முன்பு
பதவிக் காலம் முடியும் முன்
மக்கள் பிரதிநிதிகள் இறந்தால்
அவர்கள் குடும்பத்தாரைப் போலவே
மனம் கலங்கிய காலம் ஒன்று இருந்தது
அவர்கள் குடும்ப வாரீசுகள்
எவரேனும் போட்டியிட்டால்
அனுதாப ஓட்டுக்களால் மிக எளிதாக
வெல்லும் காலம் என்றும் இருந்தது
இன்று
எப்படியும் வென்றாக வேண்டும்
என்கிற முனைப்பில் வெறியில்
ஆளும் கட்சிகள் அள்ளி இறைக்கும்
பணத்தைப் பார்க்கையில்....
எப்படியும் தோற்க வைக்க வேண்டுக்
என்கிற நோக்கில் அதற்கு இணையாக
எதிர்கட்சிகள் செய்யும்
அட்டகாசங்களைக் கவனிக்கையில்...
மெல்ல மெல்ல
பிறதொகுதி மக்களின் மனோபாவமும்
மாற்றம் கொள்ளத் துவங்குகிறது
நலமாக இருக்கும் தங்கள் பிரதிநிதியை
கொஞ்சம் ஆற்றாமையோடு பார்க்கிறது
இருக்கையில்
தொகுதிக்கு ஏதும் செய்ய இயலாவிட்டாலும்
இதுபோல் இடையில் போயாவது
தொகுதி மக்களுக்கு நனமை செய்ய மாட்டாரா என
ஏக்கப் பெருமுச்சு விடுகிறது
எனவே......
பெருமூச்சு மெல்ல மெல்ல
ஆசையாக மாறாதிருக்கவாவது
வேண்டுதலாக ஆகாதிருக்கவாவது..... அதன் தொடர்ச்சியாய் இனி இடைத்தேர்தலே இல்லை என்று ஆகித் தொலைப்பதற்காகவாவது... அடக்கி வாசிக்கப் பயில்வோமா..... இடைத்தேர்தலை போர்க்களமாகக் கருதாது போட்டித் தேர்வாகக் கொள்வோமா...
3 comments:
எங்கே... இப்போதே கருத்துக் கணிப்பில் முடிவு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
பணம் முக்கியம்...
இனி 80 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட்டு என ஏதாவது ஒரு கட்சி முடிவு செய்யுமேயானால் எல்லா சீட்டையும் அள்ளி விடலாம்!
Post a Comment