Friday, September 17, 2021

தற்கொலையை ஆதரிப்போரை தள்ளிவைப்போம்..அதன் மூலம் அனைத்து அவலங்களையும் தள்ளிவைப்போம்

 செய்தி. 

தற்கொலை நடப்பதால் NEET தேர்வில்  இருந்து விலக்கு கோரும் தீர்மானம். தமிழக சட்டசபையில். 


+2 தேர்வில் தோல்வி.


மனம்  உடைந்து மாணவர் தற்கொலை.


+2 தேர்வை தடை செய்யலாம். 


10 th தேர்வு. தோல்வி அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வர வில்லை. 


தற்கொலை.


10th தேர்வை தடை செய்யலாம். 


அரசியல் கட்சிகளில் முன்னேற முடியாமல் பலர் தற்கொலை. 


தான் சார்ந்த கட்சி தோல்வி அடைந்தாலோ, தன் கட்சி தலைவர்களை கைது செய்தாலோ 

தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை.


அரசியல் கட்சிகளை தடை செய்து விடலாம். 


TNPSC தேர்வில் தோல்வி. 


தற்கொலை. 


அந்த TNPSC தேர்வுகளை தடை செய்து விடலாம். 


சினிமா துறையில் பலர் தற்கொலை. 


சினிமா,OTT, TV serialகளை தடை

செய்து விடலாம். 


சினிமாவே இல்லாத போது தியேட்டர்கள் எதற்கு?


தடை செய்து விடலாம். 


வேலை கிடைக்காமல் பலர் தற்கொலை.


வேலை வாய்ப்பையே தடை செய்து விடலாம். 


IIT, IIM தேர்வில்  தோல்வி. 


தற்கொலை. 


அந்த படிப்புகளை தடை செய்து விடலாம். 


JEE entrance,Tancet, CAT,MAT, SAT நுழைவுத் தேர்வுகளில் தோல்வி. 


தற்கொலை. 


அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தடை செய்து விடலாம். 


எனஜினீயரிங் பட்ட படிப்பு தேர்வில் தோல்வி. 


தற்கொலை. 


அந்த பட்ட படிப்புகளை தடை செய்து விடலாம். 


திருமணம் நடக்காமல் ஏக்கம்.

தற்கொலை. 


திருமணங்களை தடை செய்து விடலாம். 


குழந்தை பெற முடியவில்லையே. 


தற்கொலை. 


குழந்தை பெறுவதையே தடை செய்து விடலாம். 


குடும்ப தகராறு. தற்கொலை. 


குடும்பங்களை தடை செய்து விடலாம். 


கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி. 


ரசிகர்கள் தற்கொலை. 


கிரிக்கெட்டை தடை செய்து விடலாம். 


வங்கி கடனை கட்ட முடியாமல் தற்கொலை. 


வங்கிகள் கடன் கொடுப்பதால்தானே கட்ட முடிவதில்லை. 


கடன் கொடுப்பதை தடை செய்து விடலாம். 


காதல் தோல்வி.


தற்கொலை. 


காதலையே தடை செய்து விடலாம். 


போலிஸ் தற்கொலை. 


காவல் நிலையங்களை மூடி விடலாம்.


வக்கீல் டாக்டர் ஆடிட்டர் எதிர் பார்த்த முன்னேற்றம் இல்லை. 


தற்கொலை. 


அந்த தொழில்களையே தடை செய்து விடலாம். 


நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பால் பாதிப்படைந்த மனுதாரர் தற்கொலை. 


நீதி மன்றங்களை தடை செய்து விடலாம்.


NEET தேர்வு மட்டும் என்ன தவறு செய்தது? அதை மட்டும் தடை செய்ய?

Wednesday, September 15, 2021

பொறியாளர் தினம்..

 


இன்று செப்டம்பர் 15


கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டிய பொறியாளர் 

எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்.


பிறப்பு:செப்டம்பர்15,1860 

இறப்பு:ஏப்ரல் 14,1962


     விஸ்வேஸ்வரய்யா கர்நாடக மாநிலத்தில் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

      பதினைந்து வயதில் தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா அவர்கள், தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 

     1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார்.

       சிறந்த பொறியாளராக

தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

       பின்னர், “இந்திய பாசன ஆணையத்தில்” பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903ல் புனேவிலுள்ள “கடக்வசல” நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். 

      வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளத்தடுப்பு முறை அமைப்பையும்” மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும்” வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

      பின்னர், ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்க அணைகளில் ஒன்றாகக் கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார்.

       இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும் மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.

      1912 ஆம் ஆண்டு, மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்ட அவர், மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார்.

