தீபாவளிக் கொண்டாட்டம்
தான் தன் சுகம் என வாழ்வதை விட
பிறர் சுகம்படக் காரணமாக இருந்து
அதைக் கண்டு மகிழ்தல் மிகச் சிறந்தது என்பதை
கொள்கையாகக் கொண்ட பல நண்பர்கள்
நான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற
டிலைட் அரிமா சங்கத்தில் அங்கத்தினர்களாக
உள்ளனர்
அவர்களது உதவியுடன் மதுரை தனக்கன்குளத்தில்
உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுடன்
தீபாவளி விருந்து உண்டு மகிழ்ந்தோம்
விருந்து நட்சித்திர ஹோட்டல் விருந்தினைவிட
மிகச் சுவையாக இருந்தது (19'10.2014 )
அதேபோல் மதுரை மேலக்குயில்குடியில் உள்ள
மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும்
பட்டாசுகள் வழங்கியும் மகிழ்வினைப்
பகிர்ந்து கொண்டோம்.உற்றார் உறவினருடன்
வீட்டில் செய்து உண்ட இனிப்பினைவிட
இவர்களுடன் உண்டது மிகச் சிறப்பாக இருந்தது
(21.10.2014 )
இப்படிச் செய்ததை பகிர்வது நிச்சயம் தம்பட்டம்
அடித்துக் கொள்வதற்காக இல்லை.அனைவரும்
கொடுப்பதில் உள்ள சுகத்தை கொடுத்து உணர்ந்து
அவர்களும் பெரும்மகிழ்வுக் கொள்ளவேண்டும்
என்பதற்காகவே