Saturday, March 7, 2020

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமயலறையிலும் படுக்கையறையிலும்
சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகம்  என்று                                      புரிந்து  கொள்ளப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப்பெறுவோம்  ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை மாறாக
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

இந்நாள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு மீண்டும்
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல... கூர்படுத்திக் கொள்ளும் நாள்.

சரியாகச் சொன்னீர்கள்.

இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளிலும் பெண்மை போற்றுவோம்...

சிகரம் பாரதி said...

உண்மை. இன்றைய நிதர்சனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன தங்கள் வரிகள்...

வலைத் திரட்டியின் புதிய புரட்சி: வலை ஓலை .
நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

G.M Balasubramaniam said...

பெண்களே ஒரு சில எக்செப்ஷன்ஸ் தவிர தங்களை தாழ்வாகநினைக்காதவரை பெண்களை ஒருபோக்சப்பொருளகவே கருதப் படுவார்கள்

ஸ்ரீராம். said...

போகப் பொருளாக நினைக்காமல் சக மனுஷியாய் மரியாதை கொடுக்கும் நாள் வருமா?

Post a Comment