Sunday, November 14, 2021
சூரியா...ஜாதி வன்மம் பிடித்தவரே..
இது வன்முறை போலத்தான் படும்..படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு ஒரு மோசமான கதாபாத்திரத்துக்கு மட்டும் வேறு பெயரை வைத்து அதுவும் வன்னியர் தலைவராக இருந்த ஒருவரின் வைத்தது...இவ்வளவு எதிர்ப்பு வந்தும் மாற்றாமல் கம்னியூஸ்டுகள் நல்லவர்கள் வல்லவர்கள் என பேட்டிக் கொடுப்பது..இதற்கு மட்டும் பதில் சொல்லாமல் தெனாவெட்டாகத் திரிகிறவருக்கு வேறு எப்படி ரெஸ்பாண்ட் செய்வது..இதைச் சொன்னவருக்கு மிதிப்பது என்பது நோக்கம் இல்லை..நிச்சயம்இதை எதிர்த்து வன்முறை என கோர்ட்டுக்குப் போனால் கோர்ட் நிச்சயம் இதை நீக்கவே சொல்லும்..இது ஜாதியை வைத்து கல்லாக்கட்ட நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாகவே அமையும்...பதினாறு வகை காய்கறி வைத்து ஓரத்தில் கொஞ்சம் மலம் வைத்த கதையாய் ஒரு அற்புதமான படம் எடுத்து அதில் தன் ஜாதி வன்மத்தை காட்டிய சூரியா அவர் மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் எனத்தான் எனக்குப்படுகிறது..(இதிலெல்லாம் ஒன்றுமில்லை என சூரியா நினைப்பார் ஆயின் அந்த வில்லன் பெயரை அவர் ஜாதி சார்ந்த தலைவரின் பெயரை வைத்து நிரூபிக்கலாம்..)
Saturday, November 13, 2021
கொடுமையிலும் கொடுமை என்பது...
மனம் வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும்போது கூட அந்த நாயை என எழுதாமல் அந்த சார் என எழுதி வைத்துப் போகும் மாணவியை நினைக்க கண்கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..
Friday, November 12, 2021
இசை அரசி.பி.சுசிலா
.... *'பி. சுசீலா'* அல்லது *புலப்பாக்க சுசீலா* *(பிறப்பு: நவம்பர் 13, 1935)* இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப், பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக *25,000* பாடல்களுக்கு
மேல் பாடி, கோடானு கோடி ரசிகர்களின் இதயங்களில்
குடி கொண்டுள்ளார்.
சுசீலா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் *புலப்பாக்க முந்தராவ் - சிறீசம்மா* தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சுசீலாவுக்கு 5
சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். இவரது தந்தை
ஒரு வக்கீல்லாக இருந்தார். சுசிலா அங்குள்ள பெண்கள் உயர்நிலைப்
பள்ளியில் கல்வி பயின்றார். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை
மேதையான, துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக
இசை பயின்றார்.
சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் *”பாப்பா மலர்”* நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத்
திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ், தனது
*’பெற்றதாய்’* படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த அப்படத்தில் ஏ.எம்.ராஜாவுடன்
இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில்,
*”ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு”* என்று துவங்கும் பாடலைப் பாடினார்.
1953 ஆம் ஆண்டில் சிவாஜி நடித்த *‘அன்பு’* படத்தில் பாடுவதற்கு
இப்படத்தின் இசையமைபாளர் டி.ஆர்.பாப்பா இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார். ஆனால் சுசிலாவின் தமிழ் உச்சரிப்பு சரியாக
அமையாத காரணத்தால் அப்படத்தில் பாடும் வாய்ப்பை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில், எஸ்.ராமராவ் இசையில், *'மனம்போல் மாங்கல்யம்'* படத்தில்,
*‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’* என்றப் பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த *'கணவனே கண் கண்ட தெய்வம்'*
படத்தில் இடம்பெற்ற *”எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்”*,
என்ற பாடலும் *“உன்னைக் கண் தேடுதே”* என்றப் பாடலும்
இவரது இனிய குரலில் மிகவும் புகழ் பெற்றதோடு இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. ஆர்.சுதர்சனம் இசையமைத்த
*"டொக்டர்"* என்ற சிங்களப் படத்திலும் சுசிலா பாடியுள்ளார்.
