Wednesday, November 7, 2012

விளங்குவதும் விளங்காததும்

தனித்துவமும் ஜன ரஞ்சகமும்
நேர் எதிரானவைகளாக இருப்பதைப் போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவேத்  திரிகின்றன

 பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் விளங்க

சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத்   தெரியாதவனாகவும்
உலகுக்கு "  விளங்காத "வனாகத்தான்  தெரிகிறான்

 ஆயினும் என்ன
 கால  நெருப்பு தீண்டுகையில்

விளங்கியவன் படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது  போக

 விளங்காதவன் படைப்போ
 சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை  கொண்டு
ஒளி விளக்காய்  விளங்கத்தான்   செய்கிறது

என்ன செய்வது 
 காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன்   கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண்  மயிலுக்கும்  
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
விளங்கித் தொலைக்கிறது 


38 comments:

sury siva said...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் சிந்தனை
மனிதனிடமிருந்து நழுவிச் செல்கிறதோ என்ற‌
ஐயம் தோன்றாமல் இல்லை.

உங்கள் வேதனை புரிகிறது.

இலக்கியத்தின் கால வெள்ளத்தில்
இலக்கணங்கள் தவறலாம்.
இலக்குகள் தவறலாமோ ?


சுப்பு தாத்தா.

Avargal Unmaigal said...

நீங்கள் சொல்லியது மிக மிக உண்மைதான்

Avargal Unmaigal said...

யூஸ் அண்ட் த்துரோவ் காலம் இது டீ குடிக்க அவர்களுக்கு வெள்ளி டம்ளர் தேவையில்லை பளபளப்பான பிளாஷ்டிக் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது

Anonymous said...

நிதர்சனமான உண்மை சுடுகிறது !
ஆவி நீங்கிய பின்பாவது அடையாளம் வந்ததே
என ஆறுதல் அடைய வேண்டுமென்று
விளங்கிக் கொண்டேன்.

Yaathoramani.blogspot.com said...



sury Siva //

. இலக்கியத்தின் கால வெள்ளத்தில்
இலக்கணங்கள் தவறலாம்.
இலக்குகள் தவறலாமோ ?//

அந்த ஆதங்கத்தில் எழுதியதுதான் இது
தங்கள் முதல் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நீங்கள் சொல்லியது மிக மிக உண்மைதான் //


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

யூஸ் அண்ட் த்துரோவ் காலம் இது டீ குடிக்க அவர்களுக்கு வெள்ளி டம்ளர் தேவையில்லை பளபளப்பான பிளாஷ்டிக் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது //

மிகச் சரியான கருத்து
வெள்ளி டம்ப்ளர் கூட வேண்டாம்
அடுத்து ஒருமுறையேனும் பயன்படுத்தக் கூடிய பொருளாக்
இருந்தால் நல்லது என்பதே இப்போது அனைவரின்
ஆதங்கமும்

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

நிதர்சனமான உண்மை சுடுகிறது !
ஆவி நீங்கிய பின்பாவது அடையாளம் வந்ததே
என ஆறுதல் அடைய வேண்டுமென்று
விளங்கிக் கொண்டேன்.//

மிகச் சரியான கருத்து


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

என்ன செய்வது
காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன் கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண் மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
விளங்கித் தொலைக்கிறது

அழகாகச்சொன்னீர்கள் நண்பரே..
இந்தக் கவிதையை இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு நன்றியுடன் தெரிவுசெய்துள்ளேன்.

நன்றி.

சசிகலா said...

என்ன செய்வது
காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன் கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண் மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
விளங்கித் தொலைக்கிறது.

ஆதங்க வரிகள். அழுத்தமாக உணர்த்துகிறது ஐயா.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நல்லனவை நிச்சயம் அடையாளங்காணப்படும் ஒரு நாள். நல்ல பதிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆதங்க வரிகள்... உணர வேண்டிய வரிகள்...
tm3

மாலதி said...

விளங்காதவன் படைப்போ
சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை கொண்டு
ஒளி விளக்காய் விளங்கத்தான் செய்கிறது//உண்மைதான். நல்ல பதிவு

G.M Balasubramaniam said...


நானெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி. ?( ஐ மீன் என் படைப்புகள்.) சுய சோதனை செய்ய வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.

பால கணேஷ் said...

நிதர்சனம் உங்கள் வரிகளில் ஒளிர்கிறது. பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டத்தை எண்ணுகையில் உங்கள் கருத்துகளின் பொருள் உரத்து ஒலிக்கிறது ஸார்.

மாதேவி said...

உண்மை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

vimalanperali said...

விளங்குகிற வித்தியாசங்கள் தாமதமாக்கிப்போகிறதுதான் பலவேளைகளில்.அப்படியான தாமதங்கள் பலவற்றை இழக்க செய்தும்,நீர்த்துப்போகச்செய்து விடுவதுமுண்டு./

”தளிர் சுரேஷ்” said...

