Saturday, July 27, 2024

தங்க நகை‌சேமிப்பா ?

 இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே                ஒரு பவுன் தங்கசெயினுக்கு 

1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!


 இது அனைவருக்கும் தெரிந்தது. 


ஆனால்

 

8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 

6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!


ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். 


அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.


இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.


 ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.


 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். 

யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் 


 ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.


 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?


 நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!


 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?


 பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?

 கணக்கு போட்டு பாருங்கள்.


1 கிராம் தங்கம் ரூ. 4760/-

8 கிராம் தங்கம் ரூ. 38,080/-

1 கிராம்  செம்பு - 4.80

1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-

6.5 கிராம் தங்கம் - 30940/-


6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு 

அடக்கவிலை-30940+7.2=30947.2/-


1 பவுனுக்கு தங்கத்தில் - 38080 - 30940


லாபம்= 7140


சேதாரம் 1.5 கிராம் = 7140/-


 1 பவுனுக்கு மொத்த லாபம்  14280                 


என்ன தலை சுத்துதா ? 


எனக்குள் இது ஆதங்கம். 


ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.


  விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள உள்ளங்களே 


 உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி share செய்யவும்.

5 comments:

Anonymous said...

தலை சுத்துது!!! வீட்டில் தங்கம்.வாங்கும் பழக்கம் இல்லை...எனவே தப்பித்தோம்.

கீதா

Anonymous said...

தங்கமே வேண்டாம்:)

வெங்கட் நாகராஜ் said...

பயங்கர கொள்ளை - இருந்தாலும் தங்கம் மீதான மோகம் இன்னமும் நம் மக்களுக்கு பெரும்பாலும் இருக்கத்தான் செய்கிறது.

Mahesh said...

தங்கம் பல்வேறு தூய்மையில் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் தான் தூய்மையானது. (99.99%). இது மிருதுவாக இருக்குமென்பதால் அபரணங்கள் செய்ய பயன்படாது. அதனால்தான் தங்கத்துடன் வெள்ளி அல்லது செம்பை கலந்து அதை கெட்டியாகி ஆபரணங்கள் செய்கிறார்கள். அந்த கலப்பின் விகிதாச்சாரத்தில் அடிப்படையில் தங்கத்தின் தரம் 22 கேரட், 18 கேரட், 14 கேரட் என்று பிரிக்கப்படுகிறது.

22 கேரட் தங்கம் என்றல் 24-ல் 22 பங்கு தங்கமும் 2 பங்கு வெள்ளி அல்லது செம்பும் இருப்பது. இதை % அடிப்படையில் பார்த்தால் 91.6% தங்கமும் 8.4% வெள்ளி/செம்பும் இருக்கும். இதையே 916 தங்கம் என்று தற்போது குறிப்பிடுகிறார்கள்.

உங்கள் முக்கிய குற்றச்சாட்டிற்கு வருவோம். தங்கத்தோடு கலக்கப்படும் செம்பும் தங்கத்தின் விலையிலேயே விற்கப்படுகிறதா? 24 கேரட் தங்கத்தின் விலையும் 22 கேரட் தங்கத்தின் விலையும் ஒன்று கிடையாது. இன்றைய (29.7.24) நிலவரப்படி 24 கேரட் தங்கதின் விலை ரூ 6870/கிராம். 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.6415/கிராம். செம்பு சேர்க்கப்படுவதாலேயே ஆபரண தங்கத்தின் விலை தூய தங்கத்தின் விலையை விட 455 ருபாய் குறைவு.

இந்த பதிவை படிப்பவர்களுக்கு என்னுடைய இந்த விளக்கம் தெளிவை தந்திருக்கும் என நம்புகிறேன்.

நெல்லைத்தமிழன் said...

நான் ஒரு முறை கல்ஃபில் வாங்கிய நகையின் தூய்மையை தி நகர் தனிஷ்க்கில் சோதனை செய்தேன். அதற்குச் சற்று முன்பு இருவர் தங்கள் பழைய நகைகளின் (இந்தியா) தரத்தைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களின் நகைகளில் தங்கம் 88 மற்றும் 90 சதம், என்னைடையதில் கிட்டத்தட்ட 95 சதம் தங்கம். எல்லோருடையதும் 22 காரட். தகிடுத்த்தத்தினால்தான் நகைக்கடைகள் கொழுத்த லாபம் பெறுகின்றன.

Post a Comment