Wednesday, September 29, 2021

டாங்க்ஸ் அண்ணே...

அண்ணே அண்ணே இரண்டு கையிலேயும்

வாட்ச் கட்டிக்கிட்டு போறாரே அவ்ரு யாருண்ணே


அவர் தாண்டா நம்ம ஊருக்கு புதிசா

வந்திருக்கிற வாத்தியாரு


ஏண்ணே ரெண்டு வாட்சு கட்டி இருக்காரு


புரோட்டத் தலையா அவருக்கு வசதி இருக்கு

கட்டிக்கிறாரு..இதில உனக்கு என்ன பிரச்சனை


அது இல்ல அண்ணே  காசு இருக்குண்ணா

தலைக்கு ரெண்டு தொப்பியும்

காலுக்கு நாலு செருப்பும் போடுவாங்களாஅண்ணே


வாத்தியாருண்ணா தெளிவாத்தான் இருப்பாங்க அண்ணே

காரணம் இல்லாம கட்டமாட்டாங்க அண்ணே 

காரணன் தெரிஞ்சிக்கிட்டா..நானும் கூட

கட்டிக்கலாம்னுதான்னே கேட்கறேன். அண்ணே

 .

ஓ நீ அப்படி வாரையா...


இவருக்கு இங்கே ,மட்டுமில்லை 

அமெரிக்காவுலயேயும். உறவுக்காரங்க இருக்காங்க

அந்த நேரத்தையும் தெரிஞ்சிக்கத்தான் கட்டி இருக்காரு

விளங்கிச்சாடா மாங்கா மடையா..


அப்படி இருக்காதுண்ணே.அடுத்த தெருவில

கை நாட்டு கந்த சாமி மகன் கூட அமெரிக்காவுலதானே

இருக்கான்..அவன் வாட்சே கட்றது இல்லை அண்ணே..

ஆனா கரெக்டா அந்த ஊர் டயத்தை 

சொல்லிப் புடுவாருண்ணே..

வேற ஏதாச்சும் காரணம் இருக்கும்ண்ணே


சரி விடு.. ஒன் வழிக்கே வாரேன்,

அவரு எப்படி அந்த ஊரு டயத்தை

சரியாய் சொல்றாரு...


அப்படி வாங்கண்ணே.. அவரு ஈஸியா

ஒரு வழி வச்சுருக்காருண்ணே..

இங்கே பகல்னா அங்க ராத்திரி

அங்கே ராத்திருன்னே இங்கே பகலு


என் கிட்டே டயத்தை கேப்பாருண்ணே

அப்படியே நம்ம் நேரத்தோட இரண்டு மணியை

கூட்டுவாருண்ணே...அம்புட்டுத்தான் அண்ணே


அட பிஸ்கோத் வாயா... நானும் நீயும் இப்படி

ரோட்லேயும் வெய்யிலிலேயும் அலையுரோம்

பகல் ராவு தெரியுது..அவுக எல்லாம்

ஏ.சிக்குள்ளேயே புழங்குறாவங்க

அப்படி  உள்ளேயே இருந்தா பகல் ராவு

எல்லாம் ஒண்ணாத்தான் தெரியும்

அப்புறம் எப்படி பொழுது தெரியும்


இப்படி அப்படின்னு மாத்தி கணக்குப் பண்ண முடியும்

நீ காசியைக் கண்டியா ஏ .சியைக் கண்டியா

தெரிஞ்சாத்தான் அவக கஸ்டம் உனக்குப் புரியும்


ஆமாண்ணே நீ சொல்றது  சரிதாண்ணே

நான் நீங்க சொல்ற மாதிரி மடையன் தாண்ணே

இல்லாட்டி இதை தெரிஞ்சுக்காம இருப்பேனா..


ஆனா இன்னொரு சின்ன சந்தேகம்ண்ணே


இரண்டு வாட்ச்சுல எது நம்ம வூருது

எது அவுக வூருது எப்படீண்ணே கண்டு பிடிப்பாங்க


அட முட்டாப்பயலே வலது கை நம்ம ஊரு

இடது கை அவக ஊருண்ணு வச்சுக்கிருவாங்கடா

இதுக்கு மேலே எதுவும் கேட்டே தொலைச்சுப்புடுவேன்

ஆமா...


அண்ணே அண்ணே கோவுச்சுக்காத அண்ணே

தெரியாமத்தானே கேக்றேன்.

பகல் ராவே தெரிஞ்சுக்க முடியாதவங்க

எப்படிண்ணே வலது இடது ஞாபகம் வச்சுக்க முடியும்

அந்த டவுட்டுதான் அண்ணே கேக்கறேன்


இதுக்கு எனக்கே  வழி தெரியும்

அவங்களுக்கு தெரியாதா....


எப்படி அண்ணே எப்படி அண்ணே

எனக்கும் சொல்லிக் கொடுங்க அண்ணே


எதுக்க வாடா எள்ளு மூக்கா

இப்ப  இப்படி எனக்கு எதுக்க  நின்னுக்கிட்டா

உன் வலது கை எது


இது அண்ணே


உம். இதுக்கு நேரே இருக்கிறது  என் எடது கை


இப்ப உன் இடது கை எது


இது அண்ணே


உம் இதுக்கு நேர இருக்கிறது

என் வலது கை... புரிஞ்சுதா.....


அருமையாச் சொன்னீங்க அண்ணே

உங்களுக்கே  இவ்வளவு தெரிஞ்சா

வாத்தியாருக்கு எவ்வளவு தெரியும்

தெரியாமலா ரெண்டு வாட்சு கட்றாங்க


கட்டட்டும் கட்டட்டும் நல்லா கட்டட்டும்

ரொம்ப கஷ்டமானதை ஈஸியா

புரிய வச்சதுக்கு ரொம்ப 

டாங்க்ஸ் அண்ணே

7 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல நகைச்சுவை பதிவு. மிக அருமையாக ரசித்து எழுதியுள்ளீர்கள். நானும் ரசித்துப் படித்தேன்.

/கட்டட்டும் கட்டட்டும் நல்லா கட்டட்டும்

ரொம்ப கஷ்டமானதை ஈஸியா

புரிய வச்சதுக்கு ரொம்ப

டாங்க்ஸ் அண்ணே/

நன்றாக புரிந்து கொண்டதற்கு அவருக்கும் நன்றி. ஹா.ஹா.

/எதுக்க வாடா எள்ளு மூக்கா/

வாய் விட்டு சிரித்தேன். இந்த அண்ணன், தம்பி சகோதரர்கள் கில்லர்ஜி அவர்களின் பதிவையும் நினைவூட்டிச் சென்றார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

சரியாகச் சொன்னீர்கள்..கில்லர்ஜி போல ஒன்று எழுதிப் பார்ப்போமே என முயற்சித்ததுதான் எழுதியது..நீங்கள் குறிப்பிட்டதும் மிக மகிழ்ந்தேன்..

ஸ்ரீராம். said...

DWD பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது! ரசிக்க வைத்தது.

Yaathoramani.blogspot.com said...

டபுள் வாட்ச் தாமோதரனை நினைவூட்டினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல...வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னுரைக்கும் வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

ட்விட்டர், மீம்ஸ்களில் தாமோதரன் என்று அல்ல, டக்ளஸ் என்று அறியப்படுவார்!!!

KILLERGEE Devakottai said...

ஹா.. ஹா.. இரசித்து சிரித்தேன் கவிஞரே...

Bhanumathy Venkateswaran said...

கில்லர்ஜி பதிவு என்று நினைத்து விட்டேன்.

Post a Comment