Tuesday, December 31, 2024

இன்றோடு..

 இன்றோடு.......

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, December 14, 2024

மாதங்களில் "அவன்' மார்கழி

 *" மார்கழி மாதம்*

 *பிறக்கவிருக்கிறது*


*மார்கழி ஸ்பெஷல்* ! 

(*சூரிய பகவானின் தனுர் ராசி பிரவேசம்*)


🙏 *மார்கழி மாதத்தின்*

 *சிறப்புகள்*🙏


    'மாதங்களில்  நான் மார்கழியாக இருக்கிறேன்'  என   ஶ்ரீகிருஷ்ணர் கீதையில்  கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும்.  (பீடு என்றால் பெருமை)

இம் மாதம்  தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.  மனிதர்களுக்கு  ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.  தை மாதத்திலிருந்து  ஆனி மாதம் வரை  உத்ராயண புண்ணிய காலமாகும்.  அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.   எனவே  மார்கழி என்பது தேவர்களுக்கு  வைகறை  பொழுதைப் போன்றது. மிகவும்  சிறப்புடைய மாதம் மார்கழி.  எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு  உகந்தது. 


      தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத்  'தனுர் மாதம்" எனவும்  அழைப்பர். இம்மாதத்தில்  அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது  மக்களின் வழக்கம்.  ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப்  பக்தர்கள்  இம்மாதத்தில்   மேற்கொள்ளுகின்றனர். 

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.


        மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில்  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் 'என்றும் பதினாறு  வயது'   எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற  மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்சய ஹோமம்( யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.


          மார்கழி  மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


🙏 *ஆருத்ரா தரிசனம்*🙏


       சிவபெருமானின்  "ஆருத்ரா தரிசனம்" மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது

ஆடலரசனான  நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான்  அக்னிவடிவாக நின்ற நாள்  என்பதால்  திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகிறது;"ஆதிரையான்" என்று சிவனை அழைப்பர்.


          இவ்விழாவைப்   பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப்   படைக்கப்படுகின்றன. 'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர்,  நடனகலையில் சிறக்கலாம்.


🙏 *வைகுண்ட ஏகாதசி*🙏


         வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது மிக முக்கிய நிகழ்சியாகும்.


        வைகுண்ட ஏகாதசி அன்று   திருமாலுக்குப்  பிரியமான  துளசி  தீர்த்தத்தை  மட்டுமே  உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தைத்  தரும்.    இந்நாளில்  வைகுண்டத்தின் வாசல் திறந்தேயிருக்கும் என்றும்,  அன்று  மரணிக்கின்ற உயிர்கள், நேரே வைகுண்டத்திற்குச் செல்லும்!  என்பதும் ஐதீகம்.


🙏பாவை நோன்பு. 🙏


         ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமானதால்  இவ்விரதம், பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.


       பூமாதேவியின் அவதாரமான  ஸ்ரீ ஆண்டாள், பாவை நோன்பினை மேற்கொண்டு, அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் ம


னதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.


           எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய  திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்களோ,  மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


🙏திருவெம்பாவை நோன்பு🙏

          _மாணிக்கவாசகர்

   

      திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.

இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.


       இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது  மாணிக்கவாசகர்  அருளிய  'திருவெம்பாவை"  பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில்  சிவபெருமானுக்குப்  பிரியமான பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு "பிட்டு வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது.


🙏முருகன்__படி உற்சவம்🙏


          ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.


🙏விநாயகர் சஷ்டி விரதம்🙏


            இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.  இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும்  உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர்  கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர்.

விரதத்தின் நிறைவு நாள் அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.


🙏அனுமன் ஜெயந்தி🙏


           மார்கழி மாதத்தில்  மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தியன்று   விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.கோயில்களில் 

அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.


🙏உற்பத்தி ஏகாதசி🙏


          மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'  என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல  செல்வங்களும் கிடைக்கும்;  எதிரிகளை  வெல்லலாம்.


