Thursday, September 9, 2021

இருப்பதைக் கொண்டுத் தொழுவோம் வேண்டுவன எல்லாம் பெறுவோம்

 எந்த மதக் கடவுளாயினும்

இப்படித்தான் இருக்கவேண்டும் என

ஒரு நியதி உண்டு


இராமன் என்றால்

வில்லேந்தியபடி....


கண்ணன் என்றால்

குழலேந்தியபடி..


ஏசு என்றால்

சிலுவையில் இருக்கும்படி


அல்லா என்றால்

உருவமே இல்லாதபடி


அந்தக் காலத்தவர்களாகவே

ஆம் நிலையான வடிவிலேயே

இருந்துதான் ஆகவேண்டும்


மாறுதல் இருப்பின்

மனம்  மறுப்பளித்துவிடும்


நம் வினாயகன் மட்டுமே

ஈசன் மடியில் இருக்கும் படியும்

இரு சக்கர வாகனம் ஓட்டியபடியும்.

இருக்கச் சாத்தியம்


வேறு எந்தக் கடவுளாயினும்

அதற்கான இடத்தில்

அதற்குரிய பாவனைகளுடனே

இருக்கச் சாத்தியம்


நம் கணபதிக்கு மட்டுமே

கோவிலிலும் சாத்தியம்

தெருவோரமும் சாத்தியம்


பிற தெய்வங்கள்

செதுக்கி வைத்தால் மட்டுமே

விக்ரகமாகி அருள் தரச் சாத்தியம் 


நம் பிள்ளையாரே

சந்தனத்தில் மஞ்சளில் மட்டுமின்றி

களிமண்ணிலுக் கூட விக்ரமாகி

அருள் தரச் சாத்தியம்


இப்படி

பாமரனுக்கு

யானை முகத்தோனாய்

பண்டிதனுக்கு

ஓம் வடிவினனாய்


எல்லோருக்கும்

எற்றவனாய்

எங்கும் நிறைந்தவனை


இன்று இருப்பதைக் கொண்டுத்தொழுவோம்  அவன் ஏற்றுக் கொள்வான்                               என்றும் வேண்டுவன எல்லாம் பெறுவோம்     அவன் நிறைவாய்த் தருவான்.    

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எவ்வடிவிலும் விநாயகன். சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள்!

ஆமாம் பல உருவங்கள் கொடுக்கிறோம்...அவர் நம் தோஸ்த், அதான் இஷ்டப்படி உருவம் கொடுக்கிறோம்!

கீதா

Yaathoramani.blogspot.com said...

ஆம் ..அனைத்து வயதினருக்கும் தோஸ்த்..அருமையான வார்த்தைப் பிரயோகம்...வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com said...

உண்மை...வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com said...

👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

வெங்கட் நாகராஜ் said...

எவ்வடிவிலும் எம்பெருமான். சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

Yarlpavanan said...

அருமையான படைப்பு
விநாயகர் வெற்றிக்குத் துணை
வாழ்த்துகள்

Post a Comment