வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு,
அதன் உரிமையாளர் பெயரை உடனே
தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்"
என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே
வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி
ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை
உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்டு TN19Z - மதுராந்தகம் TN20 - திருவள்ளூர் TN20Y - பூணாமல்லி TN21 - காஞ்சிபுரம் TN21W - ஸ்ரீபெரும்புதூர் TN22 - மீனம்பாக்கம் TN23 - வேலூர் TN23T - குடியாத்தம் TN23Y - வாணியம்பாடி TN24 - கிருஷ்ணகிரி TN25 - திருவண்ணாமலை TN25Z - ஆரணி TN28 - நாமக்கல் TN28Y - பரமாதி வெள்லூர் TN28Z - ராசி புரம் TN29 - தர்மபுரி TN29W - பாலக்கோடு TN29Z - ஹரூர் TN30 - சேலம் (மேற்கு) TN30W - ஓமலூர் TN31 - கடலூர் TN31U - சிதம்பரம் TN31V - விருதாசலம் TN31Y - நெய்வேலி TN32 - விழுப்புரம் TN32W - கள்ளக்குறிச்சி TN32Z - உளுந்தூர்பேட் TN33 - ஈரோடு TN34 - திருச்செங்கோடு TN36 - கோபிசெட்டிபாளயம் TN36W - பவானி TN36Z - சத்தியமங்கலம் TN37 - கோவை (தெற்கு) TN38 - கோவை (வடக்கு) - TN39 - திருப்பூர் (வடக்கு) TN39Z - அவிநாசி TN40 - மேட்டுப்பாளையம் TN41 - பொள்ளாச்சி TN42 - திருப்பூர் (தெற்கு) TN42Y - கங்கயம் TN43 - ஊட்டி TN43Z - கூடலூர் TN45 - திருச்சிராப்பள்ளி TN45Y - திருவெறும்பூர் TN45Z - மணப்பாறை TN46 - பெரம்பலூர் TN47 - கரூர் TN47Z - குளித்தலை TN48 - ஸ்ரீரங்கம் TN48Z - துறையூர் TN49 - தஞ்சாவூர் TN49Y - பட்டுக்கோட்டை TN50 - திருவாரூர் TN50Z - மன்னார்குடி TN51 - நாகப்பட்டினம் TN51Z - மயிலதுறை TN52 - சங்கரி TN52Z - மேட்டூர் TN54 - சேலம் (கிழக்கு) TN55 - புதுக்கோட்டை TN55Z - அறந்தாங்கி TN56 - பெருந்துறை TN57 - திண்டுக்கல் TN57R - ஒட்டன்சத்திரம் TN57V - வடசந்தூர் TN57Y - பட்டலகுண்டு TN57Z - பழனி TN58 - மதுரை (தெற்கு) TN58Z - திருமங்கலம் TN59 - மதுரை (வடக்கு) TN59V - வாடிப்பட்டி TN59Z - மேலூர் TN60 - தேனி TN60Z - உத்தமபாளயம் TN61 - அரியலூர் TN63 - சிவகங்கை TN63Z - காரைக்குடி TN64 - மதுரை (தெற்கு) TN65 - ராமனாதபுரம் TN65Z - பரமக்குடி TN66 - கோவை (மத்திய) TN67 - விருதுநகர் TN67U - சிவகாசி TN67Z - ஸ்ரீவிலிபுதூர் TN68 - கும்பகோணம் TN69 - தூத்துக்குடி TN69Y - திருச்செந்தூர் TN69Z - கோவில்பட்டி TN70 - ஒசூர் TN72 - திருநெல்வேலி TN72V - வள்ளியூர் TN73 - ராணிப்பேட் TN73Z - அரக்கோணம் TN74 - நாகர்கோவில் TN75 - மார்த்தாண்டம் TN76 - தென்காசி TN76V - அம்பாசமுத்திரம் TN76Z - சங்கரன்கோவில் TN77 - ஆத்தூர் TN77Z - வாழப்பாடி TN78 - தாராபுரம் TN78Z - உடுமலைப்பேட்டை
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க
வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர்
மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர்
பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள்
என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற
பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்
ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு
ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை
ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377 மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639 போலீஸ் SMS :- —————————————-9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832 போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103 வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100 வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155 பெண்க |
Saturday, February 7, 2015
பயனுள்ள பகிர்வு ( 2 )
Friday, February 6, 2015
தொலைக்காட்சிக் கனவான்களே ...
