Wednesday, October 31, 2012

வரம் வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு  நகர்வதில்லை

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

43 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

/// வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு நகர்வதில்லை ///

மிகவும் பிடித்த நம்பிக்கை வரிகள்...

நன்றி...
tm3

குறையொன்றுமில்லை. said...

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

ரொம்ப நல்லா இருக்கு கவிதை

Avargal Unmaigal said...

அருமை அருமை.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

ஆத்மா said...

ஆரம்பத்திலிருந்தே ரசித்துப் படித்தேன்(4)

சசிகலா said...

நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை....
நிறைவானது மனமும். நன்றி ஐயா.

ananthako said...


கலைவாணி அருளுக்கு குறைவில்லை .அருமை.ananthako.blogspot.com

மாதேவி said...

அருமையான கவிதை.
"வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் " ...

Anonymous said...

வாணி தான் வந்தே தங்கள் வாயிற்படியில்
தவம் இருக்கிறாள் போலும் .....அருமை !

Unknown said...

// போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை//

நல்ல சிந்தனை! தெளுவான கருத்தோட்டம்! கவிதை சிறப்பாக உள்ளது!

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை.

RAMA RAVI (RAMVI) said...

//நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை//

நிறைவான வரிகள். சிறப்பான கவிதை.

ராஜி said...

கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை
>>>
மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஐயா!

semmalai akash said...

ஒவ்வொரு வரிகளையும் இரண்டு இரண்டுமுறை படித்து மிகவும் ரசித்தேன், அற்புதமான வரிகள்.

”தளிர் சுரேஷ்” said...

கலைவாணி அருள் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்! மிகச் சிறப்பான படைப்பு! மிகவும் ரசித்தேன்! நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...

//வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை//

கம்பருக்கு அருள் செய்த கலைவாணி அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர். – கம்பர் (தனிப் பாடல்)

கரந்தை ஜெயக்குமார் said...

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-
....
அற்புதமான வரிகள் அய்யா, நன்றி

G.M Balasubramaniam said...


ரசித்துப் படித்த கவிதை வரிகள்.....எல்லாம்தான். வாழ்த்துக்கள்.

raji said...

//வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்//

இதனால்தான் உங்கள் படைப்புகள் பலமுள்ளதாக இருக்கிறது. நல்ல பகிர்வு.

Unknown said...

முத்திரைக் கவிதை!

நன்று! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. ரசித்தேன்.

சுதா SJ said...

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை///

உங்கள் திறமைக்கு இது என்ன இதை விட சாத்தியமே....
அருமையான கவிதை....
நம்பிக்கை விதையை மனசில் விதைக்கும் கவிதை :))))

ஸ்ரீராம். said...

குறிப்பாக மூன்றாவது பாரா [சரணம் என்று சொல்லணுமோ? கவிதை(யிலும்)ல நான் கொஞ்சம் வீக்கு!], ஐந்தாவதும் கவர்கின்றன.

பால கணேஷ் said...

வரம் வேண்டா தவம்... என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு கலைவாணியின் அருள் என்றும் குறைவுபடாது நண்பரே. அருமை.

ஆர்.வி. ராஜி said...

மிகவும் அருமையான கவிதை.

குட்டன்ஜி said...

ஸ்திதப்ரஞன்!
அருமை
த.ம.13

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

வழக்கம்போல் தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

ரொம்ப நல்லா இருக்கு கவிதை //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

அருமை அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி //

ரசித்தேன்.//

தங்கள் வாழ்த்து "படி"த்தேன்

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

ஆரம்பத்திலிருந்தே ரசித்துப் படித்தேன்//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala s//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sethuraman Anandakrishnan //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

அருமையான கவிதை.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

நல்ல சிந்தனை! தெளுவான கருத்தோட்டம்! கவிதை சிறப்பாக உள்ளது! //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் // //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

நல்லதொரு கவிதை.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //


நிறைவான வரிகள். சிறப்பான கவிதை.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

adadaa...

அப்பாதுரை said...

கலைவாணிக்கு உங்கள் அருள்.

Post a Comment