Tuesday, March 17, 2020

கொரோனாவின் மறுபக்கம்...

சிந்திக்கக் கிடைத்த சிறிது நேரத்திலும் ஐ.நா வின் செயல்பாடுகள் குறித்தும் அட்லாண்டிக் பெருங்கடலின் சுற்றுச் சூழல் குறித்தும் கவலைப்பட்டு நொந்து கொண்டிருந்த நான்...........                                                                                                        இப்போது கிடைத்த கூடுதல் ஓய்வு நேரத்தில் அண்டை வீட்டுக் காரனைக் குறித்தும் அவன் நலனிலேயே என் நலனும் பின்னிப் பிணைந்துகிடப்பது குறித்தும் முதன் முதலாய் யோசிக்கிறேன் .. .......                                                                                விடுமுறை என்றாலே பயணப்படுதலும்  ஏதேனும் பொது நிகழ்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதலே  சிறப்பு எனும் எண்ணம் கொண்டிருந்த நான் ........                                                                                      இப்போது வீட்டில் இருக்க வேண்டி வந்த நேரத்தில் கவனிப்பின்றி இருக்கிற கப்போர்ட்  அடைசல் குறித்தும் பலகாலம் துப்புரவு செய்யப்படாது குப்பைக்கிடங்காய் இருக்கிற மொட்டை மாடியைக் கவனிக்கிறேன்...                                                                                                                  மொத்தத்தில் எண்ணத்தால் இமயம் அசைத்து பெருமிதம் கொண்டது எவ்வளவு அபத்தமானது..                                                                                                                                  ஒருசிறு செயலால் துரும்பசைப்பது கூட எத்தனை நிஜமானது என அறிய வேதனை கொள்கிறேன்..                                                                                                                                        இந்த அற்ப ஞானத்திற்குக் கூட கொடிய கொரோனா வேண்டியதானதை எண்ண எண்ண வரும் குற்ற உணர்வைத்தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொரோனா பல உண்மைகளையும் உணர வைக்கிறது...

G.M Balasubramaniam said...

கொரோனா சிந்திப்பதை மழுங்கடித்து விட்டதோ

Yaathoramani.blogspot.com said...

இல்லை..தேவையானதை ஆகக் கூடியதை சிந்திக்க வைக்கிறது எனவும் கொள்ளலாம்..

Yaathoramani.blogspot.com said...

ஆம் பறப்பதை விடுத்து அருகில் இருப்பதை அவசியமானவற்றை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கற்பனையுலகில் நாம் பலவற்றை மிகச் சுலபமாக சாதித்துக் காட்டலாம்.

ஆனால் நிஜத்தில் வீட்டில் ஓர் ஜன்னலையோ, ஓர் ஷோ கேஸையோ, சுத்தம் செய்வது என்பது மஹா மஹா கஷ்டமாகும். கொரானாவே தேவலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். :)

Yaathoramani.blogspot.com said...

ஆம் கொஞ்சம் சங்கோசப்படாமல் நேரடியாகவே சொல்வதென்றால்..பாத்திரம் விளக்குவதை விட ஒரு பதிவு எழுதுவது மிக மிகச் சுலபமாகத்தான் இருக்கிறது..

ஸ்ரீமலையப்பன் said...

ஆபத்து வரும் முன் தற்காத்துக் கொள்வதெல்லாம் தாத்தா காலத்திலேயே முடிந்துவிட்டது

ஸ்ரீராம். said...

ஆபத்து நீங்கியபின் எண்ணம் மாறிவிடவும் வாய்ப்பு உண்டு!

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது கொரோனாவின் மறுபக்கம்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

Yarlpavanan said...

சிந்திக்கச் சில வரிகள்
அருமையாக இருக்கிறது

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பு. வருமுன் காப்போம் என்பதை நினைவில் கொள்வோம்.

Post a Comment