உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்
உடல் மீது
கவனம் கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய்
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்
நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக் காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்
'எதிரிலிருக்கும் கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல் அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு
"உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன
திரு மூலரின் வாக்கினைப்
புரிந்த நமக்கு
"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்
உடல் மீது
கவனம் கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய்
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்
நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக் காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்
'எதிரிலிருக்கும் கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல் அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு
"உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன
திரு மூலரின் வாக்கினைப்
புரிந்த நமக்கு
"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர் காக்கும்
மூல மந்திரம் "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?