குடிக்கிற காட்சி வருகையில்
குடி குடி கெடுக்கும் என
கீழே எழுத்துப் போடுவது மாதிரி
சிகரெட் குடிக்கையில்
புகைப் பிடிக்கும் பழக்கம்
புற்று நோயை உண்டாக்கும் என
எழுத்துப் போடுவது மாதிரி
நமது தொலைக்காட்சிச் தொடர்களில்
வில்லிகள் அடுத்த குடும்பத்தைக் கெடுக்க
சதி செய்கிற போது
இது குணக்கேடு தீங்கானது என்றோ
வில்லன்கள்அடுத்தவன் மனைவியை
அடைய முயற்சிக்கையில்
இது மகாப் பாவம் என்றோ
போட்டுத் தொலைத்தால் என்ன ?
வில்லன்களைகதா நாயகனை விட
புத்திசாலிகளாகச் காட்டுவதும்
வில்லிகளைகதா நாயகியை விட
அழகாய் காட்டுவதும்
தொடர் முடிகிற கடைசி நாளில் மட்டும்
நல்லவன் சுகப்படுவதும்
கடைசி காட்சிவரை
தீயவர்கள் சுகமாகத் திரிவதும்
கொஞ்சம் சமநிலை
மனதுடையோரை
குழப்பிவிட்டுத்தான் போகிறது
எனவே
அய்யா
தொலைக்காட்சிக் கனவான்களே
ரேட்டிங் பார்ப்பதிலேயே
முழுக் கவனமாய் இல்லாமல் கொஞ்சம்
நாடு குறித்தும் கவனம் கொள்ளுங்களேன்
பிளீஸ்..................
குடி குடி கெடுக்கும் என
கீழே எழுத்துப் போடுவது மாதிரி
சிகரெட் குடிக்கையில்
புகைப் பிடிக்கும் பழக்கம்
புற்று நோயை உண்டாக்கும் என
எழுத்துப் போடுவது மாதிரி
நமது தொலைக்காட்சிச் தொடர்களில்
வில்லிகள் அடுத்த குடும்பத்தைக் கெடுக்க
சதி செய்கிற போது
இது குணக்கேடு தீங்கானது என்றோ
வில்லன்கள்அடுத்தவன் மனைவியை
அடைய முயற்சிக்கையில்
இது மகாப் பாவம் என்றோ
போட்டுத் தொலைத்தால் என்ன ?
வில்லன்களைகதா நாயகனை விட
புத்திசாலிகளாகச் காட்டுவதும்
வில்லிகளைகதா நாயகியை விட
அழகாய் காட்டுவதும்
தொடர் முடிகிற கடைசி நாளில் மட்டும்
நல்லவன் சுகப்படுவதும்
கடைசி காட்சிவரை
தீயவர்கள் சுகமாகத் திரிவதும்
கொஞ்சம் சமநிலை
மனதுடையோரை
குழப்பிவிட்டுத்தான் போகிறது
எனவே
அய்யா
தொலைக்காட்சிக் கனவான்களே
ரேட்டிங் பார்ப்பதிலேயே
முழுக் கவனமாய் இல்லாமல் கொஞ்சம்
நாடு குறித்தும் கவனம் கொள்ளுங்களேன்
பிளீஸ்..................
Thursday, February 5, 2015
வாளினும்.....
ஐநூறு கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
ஐந்து கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்
ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
ஐயாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்
கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஐம்பதாயிரம் பேரே
படித்திருக்கச் சாத்தியம்
வலைத்தளம் போல்
மூன்று இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை
புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
ஐயாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்
வலைத்தள பின்னூட்டம் போல்
முப்பதாயிரம் தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை
எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்
நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்
அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
ஐந்து கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்
ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
ஐயாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்
கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஐம்பதாயிரம் பேரே
படித்திருக்கச் சாத்தியம்
வலைத்தளம் போல்
மூன்று இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை
புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
ஐயாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்
வலைத்தள பின்னூட்டம் போல்
முப்பதாயிரம் தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை
எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்
நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்
அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்
காதல் என்றால் இதுதானா ?
அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து
அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத் தொலைந்தான்
எப்போதும் அவள் குறித்த
நினைவிலேயே அலைந்து திரிந்தான்
அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
நாளையும் பொழுதையும் கழித்தாள்
அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது தேவைகளை மறந்தே போனான்
அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து
அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்
அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்
அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து
அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்
அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்
இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
இப்படிச் சொன்னான்
"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது
தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்
அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம இது புரியச சாத்தியமில்லை "என்றான்
நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்
அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத் தொலைந்தான்
எப்போதும் அவள் குறித்த
நினைவிலேயே அலைந்து திரிந்தான்
அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
நாளையும் பொழுதையும் கழித்தாள்
அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது தேவைகளை மறந்தே போனான்
அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து
அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்
அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்
அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து
அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்
அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்
இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
இப்படிச் சொன்னான்
"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது
தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்
அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம இது புரியச சாத்தியமில்லை "என்றான்
நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்
Monday, February 2, 2015
எங்கோ இருந்து என்னை இயக்கும் அழகுப் பெண்ணே ரதியே
ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்
நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்
வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்
அழகு போகும் போக்கில் தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்
மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து
எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்
நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்
வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்
அழகு போகும் போக்கில் தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்
மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து
எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே
கொடிகளும் நிறங்களும்...
ஏழ்மையை
இருவகையில் அழிக்கலாம்
ஏழைகளை அழித்தாலும்
ஏழ்மை அழிந்துவிடும்
ஏழ்மையை அழித்தாலும்
ஏழைகள் அழிந்திடுவர்
நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம்
ஏனோ முதலில் சொல்லியதே
சுலபமானதாகப் படுகிறது
செல்வத்தை
இருவகையில் பெருக்கலாம்
செல்வர்களை வளர்த்து
செல்வத்தைப் பெருக்கலாம்
செல்வத்தைப் பெருக்கியும்
செல்வர்களைப் பெருக்கலாம்
நம் அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
நம் தலையெழுத்தோ என்னவோ
முன்னதே சுலபமானதாய்த் தெரிகிறது
என்ன செய்வது
கொடிக்கம்பத்தில்
வேறு வேறு வண்ணத்தில்
தெரிகிற கொடிகளெல்லாம்
வேறு வேறு கொள்கையைச் சொல்வதாய் எண்ணி
நாமும் மாறி மாறி ஓட்டளித்து
ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தும்..
அனைத்து கொடிகளும்
ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காக மட்டுமே
பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
எத்தனை அடிவாங்கியும்
நம் புத்திக்கு மட்டும்
இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை
இருவகையில் அழிக்கலாம்
ஏழைகளை அழித்தாலும்
ஏழ்மை அழிந்துவிடும்
ஏழ்மையை அழித்தாலும்
ஏழைகள் அழிந்திடுவர்
நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம்
ஏனோ முதலில் சொல்லியதே
சுலபமானதாகப் படுகிறது
செல்வத்தை
இருவகையில் பெருக்கலாம்
செல்வர்களை வளர்த்து
செல்வத்தைப் பெருக்கலாம்
செல்வத்தைப் பெருக்கியும்
செல்வர்களைப் பெருக்கலாம்
நம் அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
நம் தலையெழுத்தோ என்னவோ
முன்னதே சுலபமானதாய்த் தெரிகிறது
என்ன செய்வது
கொடிக்கம்பத்தில்
வேறு வேறு வண்ணத்தில்
தெரிகிற கொடிகளெல்லாம்
வேறு வேறு கொள்கையைச் சொல்வதாய் எண்ணி
நாமும் மாறி மாறி ஓட்டளித்து
ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தும்..
அனைத்து கொடிகளும்
ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காக மட்டுமே
பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
எத்தனை அடிவாங்கியும்
நம் புத்திக்கு மட்டும்
இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை
Subscribe to:
Posts (Atom)
