Tuesday, February 21, 2023

இனியேனும் இருக்கும் போதே...

 நல்லவர்..

வல்லவர்..

மனித நேயமிக்கவர்..

எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..

பலரது பசியையும் ஆற்றியவர்..

இளகிய மனம் கொண்டவர்..


என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, 


அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..


மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..


அவருக்காக வாக்கு கேட்கவில்லை..


அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..


தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..


நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..


கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..


அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..


அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..



இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!



இன்று அவர் மரணத்திற்குப் பிறகு.. 


மைக் பிடித்து அழுவது..


உருகி உருகி பதிவு போடுவது..


ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..


என்று செய்வது எல்லாம் சரிதான்..


ஆனால்..


அது எதுவும் அவருக்குத் தெரியாது..


அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..


இதுதான் வாழ்க்கை..


இவ்வளவுதான் வாழ்க்கை..


இனியாவது..


மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை


அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே

கொண்டாடப் பழகுங்கள்..


வாழ்க்கை மிகவும் புதிரானது..


இருந்தாலும்... மறைந்தாலும்... பேர் சொல்ல வேண்டும்.


லயன் ராமர்🙏🙏🙏

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் அனைத்தையும் தீர்மானிக்கும்... ம்...

ஸ்ரீராம். said...

எனக்கும் இந்த எண்ணம் தோன்றியது.    நல்லவர்கள் அரசியலுக்கு வந்து கெட்டுப்போகக் கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ..  ஆனால் வாங்கும்வரை வாங்கி கொள்கிறார்கள், உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.  பதில் செய்யும்போது நன்றாய் வைத்து செய்து விடுகிறார்கள்.  ஆனால் அந்த மனிதர் அதற்காக தான் செய்து கொண்டிருந்த உதவிகளை நிறுத்தி விடவில்லை, தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை என்று படித்த பதிவிலிருந்து தெரிகிறது.

Post a Comment