் மக்களிடையே
விழிப்புணர்வுகள்
அதிகரித்ததாகத்
தெரியவில்லை.
தங்களின் இந்த ஆக்கத்தின்
தாக்கத்தின் மூலமாவது
அந்த ’மூலமந்திரம்’
அனைவருக்கும்
விளங்கினால் நலமே !
அழகான ஒப்புமை மிகவும் ரசித்தேன்.
அருமை... மிகவும் அருமை ஐயா...
"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?//
அருமையான கவிதை.
அருமை.
கோமதி அரசு//தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன்// மிக்க நன்றி
KILLERGEE Devakottai//வரவுக்கும் பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கள்
மூல மந்திரத்தை உபதேசித்தமைக்கு வணக்கங்கள் குருவே! இனி, சற்றே அதிக அக்கறையுடன் சூழலை எதிர்கொள்வோம்!
-இராய செல்லப்பா சென்னை
மிக அருமை ஐயா...ரசித்தேன்
சுற்றுச்சூழல் காப்போம்.
Kamala Hariharan //.இதுதான் இன்றைய வாழ்வுக்கு அவசியமான மூலமந்திரம். சுற்றுப்புறச் சூழல் காத்தல்தான், இன்றைய அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டிய கவிதை. அருமையான விளக்கங்கள். விளக்கிய வரிகளை மிகவும் ரசித்தேன்.
உடன் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
விரிவான அருமையான பின்னூட்டட்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கவிஞர்.த.ரூபன் //
வரவுக்கும் பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்களின் இந்த ஆக்கத்தின்
தாக்கத்தின் மூலமாவது
அந்த ’மூலமந்திரம்’
அனைவருக்கும்
விளங்கினால் நலமே !
நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது கூட
தங்களின் விடாத உற்சாகமூட்டும்
பின்னூட்டங்களால்தான் என்றால் அது
மிகையில்லை
நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்
அருமை. நமது சூழலின் அருமையை நாம் உணர வேண்டும். சூழலைப் பாதுகாத்து நமது வரும் தலைமுறைகளுக்கு கையளிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்
சுற்றுப்புறச் சூழல் கவிதை வெகு அருமை.
Post a Comment