நல்ல தொரு கவிதை! திறமையானவன் வெளிச்சத்திற்கு வருவது காலமாகிறது என்பது உண்மையான ஒன்று! அருமை!

மகேந்திரன் said...

வணக்கம் ஐயா
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகிறேன்...

அருமையான படைப்பு....
நிதர்சனத்தை
ஓங்கி உரைக்கிறது வரிகள்..
அருமை அருமை...

ஆத்மா said...

சின்னச் சின்ன விடயங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்...
ஆனால் இது நீங்கள் செதுக்கிய பின் சின்னதாய் தெரியவில்லை இதுவே இன்றைய உலகில் பிரதான விடயமாகத் தெரிகிறது (6)

சிகரம் பாரதி said...

Unmai anna. Naanum idhupola ninaiththu pala thadavai manam kumuri irukkiren. Enakkagave eludhappatta kavidhai pol irukkiradhu. Mikka nandri. Pls visit my site:
http://newsigaram.blogspot.com

விச்சு said...

திறமையை வெளியே உள்ளவர்கள் உணர்வதற்கு காலதாமதமாகிறது. சிலநேரம் உணரப்படாமலும் சென்றுவிடுகிறது.

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

அழகாகச்சொன்னீர்கள் நண்பரே..
இந்தக் கவிதையை இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு நன்றியுடன் தெரிவுசெய்துள்ளேன்.//

மிக்க நன்றி
தங்களால் என் பதிவு கவனிக்கப் படுவதையும்
அறிமுகப் படுத்தப் படுவதையும் பெரும்பேறாகக்
கருதுகிறேன் தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

ஆதங்க வரிகள். அழுத்தமாக உணர்த்துகிறது ஐயா.//

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

நல்லனவை நிச்சயம் அடையாளங்காணப்படும் ஒரு நாள். நல்ல பதிவு.//

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

ஆதங்க வரிகள்... உணர வேண்டிய வரிகள்...//

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

உண்மைதான். நல்ல பதிவு //

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //


நானெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி. ?( ஐ மீன் என் படைப்புகள்.) சுய சோதனை செய்ய வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.//

தங்கள் பதிவுகள் என் போல் பலருக்கு
வழிகாட்டியாகவும் உற்சாகமூட்டுவதாகவும்
உள்ளது .ருசியாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு
உகந்ததுமான உணவை சமைக்கத் தெரிந்தவர்கள்
சிலர்தான் இருக்கிறார்கள் தங்களைப் போல.
எனவே தொடர்ந்து பதிவுகள் தர அனபுடன்
வேண்டுகிறேன்.தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டத்தை எண்ணுகையில் உங்கள் கருத்துகளின் பொருள் உரத்து ஒலிக்கிறது ஸார்.//

அருமையாகச் சொன்னீர்கள்
மகா கவியின் துணைவியாரின் பேட்டியை
சுந்தர்ஜி அவர்களின் பதிவில் படித்த பாதிப்பில்தான்
இதை எழுதினேன்.மிகச் சரியாக நாடி பிடித்துச் சொன்னது
மகிழ்வளிக்கிறது. வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

உண்மை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


அப்பாதுரை said...

'விளங்கு' என்ற சொல்லை வைத்து விளையாடியிருக்கிறீர்கள். கடைசி வரிகள் உலகின் எந்த உண்மைக்கும் பொருந்தும். காலம் கடந்த புரிதலே உலக சாதனைகளின் இலக்கணம்.

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

விளங்குகிற வித்தியாசங்கள் தாமதமாக்கிப்போகிறதுதான் பலவேளைகளில்.அப்படியான தாமதங்கள் பலவற்றை இழக்க செய்தும்,நீர்த்துப்போகச்செய்து விடுவதுமுண்டு./


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

நல்ல தொரு கவிதை! திறமையானவன் வெளிச்சத்திற்கு வருவது காலமாகிறது என்பது உண்மையான ஒன்று! அருமை!//


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

அருமையான படைப்பு....
நிதர்சனத்தை
ஓங்கி உரைக்கிறது வரிகள்..
அருமை அருமை...//


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

சின்னச் சின்ன விடயங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்...
ஆனால் இது நீங்கள் செதுக்கிய பின் சின்னதாய் தெரியவில்லை இதுவே இன்றைய உலகில் பிரதான விடயமாகத் தெரிகிறது//


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

சிகரம் பாரதி //


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

திறமையை வெளியே உள்ளவர்கள் உணர்வதற்கு காலதாமதமாகிறது. சிலநேரம் உணரப்படாமலும் சென்றுவிடுகிறது.//

தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

உலகின் எந்த உண்மைக்கும் பொருந்தும். காலம் கடந்த புரிதலே உலக சாதனைகளின் இலக்கணம். //


தங்கள் வரவுக்கும வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி

Post a Comment