மார்கழி  மாதத்தில் 63 நாயன்மார்களில்_ வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகின்றது.


பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


         இரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்   பிறந்தவர்களாவர்.

மார்கழி  மாதத்தில்   வாசலில்  கோலம் இட்டு சாணத்தைப்  பிடித்து  கோலத்தில் வைத்து,  பிள்ளையாரரைப் போற்றி வழிபடுகின்றனர் மக்கள்.


               🙏   தேவர்கள்  இறைவனை துதித்து  வழிபடும் மாதம் மார்கழி.  இறைவனின்  அம்சமாகவேயுள்ள  மார்கழி மாதத்தில்   பரம்பொருளின் எல்லா தெய்வ வடிவங்களும் போற்றப்படுகின்றன.  எனவே  பீடுடைய ( பெருமையை உடைய) மாதமான  புனிதமான மார்கழி மாதத்தை   வரவேற்கப் பக்தர்கள் நாம் அனைவரும்  தயாராவோம். மார்கழி மாதம் பிறக்க இருக்கின்றது.  சூடிக் கொடுத்தச் சுடர்கொடியான ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய  திருவெம்பாவையையும்  பாடி  இறையருளைப் பெறுவோம்.🙏


ஸர்வம் ஸ்ரீ

 கிருஷ்ணார்ப்பணம் 🙏 (வாட்ஸ் அப் பகிர்வு)


ஆண்டாள் திருவடிகளே

சரணம் 🙏


ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பகிரவும்..அவசியமெனில் பயன்படுத்தவும்..

 *லஞ்ச ஒழிப்பு துறை – விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை பதிவு அனைவரிடமும் பகிருங்கள்*


அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!


நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பது, தாமதப்படுத்துவது, அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை தடுக்க தீவிரமாக செயல்படுகிறது.


ஒன்றிய அல்லது மாநில அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் உங்கள் வாழ்வாதாரத்தை பாதித்தால், நீங்கள் இதைப் பற்றிய புகார்களை உறுதிப்படுத் தரமான ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.


புகார் அளிக்க முடியும் காரணங்கள்:


1. நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தல்:

உங்கள் உரிமையான கோரிக்கைகளை மறுக்க வேண்டிய காரணமின்றி நிராகரிப்பது. நிராகரிப்பதற்கான காரணத்தை சொல்லாமல் அலட்சியம் காட்டுவது.


2. தாமதப்படுத்துதல்:

உங்களின் கோரிக்கைக்கு தேவையற்ற தாமதம் செய்வது.


3. அலட்சியம் காட்டுதல்:

உங்கள் கோரிக்கையை கவனிக்காமல் புறக்கணிப்பது.


4. மறைமுக லஞ்ச கோரிக்கை:

லஞ்சம் கொடுக்க தூண்டுவது, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மறைமுகமாக பணம் அல்லது பொருள் கேட்கும் நிலை. இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெற முயற்சிப்பது.


புகார் அளிக்க தேவையான முக்கிய ஆதாரங்கள்:


1. கோரிக்கை தொடர்பான ஆவணங்கள்:


நீங்கள் அளித்த கோரிக்கையின் பதவி ஏற்ற பதிவு (பதிவு எண், நாள்).


2. ஆடியோ/வீடியோ ஆதாரம்:


அதிகாரி நேரடியாக அல்லது மறைமுகமாக லஞ்சம் கேட்கிறதற்கான பதிவுகள்.


3. அலட்சியத்தின் ஆதாரம்:


கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரும் செயல்பாடுகள் இல்லாததற்கான சான்றுகள்.


4. செயல்முறை விளக்கம்:


கோரிக்கையின் தன்மை, ஆவணங்களின் விவரங்கள் மற்றும் சம்பவத்திற்கான நேரம், இடம்.