       ஸ்ரீ ஜெயசாமராஜெந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சாண்டல் எண்ணை நிறுவனம், உலோக தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களுரு அரசு பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 

     1923 ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 

     1934 ஆம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதிய விசுவேசுவரய்யா பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞரும் ஆவார்.   

       இவர் பெற்ற விருதுகளும் அங்கீகாரங்களும்:

      1904 ஆம் ஆண்டு “லண்டன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் சிவில் இன்ஜினியரிங்கில்” கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

     1921 ஆம் ஆண்டு டி.எஸ்சி-ல் முனைவர் பட்டம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

      இந்திய அறிவியல் நிறுவனத்தில் “ஃபெல்லோஷிஃப்” வழங்கப்பட்டது.

      1923 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

     1931 ஆம் ஆண்டு எல்.எல்.டி-ல் முனைவர் பட்டம் மும்பை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

      1937 ஆம் ஆண்டு டி.லிட்-ல் முனைவர் பட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

      1943 ஆம் ஆண்டு இந்திய பொறியியல் நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

      1955 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிகஉயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

      1918 ஆம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட 

எம். விஸ்வேஸ்வரய்யா 

1962 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.

Tuesday, September 14, 2021

உண்மைதான்..ஆனாலும்...ஒப்புக் கொள்ள மாட்டோம்..

 


Monday, September 13, 2021

NEET - The truth & The political drama of DMK - நீட் தேர்வு

 NEET - The truth & The political drama of DMK


பாஜக மாநில தலைவரின் கடிதம்.-4

#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம்



நீட் தேர்வு அண்மைக் காலத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்களுக்குத் தொண்டாற்றும் மகத்தான பணி மருத்துவப்பணி. அந்த மருத்துவப்பணியில் ஈடுபட நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 சட்டப் பிரிவு 10(D) மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகம் தவிர மற்ற அனைத்துக் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும், மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்,. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்தும் திமுகவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

முன்பெல்லாம், மருத்துவம் படிக்க நாடு முழுக்க மாநில வாரியாக கல்லூரி தனித்தனியே நடக்கும் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். 

இதனால் மாணவர்களுக்குக் கூடுதல் பணச் செலவு, அதிகரித்தது. “நீட்” தேர்வு எழுதுவதன் மூலமாக, நாடு முழுவதும் உள்ள எந்த மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் படிக்க முடியும். இதனால் பண செலவுகளும், நேர விரயங்களும், மன உளைச்சலும் குறையும்.

நான்கு வகையான பாடத்திட்டம் நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.. 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் சேர்த்தனர். அதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்வித்தரம் உயரும் எனப் பெற்றோர்கள் நினைத்தனர். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், நீட் தேர்வுக்கு என ஒரு பாடத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டத்திற்கு ஏற்ப கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டது.

எனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குப் பதில் அளிப்பது சுலபமாக இருந்தது. தமிழகப் பாடத்திட்டம் தரத்தை உயர்த்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட, மிகவும் உயர்ந்த தரத்தில் ஏற்படுத்தினால், அதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.

நீட் தேர்வை எதிர்ப்பது போல, கல்வித் தரத்தை உயர்த்தக் கூடிய, புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் எதிர்ப்பது கவலைக்குரியது.

ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி, சரி சமமான வாய்ப்பை நீட் தேர்வு அனைத்து மாணவருக்கும் வழங்குகிறது.. 

பணம் கொடுத்து மருத்துவப் படிப்பு முடியும் என்ற நிலையை நீட் தேர்வு மாற்றியுள்ளது. நல்ல மதிப்பெண் இருந்தால் மட்டுமே, மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கின்றது.

நீட் தேர்வுக்கு முன் பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு அலையும் வியாபாரச் சந்தை இருந்தது. இப்போது தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது. சில தனியார் கல்லூரிகளும், மருத்துவப் படிப்புக்கான சீட்டை வாங்கித்தரும் வணிகர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

நீட் தேர்வில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 15% மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ  மாணவியர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 

தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதன் மூலம், நிறைய இடத்தைத் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும். மேலும், தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள 15 சதவீத இடங்களுக்கும் போட்டி போட முடியும். நீட் தேர்வு குறித்து இங்கே இவர்கள் அவதூறு பரப்பும் அளவிற்கு மறைமுகமாக எந்த ரகசியமும் இல்லை, இதில் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு மேற்கொள்ளப் படுகின்றது.

