விமானப் படிக்கட்டை விட்டு
இறங்கியதும் எதிர் இருந்தஎன் வீட்டு வாசலில்..
நான் பத்து வயதாயிருக்கையில்
என் ஐந்து வயது பேரனுக்கு
உணவூட்டிக் கொண்டபடி
"வாடா " என வரவேற்கி றாள்
இது எப்படி சாத்தியமென
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
எதிரே அவசரமாக
சைக்கிளில் போய்க்கொண்டிருந்த
நிதியமைச்சர் பாட்டியைப் பார்த்து
டீச்சர் சௌக்கியமா
"எனக்கேட்டுப் போகிறார்..
நான் அதிர்ந்து போய்
பாட்டி உனக்கு இவரைத் தெரியுமா "
எனக் கேட்க
பாட்டி அலட்சியமாய்
"நான் தாண்டா அவனுக்கு
பத்தாம் வகுப்புக்கு கணக்கு டீச்சர் "என்கிறாள்
எனக்குள் பயம் பாம்பாய்ப் படமெடுக்க
அரண்டுபோய் இரண்டடி பின் செல்ல"கொஞ்சம் பார்த்துப்பா "என்கிறது தெருவில்
ஒருக்களித்துப் படித்திருந்த நாய்
"பாட்டி எனக்குப் பயமாயிருக்கிறது
நம்ம ஊரில் நாய் பேசுமா
எனக் கேட்டு முடிப்பதற்குள்
"அது தானே " என ஆச்சரியப்பட்டது
குட்டிச் சுவர் அருகில் இருந்த கழுதை
அரண்டு வெலவெலத்துப் போய்
இனியும் இங்கு இருக்கலாகாது எனத்தலைத் தெறிக்க ஓடிய நான்....
தவறிப் போய் அந்த வண்ணான் குளத்தில்
தலை கீழாய் விழுந்து நிமிர்ந்து விழித்தபோது..
.
.
."....என்ன இன்றும் பேய்க் கனவா
தண்ணி குடித்துவிட்டுப் படுங்க "
என்றபடி புரண்டு படுத்தாள் மனைவி
மெலிதாய் எரியும் இரவு விளக்கு
சுவரில் நீண்டு தெரியும் என் கரிய உருவம்மின் விசிறித் சத்தம்
வாசலில் விடாது குரைக்கும் நாய்
உண்மையாய் நிஜமாய் இருக்கும்
யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்
குறைந்து கொண்டே போகிறது எனக்கு
காலம் நேரம் தூரம்
யதார்த்தம் உண்மை தர்க்கம்அனைத்தையும் ஒரு நொடியில்
தகர்த்தெரியும் விளக்கமுடியா
அமானுஷ்யமே இப்போதெல்லாம்
எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது
எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது
மீண்டும் ஆர்வமுடன்
அமானுஷ்யங்களுடன் உறவாட த்
துயிலத் துவஙகுகிறேன் நான்அமானுஷ்யங்களுடன் உறவாட த்