சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்
சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்
ஒட்ட ஒட்டக் கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப் பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென
வெட்டி வெட்டிக் காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப் பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்
பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்
கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது
மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)
2 comments:
உலகப்பொதுமுறை...
சிறப்பு. நீரின் அவசியம் உணர்ந்தால் நம் அனைவருக்கும் நல்லது.
Post a Comment