*லஞ்ச ஒழிப்பு துறையின் தொடர்பு தகவல்கள்:*


தொலைபேசி: 1064


மின்னஞ்சல்: dvac@tn.gov.in


இணையதளம்: www.dvac.tn.gov.in



புகார் அளிக்க சுலபமாக அணுகவும், உங்கள் தகவல்கள் பூரணமாக பாதுகாக்கப்படும். 🙏


லஞ்சம் ஒழிக்க செய்ய வேண்டிய முக்கிய ஆலோசனைகள்:


1. உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது:


உங்கள் கோரிக்கைகளை நேர்மையாக பதிவு செய்து நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும். உங்க நியாயமான கோரிக்கையை நிராகரித்தால் தாமதப்படுத்தினால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க சொல்லுங்கள் நிராகரிப்பது எந்த சட்ட பிரிவின் கீழ் நிராகரித்துள்ளீர்கள் தாமதப்படுத்துகிறீர்கள் என்று. 


2. உண்மையான ஆதாரங்களை சேகரிக்கவும்:


அதிகாரிகள் உங்களை தாமதப்படுத்தினால் அல்லது லஞ்சம் கேட்கிறார்கள், நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து, அதிகாரிகளை மாற்றி மாற்றி பார்க்கச் சொல்லி அலட்சியப்படுத்தி, சரியான பதில் கொடுக்காமல் லஞ்சம் கொடுக்க தூண்டுகிறார்கள் என்றால் சரியான சான்றுகளுடன் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறைல் தாமதிக்காமல் உடனடியாக புகார் கொடுங்கள், உங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும். 


3. பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நினைவில் கொள்ளுங்கள்:


உங்கள் உரிமைகளுக்கு போராட தயங்க வேண்டாம்.

அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே லஞ்சம் ஒழிக்க முடியும்.


"ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, உங்கள் ஆதரவை வழங்குங்கள்! லஞ்சத்திற்கு இடமில்லாத சமூகத்திற்காக, நீங்கள் லஞ்சம் ஒளியும் வரை ஒற்றுமையாக பகிருங்கள்." 🙌

Wednesday, December 11, 2024

புலி வேட்டை...

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Friday, December 6, 2024

அறிந்து தெளிவோமா...

 *மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*


ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..


இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..


தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..


அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.


ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..


மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..


இங்கு வெள்ளையன் 

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.


வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...


 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..


தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...


 புகையிலையும் அப்படி வந்ததே.


இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.


 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.


வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான், 

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.


கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.


கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.


தேங்காய் இருந்த 

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌


மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.


நோய்கள் பெருகின..


ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...


 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட் 

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..


ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..


அத்தோடு விட்டானா?


அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.


 விளைவு..?


தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...


சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.


 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...


ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..


நோய் பெருகிற்று....


அதாவது சூடான பூமியில் சூடு 

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...


வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?


குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.


உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..


இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..


எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.


இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...


பரிதாபம்.


காரணம்,  அவற்றுக்கு உண்மையான 

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....


அவை என்ன செய்யும்?


எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...


 ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!


நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் 

நிலையங்கள் எப்படி இருக்கும்?


எதையோ தின்று 

எதையோ குடித்து, 

எதையோ புகைத்து, எதையோ மென்று 

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்


எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..


ஆப்ரிக்காவிலும் 

அரேபியாவிலும் காப்பி இருந்தது..


தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 


பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!


புரிகிறதா...?


இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..


பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,

இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 


 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..


அவை இன்றியும் வாழமுடியும்...


அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.


 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 


விஷம் அவை..


இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது


ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை  ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 

காணலாம்..


தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..


துளசி போல் அருமருந்தில்லை..


அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.


தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..


தேர்களில் தெய்வங்களுக்கு 

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.


உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...


அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.


அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.


சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..


அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 

நோய்க்கு இடம் கொடா...


மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..


இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..


அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..


கருத்தரிப்பு சிக்கல் 

சிசேரியன் என மறுபுறம்.


 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..


பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..


அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..


அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது


 இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..


அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...


நாம் பாரம்பரியத்தை 

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... 

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..


ஆம். 


மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 

ஆகபோவது ஒன்றுமில்லை...


நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..


 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼🌹(படித்ததில் பிடித்தது)