Friday, November 2, 2012

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
இன்றே ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
சிறிதால் ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

40 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்...

நன்றி...
tm2

முனைவர் இரா.குணசீலன் said...

பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
சாதாரணமான மனிதனும்
சாதனை மனிதனாகலாம் என்பதை அழகாகச் சொன்னீர் கள் அன்பரே.

geevanathy said...

அருமையான வரிகள்

கரந்தை ஜெயக்குமார் said...

சோம்பேறியைக் கூட சுறுசுறுப்பாளனாய் மாற்றும் நம்பிக்கை வரிகள் அய்யா. நன்றி

Yaathoramani.blogspot.com said...திண்டுக்கல் தனபாலன் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
சாதாரணமான மனிதனும்
சாதனை மனிதனாகலாம் என்பதை அழகாகச் சொன்னீர் கள் அன்பரே.//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தங்கராசா ஜீவராஜ் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் s

சோம்பேறியைக் கூட சுறுசுறுப்பாளனாய் மாற்றும் நம்பிக்கை வரிகள் அய்யா. நன்றி//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

ஆமாம் உற்சாகமூட்டும் வரிகள். சோர்ந்த மனதுக்கு டானிக் போன்றது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்..

அகல் said...

//ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய பொருட்கள் எல்லாம்
சிறிதால் ஆனது //

மெய் சிலிர்க்கும் வரிகள் ஐயா அருமை அருமை..

கதம்ப உணர்வுகள் said...

எல்லோருக்கும் இந்த காலக்கட்டத்தில் மிக மிக அவசியமான உத்வேகத்துடன் முன்னேற ஊக்குவிக்கும் வரிகள் அமைத்த கவிதை அசத்தல் ரமணிசார்... தலைப்பே நெஞ்சு நிமிர்த்தவைக்கிறது.... வெற்றி வெற்றியே...

வெற்றியைப்பெற சிகரம் தொட்டுவிட எடுத்ததுமே அகலக்கால் வைத்து அதளபாதாளத்தில் விழுந்துவிடாமல் பத்திரமாக ஒவ்வொரு அடியாக சின்ன சின்ன அடியாக எடுத்துவைத்து கிடைப்பது வெற்றி என்றால் அடுத்த அடி சந்தோஷத்துடன்… அடி சறுக்கினால் சின்ன அடி என்பதால் படும் அடி அத்தனை வலிக்காது துடைத்துக்கொண்டு இன்னும் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு அழுத்தமாக அடி எடுத்து வைத்து… அழுகையை புறம் ஒதுக்கி வலியை உள்ளடக்கி வெற்றி மட்டுமே குறிக்கோளாய் வைத்து தொடரவேண்டும் நடையை…

குழப்பம் மனதில் வர இடம் கொடுத்துவிட்டால் நாம் செல்லும் வழியில் எடுத்துவைக்கும் அடியில் தெளிவு கலங்கலாகிவிடும்… குழப்பமில்லாது எடுத்துவைக்கும் அடி வெற்றிக்கு வழி வகுக்கும் என்று முதல் பத்திச்சொல்கிறது ரமணி சார்….

கதம்ப உணர்வுகள் said...

த.ம.5

உலகம் தோன்றியதும்…. மெல்ல மெல்ல ஜீவராசிகள் ஒவ்வொன்றாய் உருவானதும் பின் பறவைகளும் மிருகங்களும் பரிணாம வளர்ச்சியால் மனிதன் உருவானதும்…. எதுவுமே எடுத்ததும் கிடைத்துவிடுவதில்லை… அப்படி எளிதாய் கிடைப்பது எதிலும் வெற்றியின் தடம் இருப்பதில்லை… நிலைப்பதும் இல்லை…

எதற்கும் ஆரம்பம் என்னும் அடித்தளம் அசைக்கமுடியாத உறுதியாக இருக்கும்போது அதன்மேல் எழுப்பப்படும் கட்டடங்களான முயற்சிகள் சிகரத்தின் உச்சியைத்தொட எளிதாகிவிடுகிறது…. ஒரு துளியில் இருந்து தொடங்கும் முயற்சி தான் பெரும் கடலின் சங்கமத்தில் முடிவது… என்று சொல்லி இருக்கும் இரண்டாவது பத்தி சிந்தனைத்தளிரை வளர்க்கிறது ரமணிசார்….

