அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம்அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"
ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி
தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்
"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் " மூத்த மகன்
கண் கலங்கியபடி பேரன் மட்டுமே
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்
"அதுக்குக் "கூட
"அதன் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது
2 comments:
வணக்கம் சகோதரரே
பதிவை படித்துக் கொண்டு வருகையில், பதிவின் இறுதியில் மனது கனத்து விட்டது. யாருமே உயிருடன் இருக்கிற வரைதான் கொஞ்சமாவது மரியாதை கலந்த அன்பு, (அதுவும் நீங்கள் தெளிவுபடுத்திய "அதனி"டம் பணமிருந்தால்) கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தியது பதிவு. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இது தான் உண்மை. சீக்கிரம் அதை நாம் புரிந்து கொள்வது நமக்கு நல்லது!
Post a Comment