Monday, March 2, 2020

ஊருக்கு உபதேசம்

அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் என்னைப்போல்                        புரிந்து தொலைக்கப் போகிறான்


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...? (!)

G.M Balasubramaniam said...

உபதேசம் பிறருக்கானால் சரி

G.M Balasubramaniam said...

உபதேசம் பிறருக்கானால் சரி

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ஊருக்குத்தானே உபதேசம்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கோபத்தின் தன்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள்.எப்போதுமே எதையும் தான் கடைப் பிடிப்பதை தவிர்த்து பிறருக்கு உபதேசம் செய்வது எளிது. பதிவு அருமை. ரசித்தேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

கோபம் கொடிய நோய்
சினத்தை சினத்தால் தவிர்க்க முடியுமோ!

வெங்கட் நாகராஜ் said...

கோபம் கொடியது. எதிர்விளைவுகளை தரக் கூடியது. ஆனால் பலருக்கும் புரிவதில்லை.

Post a Comment