மூன்றாவது பத்தி மிக அழகிய கருத்தை சொல்கிறது உவமையுடன் சேர்த்து….முயலும் தோற்கலாம் தன் முன்னேற்றத்தில் சோம்பலாய் முயற்சிக்காமல் இருப்பதால் ஆமையும் தோற்கலாம் சில சமயம் எதிர்ப்பாராத தோல்விகளால்….

ஆனால் எந்த சமயத்திலும் முயற்சியை மட்டும் கைவிடாமல் இருக்கவேண்டும் என்பதை முயலும் தோற்கலாம் ஆமையும் தோற்கலாம் ஆனால் முயலாமை மட்டும் இருக்கக்கூடாது…. முயன்றால் தான் வெற்றி அல்லது அனுபவம்…. முயலாமல் இருந்தால் சோம்பேறித்தனமும் தோல்வியும் மட்டுமே நிலைத்துவிடும் என்று சொல்லும் மிக அருமையான வரிகள் அமைத்த பத்தி ரமணிசார்….


முயன்றால் மலையை சிறு உளியும் பெயர்க்கும்… முடிந்தால் சின்ன வேர்களும் மரத்தை பல்லாண்டு காலம் தாங்கியும் நிற்கும்… எல்லாத்துக்குமே முயற்சி முதன்மையாக முக்கியம் என்பதை அறிவுறுத்துகிறது…
வெற்றியை ஒரு முறை ருசித்ததும்…. ஓய்ந்து உட்கார்ந்துவிட்டால் காத்திருக்கும் தோல்வி வந்து ஒட்டிக்கொள்ளும் அடுத்த இன்னிங்ஸில்….

வெற்றியை எட்டிப்பிடித்து அதை தக்கவைத்துக்கொள்ள தொடரும் முயற்சி ஒருபோதும் தோல்வியின் பக்கம் நம்மை துவண்டுபோகாமல் செய்து வெற்றியின் பாதையில் நடக்கவைத்து வெற்றியின் இலக்கை மாற்றாது தொடரும் என்று எல்லோரையும் ஊக்கப்படுத்திய அருமையான வரிகள் பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரமணிசார்….

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பலமுறை என்மின்வலைக்கு வருகைதந்து கருத்து அளித்தமைக்கு மிக்க நன்றி!

11.11.2012 கம்பன் விழா நடைபெறவுள்ளதால் வேலைகள் நிறைந்துள்ளதால் உங்கள் வலைக்குத் தொடா்ந்து வரமுடியவில்லை! விழா நிறைவுற்றதும் நாளும் வந்து நற்றமிழ் பருகுவேன்.

சின்ன சின்ன மலரைச் சோ்த்துச்
செய்த மாலைபோல்
மின்ன மின்னக் கவிதை பாடும்
மேன்மை தொடா்கவே!

நண்பா் ரமணி நவின்ற கருத்தை
நன்கு போற்றுவோம்!
அன்பா் என்றே அகிலம் அழைக்க
அருளை ஏற்றுவோம்!

வெற்றி வந்து பற்றிப் படர
வேண்டும் முயற்சியே!
வற்றி வரண்ட வாழ்வை மாற்று!
வளரும் மகிழ்ச்சியே!

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

ஆமாம் உற்சாகமூட்டும் வரிகள். சோர்ந்த மனதுக்கு டானிக் போன்றது.
நல்வாழ்த்து.//

தங்கள் பின்னூட்டமும் என்போன்றோருக்கு
நல்ல டானிக்தான்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகல் //


மெய் சிலிர்க்கும் வரிகள் ஐயா அருமை அருமை..//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

ஜெயகாந்தன் கதைகளில் அவரது கதையை விட
அவர் அந்தக் கதைக்கு எழுதியுள்ள முன்னுரை
மிகப் பிரமாதமாக இருக்கும்.என் பதிவுகளை விட
தங்கள் பின்னூட்டமே மிகச் சிறந்ததாய் இருக்கிறது
தங்கள் பின்னூட்டத்தின் மூலம் நான் பல
விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான அழகான பின்னட்டத்தீற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி //


ரசித்தேன்.//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

பல்வேறு சீரிய பணிக்கிடையில்
சிறியேனின் பதிவுக்கு வருகை புரிந்தமைக்கும்
அருமையான கவிதை மூலம் பின்னூட்டமளித்து
சிறப்பித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய பொருட்கள் எல்லாம்
சிறிதால் ஆனது //

நம்பிக்கையூட்டும் வரிகள். சிறப்பான கவிதை.