நீட் வழங்கும் சமவாய்ப்பினால் உண்மையில் நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் 2-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நீட் தேர்வை 1,017 பேர் தமிழ் மொழியில் எழுதினர். 2020ஆம் ஆண்டு 17,101பேர் தமிழ் மொழியில் தேர்வை எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2019-ம் ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்தது. 2020 ஆண்டும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 412 இலவச நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 6,692 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். 

இதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் திறமையான பங்களிப்பு இருக்கும் தேர்ச்சி விகிதம் கூடுதலாக அதிகரிக்கும் என்று கல்வி வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நீட் தேர்வைக் குறித்த தவறான பொய்யுரைகளைத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், எடுத்து வைத்தது. நீட் தேர்வை மோடி அரசுதான் கொண்டு வந்தது போலவும், தமிழ் நாட்டு மாணவர்களுக்கு, நீட் தேர்வு எதிரானது போலவும் ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கியது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்ற கட்டுக்கதை தேர்தல் வாக்குறுதியாக தரப்பட்டது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு வராது என்று தேர்வுக்குத் தயாராகாமலிருந்து விட்டனர். வராது ஆனால் வரும், வரும் ஆனால் வராது என்று மாற்றி மாற்றி பேசிய திமுக தலைவர்கள், கடைசி நேரத்தில் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகும்-படி கூறியபோது மாணவர்கள் ஏமாற்றத்தாலும் அச்சத்தாலும் துவண்டு போயினர்.

திமுகவின் வாக்குறுதியை நம்பிய அந்த ஏமாற்றத்தின் தொடர்ச்சியே, இன்று சேலத்தில் மாணவர் தனுஷ், தன் உயிரை மாய்த்துக் கொண்டது. தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவைக் காலம் ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் லாபத்துக்காக அப்பாவி மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் விதத்தில் நீட் எதிர்ப்பாளர் செயல்பாடு அமைந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரானவர்களாக நாடகமாடும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது என்ற உண்மை எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.

2010 டிசம்பர் திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக (Minister of state for Health and Family Welfare) இருந்தார்.

அப்போது திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் மருத்துவக் கல்விக்கான நெறி முறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தார்.

ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் காலத்தில், மருத்துவத் துறை இணை அமைச்சராக  காந்திசெல்வன் இருந்தபோதுதான், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (eligibility cum entrance test) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. அப்போது இந்த நுழைவுத் தீர்வு "Regulations on Graduate Medical Education, 2010" என்று அழைக்கப்பட்டது.

புதிய கொள்கைகளின் படி அடிப்படையில் MCI (Medical Council of India) 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தங்களுடைய பாடத்திட்டத்திற்கும், MCI அறிவித்துள்ள பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் அல்லாத சில மாநிலங்கள் இதை எதிர்த்தன.

மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று மருத்துவத் தகுதி மற்றும் நுழைவு (நீட்)தேர்வு ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

மத்தியில் முதல் முறை பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் 26.05.2014.  முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட நாள் 05.05.2013. அப்போது பாஜக ஆட்சிக்கு வரவே இல்லை. ஆக  நீட் தேர்வைக் கொண்டு வந்து, முதல் தேர்வை நடத்தியது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு.

திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தை, தான், திமுகவின் எம்.பி. அமைச்சராக இருந்தபோது, அதுவும் மருத்துவத்துறை துறையின் அமைச்சராக இருந்தபோது, திமுக கொண்டு வந்த சட்டத்தைத்தான் தற்போது திமுக எதிர்க்கும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

முதல் நீட் தேர்வு 2013ஆம் ஆண்டு மே 5, 2013ல்  நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது மாணவர்கள் இல்லை. பணபலம் மிக்க சில தனியார் மருத்துவக் கல்லூரிகளே. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஜூலை 18, 2013 அன்று  நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு  பல்வேறு மாநிலங்களில் தனியார் கல்லூரிகளில் பலவகையான தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகத் தனித்தனியே பல தேர்வுகளை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆகவே நாடுமுழுவதும் தனித்தனியே பல நுழைவுத்தேர்வு நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது... திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் நீட் தேர்வு வரவேற்கத் தக்கது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை எதிர்த்து சில தனியார் கல்லூரிகள், மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தன. அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே கொண்ட அமர்வு விசாரித்தது.

மூவர் கொண்ட அமர்வில் மூவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும், தவே நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு ஒருமனதான தீர்ப்பாக இல்லாமல் பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமான இந்தத் தீர்ப்பு. 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது.

2014 மே வரை திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வைக் கட்டாயமாக்க நினைத்தது. எனவே நீட் தேர்வு தேவையில்லை என்ற கபீரின் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு  செய்தது திமுக காங்கிரஸ் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான்.  