டி.எம்.சௌந்திர ராஜனோடு இணைந்து முதன் முதலாக, 1955 இல்
*‘செல்லப்பிள்ளை’* படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் சுசிலா
பாடினார். இதனைத் தொடர்ந்து 1956 இல் *‘பெண்ணின் பெருமை’* படம் உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் சௌந்திரராஜனோடு
இணைந்து சுசிலா பாடினார். இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் எண்ணற்றப் பாடல்கள் ரசிகர்களின் ஏகோபித்த
வரவேற்பைப் பெற்றவையாகும்.
சுசிலா, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, டி.ஏ.மோதி, ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், பி.பி.ஸ்ரீனிவாஸ்
பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ்,
மலேசிய வாசுதேவன், ஜெயசந்திரன் போன்ற ஏராளமானப்
பாடகர்களுடன் இணைந்தும் தனித்தும் காதுக்கினிய கானங்கள்
பலவற்றை காணிக்கையாக்கியிருப்பது ஒரு சாதனையாகப்
போற்றப்படுகிறது.
தவிரவும் பழம்பெரு இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் தொடங்கி, பல்வேறு மொழிகளின் இசையமைப்பாளர்களின்
இசையமைப்பில் இவர் அழியாப் பாடல்கள் பலவற்றைப் பாடி
உலகெங்கிலுமுள்ள இவரது அபிமான ரசிகர்களுக்கு இன்ப
இசை விருந்து படைத்திருப்பதை சாதாரணமாகக்
கருதுவதற்கில்லை. தனித்துவமான தனது இனியக் குரலால்,
இதயங்களை ஈர்க்கும் வசீகரத் தன்மை சுசிலாவிடம் குடி கொண்டிருந்தது.
*’அமுதைப் பொழியும் நிலவே’, ’மன்னவன் வந்தானடி தோழி'*,
*‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ’அழைக்காதே நினைக்காதே’*,
*‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’*, *’நாளை இந்த வேளை பார்த்து’*, *‘ஒருநாள் யாரோ’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’*,
*’ஆலயமணியின் ஓசையை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’*,
*‘அழகே வா அருகே வா’*, *‘என்னை மறந்ததேன் தென்றலே’*,
*‘இதுதான் உலகமா’*, *‘என் வேதனையில் உன் கண்ணிரண்டும்’*,
போன்றப் பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா
இடம் பெற்றவை.
இவர் தாம் பாடிய பலப் பாடல்களுக்கு ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த *’சில நேரங்களில்’* என்ற திரைப் படத்தில்
*“பொட்டு வைத்த”* என்றப் பாடலைப் பாடியிருந்தார்.
1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரை சுசிலா
திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். வயது முதிர்ச்சியால் சுசிலா தற்போது திரைப்
படங்களில் பாடுகின்ற வாய்ப்பை இழந்து விட்டாலும், அவர்
ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு
விருந்தினராகவும் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Thursday, November 11, 2021
நிஜ நடிகர் சூரியாவுக்கு
தனிநபர் யாரையும் குறிப்பிடுவன அல்ல எனச் சொல்லிக் கொண்டு ஏன் நீதிபதிஅவர்களை இறுதியில் புரொமோட் செய்கிறீர்கள்...எல்லோருடைய உண்மைப் பெயரைப் பயன்படுத்திவிட்டு வில்லனுக்கு மட்டும் பெயர் மாற்றி பம்மாத்து செய்கிறீர்கள்..முற்படுத்தப்பட்டவர்கள் என்றால் அவர் சிறப்பானவர் என்றால் அதை அப்படியே சொல்ல மனம் வராது..பிணம் முன் டான்ஸ் ஆடவிட்டு அவரை அறிமுகத்திலேயே வேறுமாதிரி காட்டி ஏன் மட்டரக ஜாதிஅரசியல் செய்கிறீர்கள்..சாரி சூர்யா சார் உங்கள் சமூகப் போராளி ஒப்பனைகள் சரியாகப் பொருந்தவில்லை..சரிசெய்யப் பாருங்கள்..
Monday, November 8, 2021
சாதம் பிரசாதமாகிறது..
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை..இந்துக்கள் தண்ணீர் தெளித்தால் பிரசாதம்...இவர்கள் இப்படிச் செய்தால்...அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு உசத்தி..