த.ம. 6

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் s//

நம்பிக்கையூட்டும் வரிகள். சிறப்பான கவிதை.//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

மிகச் சிறந்த கருத்துக்கள் அடங்கிய பதிவு அதுமட்டுமல்லாமல் அதற்கு மஞ்சு சுபாஷினி அவர்கள் எழுதிய விளக்கமும் மிக அருமை ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல உள்ளது

Ganpat said...

அப்படியே பாட புத்தகத்தில் சேர்த்து விடும் அளவிற்கு தரமானது.முயற்சி ஒன்றே நம் செயல் .வெற்றி தோல்வி "அவன்" செயல் என்பதும் இதன் மூலம் விளக்கப்படுகிறது.
நன்றி ரமணி ஸார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

ஆத்மா said...

அழகான வரிகள்
டிசம்பர் உலக அழிவு பற்றி பேசுபவர்கள் ஒரு முறை இதையும் படிக்க வேண்டும்

ADHI VENKAT said...

அருமையான ஊக்கமூட்டும் வரிகள் சார். பகிர்வுக்கு நன்றி.

த.ம.9

தி.தமிழ் இளங்கோ said...

வாமன அவதாரத்தில் முதல் அடி சின்ன அடிதான். அடுத்த அடியை தொடருங்கள்.

கதம்ப உணர்வுகள் said...

//மஞ்சுபாஷிணி //

ஜெயகாந்தன் கதைகளில் அவரது கதையை விட
அவர் அந்தக் கதைக்கு எழுதியுள்ள முன்னுரை
மிகப் பிரமாதமாக இருக்கும்.என் பதிவுகளை விட
தங்கள் பின்னூட்டமே மிகச் சிறந்ததாய் இருக்கிறது
தங்கள் பின்னூட்டத்தின் மூலம் நான் பல
விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான அழகான பின்னட்டத்தீற்கும்
மனமார்ந்த நன்றி//

மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்...

கதம்ப உணர்வுகள் said...

//Avargal Unmaigal said...
மிகச் சிறந்த கருத்துக்கள் அடங்கிய பதிவு அதுமட்டுமல்லாமல் அதற்கு மஞ்சு சுபாஷினி அவர்கள் எழுதிய விளக்கமும் மிக அருமை ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல உள்ளது//

மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

சசிகலா said...

ஐயாவின் வரிகளோடு மஞ்சு அக்காவின் விரிவான விளக்கமும் படித்து மகிழ்ந்தேன்.


அக்கா ஐயாவிற்கு நன்றி.

kowsy said...

எவ்வளவு பெரிய கருத்தை மிகச் சாதாரணமாக சொல்லி இருக்கின்றீர்கள் .இதைத்தானே முடியாதது உலகத்தில் எதுவும் இல்லை என்பது. நாம் தூங்குவதனால் பிறர் விழிக்கின்றார் முற்றிலும் உண்மை . நம்பிக்கை ஊட்டும் வரிகள் .

”தளிர் சுரேஷ்” said...

தன்னம்பிக்கை கவிதை! சிறப்பான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!

கவியாழி said...

சிகரத்தில் நின்று செய்தி சொவதுபோல் உள்ளது அருமை

vimalanperali said...

வெற்றி தொடரும்,வாழ்த்துக்கள்.

Unknown said...// வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே //

பாடலுக்கு ஏற்ற சந்தம்
பாடத் தோன்றுதே
ஏடறிய வலை வந்தும்
என்னுள் ஊன்றுதே
தேடரிய மூலிகை போல்
தினமும் வருகுதே
நாடறிய செய்வத னால்
நட்பு பெருகுதே

காரஞ்சன் சிந்தனைகள் said...

ஒவ்வொரு அடியும் அருமை! புலவர் ஐயாவின் கருத்துரையில் கவிதையும் அருமை!

Kumaran said...

மிக எளிமையாக சொல்லப்பட்ட அற்புதமான கருத்து. இங்கு சிறுவர்கள் என்று நீங்கள் கூறுவது முன்னேற முயற்சிக்கத் தயங்கும் "சிறியவர்"களையா?

Seeni said...

azhau ayyaa!

நம்பிக்கைபாண்டியன் said...

///ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது///

நல்ல வரிகள்

அப்பாதுரை said...

எளிமையாக இருக்கிறதே - என் போல் சிறுவருக்கும் உதவும்.

Post a Comment