அதன்பின் அமைந்த மோடி அரசு நீட் தேர்வை இரண்டாண்டுகளாக அமல்படுத்தவில்லை. 

அப்போது உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட  முதல் அறிவிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது.  உச்சநீதிமன்ற உத்தரவால் மோடி ஆட்சியில் நீட் தேர்வு மீண்டும் உயிர் பெற்றது.

பின்னர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களைத் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கி மாநில அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்.

அப்போது தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 85 சதவீத இடம் தரக்கூடாது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடம் தரவேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர்கள்... காங்கிரஸ் சார்புடைய மூத்த வழக்கறிஞரும், திரு.ப.சிதம்பரத்தின் மனைவியுமான திருமதி.நளினி சிதம்பரம், திமுக சார்புடைய,  திமுக அரசில் அட்வகேட் ஜெனராலாகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ஆகியோரும் ஆஜரானார்கள்.

நீட் தேர்வில் 27% பிற்பட்ட வகுப்பினர்களுக்கும், 10% பொருளாதார ரீதியாக பிற்பட்டவர்களுக்கும், 15% பட்டியல் இன (SC) மக்களுக்கும், 7.5% பழங்குடியின (ST) மக்களுக்கும், 5% மாற்றுத் திறனாளிகளுக்கும் என ஒதுக்கப் படுகின்றது. இதில் தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், எந்தவிதக் குந்தகமும் இன்றி, சரியான முறையில், மாணவர்களுக்கு நீட் தேர்வில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

2019 தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகள் (தோராயமாக)

aமொத்தத் தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050
bபொதுப் பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945
(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் (Un Reserved) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரைத் தவிர வேறு பல சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்டவருக்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -1594)
dமிக பிற்படுத்தப்பட்டவருக்கு (MBC) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -720)
e) தாழ்த்தப்பட்டவருக்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(தாழ்த்தப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த மொத்த இடங்கள் -600)
ஆக 2019ல் சமூக வாரியாக தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட MBBS இடங்கள், (iFC-136, (iiBC-1594, (iiiMBC-720, (ivSC/ST-600, சமூக நீதி வழங்கும் நீட் தேர்வை நீக்க முடியுமா?

கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், “நீட் தேர்வை நீக்குவோம்”, என்ற கோரிக்கையைத் தமிழக மக்களிடம் முன் வைத்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில், 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும். நீட் தேர்வை நீக்கி விட்டார்களா..? 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பொய்யைத் திரும்பச் சொன்னார்கள். இந்த வருடமும், நீட் தேர்வு நடைபெறுகின்றது.

சமூக நீதி காக்கும் நீட் தேர்வை,, ஏழை மாணவர்களுக்கு உதவும் நீட் தேர்வை, பணத்தால் மருத்துவப்படிப்பை வாங்க முடியாமல் செய்த நீட் தேர்வை, தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் பெற்றுத் தரும் நீட் தேர்வை,  வேண்டாம் என்று அரசியல் மற்றும், பொருளாதாரக் காரணங்களுக்காக நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று திமுக போன்ற கட்சிகளின் பேச்சைக் கேட்பது நல்லதா என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்.

நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர் கட்சிகள் ஒன்று கூடி வழக்குத் தொடுத்தாலும், நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. நீட் தேர்வு, செப்டம்பர் 12 அன்று, நிச்சயமாக நடைபெறும் என்று வழிகாட்டி உள்ளது. மத்திய அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற ஒற்றை கொள்கையில், மாணவர்கள் நலனுக்கு எதிராக , உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக, பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக, அறிவுடைமையாகுமா என்று சிந்தியுங்கள்.

தேசியக் குடியுரிமைச் சட்டம் எதிர்த்துத் தீர்மானம், விவசாயிகள் நலன் காக்கும் சட்டம் எதிர்த்துத் தீர்மானம், தற்போது நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றுவதால், சிறுபான்மையினருக்கோ, விவசாயிகளுக்கோ, மாணவர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. சட்டமன்றத்தின், காலத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் விரயமாக்கி, தங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி. திமுக தன் கண்களை மூடிக் கொள்ளும். மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

என்றும் தாயகப் பணியில்

உங்க அண்ணா.

K.அண்ணாமலை
மாநிலத்தலைவர்


Monday, September 13, 2021

பாரதி போல் ...புறக்கணிக்க இயலா உச்சம் தொடுவோம்..

 நீட் தேர்வை வைத்து இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில்  பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணியின் பின் வரும் சுய வாக்குமூலம்... அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரு கருத்தாய் நினைத்து

மிக கவனமாக படியுங்கள்.. சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்.!

👇👇👇


95% மார்க் வாங்கியும், பிராமணன் என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! 


மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!  


95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! 


அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! 


எனவே அது 'நீட்' டோ, JEE யோ... 


கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!  


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! 


அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! 


படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு...  


எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...


பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... 


தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! 


"பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! 


ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக  Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து,  உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited. 


Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country.


எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக  துரோகமிழைத்தில்லை.  இவை அனைத்தும்  ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம்.


வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம்.


My husband Quote:


தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet.


இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.


ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.....


Thanks : Lakshmanan Sankarasubramanian 

Courtesy : Gayathri Sampathkumar

Friday, September 10, 2021

நல்லதோர் வீணையாய்..

 


"

நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Thursday, September 9, 2021

உலக தற்கொலை தடுப்புத் தினம்.


 இன்று செப்டம்பர் 10


உலக தற்கொலை தடுப்பு தினம்.


     தற்கொலை எண்ணம் தோன்றினால் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஊட்டவும், உணர்ச்சிகளின் சாராம்சங்களில் சிக்கிக் கொண்டு, தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களை தடுக்கும் நோக்கிலும், செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

      உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

       இன்றும் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார் என்கிறது ஆய்வு.

      தமிழகத்தைப் பொருத்தவரை தற்கொலை விகிதம் 11.8 சதவீதமாக உள்ளது. 

      15 முதல் 30 வயதிற்குள்ளான

வர்களுக்கு பரவலாக ஏற்படும் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், சமூகத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படுவது, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மையை இழந்தவர்களுக்கு தற்கொலை எண்ணமே முதலில் தோன்றுவதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

      தற்கொலை உணர்வோடு யாரேனும் இருக்கும்போதோ அல்லது தங்களது உணர்வை வெளிப்படுத்தும்

போதோ அவர்களை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் உதவியுடன் அல்லது பரிந்துரையாளர்கள் மூலமாக உரிய சிகிச்சையளித்து அவர்களின் மனதை மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

     வாழ்வில் பிரச்சனைகள் இல்லாத மனிதரே இல்லை, அதை  கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கும் போது அது உலகத்தையே மறைத்துவிடும், அதையே சற்று தள்ளிவைத்து பாருங்கள் அது என்ன என்பது நம் மனதிற்கு விளங்கும்.அதை தூக்கி கால்களுக்கு கீழே எறிந்துவிடுங்கள்.   

கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள்.

இருப்பதைக் கொண்டுத் தொழுவோம் வேண்டுவன எல்லாம் பெறுவோம்

 எந்த மதக் கடவுளாயினும்

இப்படித்தான் இருக்கவேண்டும் என

ஒரு நியதி உண்டு


இராமன் என்றால்

வில்லேந்தியபடி....


கண்ணன் என்றால்

குழலேந்தியபடி..


ஏசு என்றால்

சிலுவையில் இருக்கும்படி


அல்லா என்றால்

உருவமே இல்லாதபடி


அந்தக் காலத்தவர்களாகவே

ஆம் நிலையான வடிவிலேயே

இருந்துதான் ஆகவேண்டும்


மாறுதல் இருப்பின்

மனம்  மறுப்பளித்துவிடும்


நம் வினாயகன் மட்டுமே

ஈசன் மடியில் இருக்கும் படியும்

இரு சக்கர வாகனம் ஓட்டியபடியும்.

இருக்கச் சாத்தியம்


வேறு எந்தக் கடவுளாயினும்

அதற்கான இடத்தில்

அதற்குரிய பாவனைகளுடனே

இருக்கச் சாத்தியம்


நம் கணபதிக்கு மட்டுமே

கோவிலிலும் சாத்தியம்

தெருவோரமும் சாத்தியம்


பிற தெய்வங்கள்

செதுக்கி வைத்தால் மட்டுமே

விக்ரகமாகி அருள் தரச் சாத்தியம் 


நம் பிள்ளையாரே

சந்தனத்தில் மஞ்சளில் மட்டுமின்றி

களிமண்ணிலுக் கூட விக்ரமாகி

அருள் தரச் சாத்தியம்


இப்படி

பாமரனுக்கு

யானை முகத்தோனாய்

பண்டிதனுக்கு

ஓம் வடிவினனாய்


எல்லோருக்கும்

எற்றவனாய்

எங்கும் நிறைந்தவனை


இன்று இருப்பதைக் கொண்டுத்தொழுவோம்  அவன் ஏற்றுக் கொள்வான்                               என்றும் வேண்டுவன எல்லாம் பெறுவோம்     அவன் நிறைவாய்த் தருவான்.