Thursday, November 22, 2012

முரண்


கூந்தலைச் சரியாக முடியாது
பொட்டுவைக்கக் கூட மறந்து
அழுக்கேரிய மஞ்சள் சரடுடன்
மிகச் சாதாரணமான நூல் சேலையணிந்து
ரேசன் கடையில் புகை படிந்த ஓவியமாய்
அந்தப் பெண்ணைப் பார்க்க
அவள் வறுமை தெரிந்தது
ஆயினும் அவள் மேல் ஒரு
மரியாதை இருந்தது

கூந்தலை நாகரீகமாகப் பின்னி
மிகப் பெரிய பொட்டுவைத்து
அன்றுதான் கட்டியது போன்ற புதிய சரடுடன்
மிக நவ நாகரீமாய் உடையணிந்து
பஜார் வீதியில் அலங்கார விளக்காய்
அவளைப் பார்க்கையில்
கவர்ச்சி இருந்தது
ஆயினும் அவள் மேல் அதீத
வெறுப்பே படர்ந்தது

இப்போதெல்லாம் ஏனோ
பட்டங்களையும் பட்டயங்களையும்
சாட்சிகளையும் விரித்து வைப்பதிலேயும்
அடுத்தவர்களை முற்றாக கவர்வதிலேயும்
அதிக கவனம் கொள்கிறவர்களைவிட
இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது


50 comments:

ஸ்ரீராம். said...

இப்போதல்ல, எப்போதுமே அப்படித்தானே!

திண்டுக்கல் தனபாலன் said...

பகட்டு ஒரு நாளில் வெளுத்து விடும்... இயற்கையாய் இருப்பவர்கள் என்றும் இனிமையானவர்கள் என உணர்த்தும் கவிதை அருமை...

நன்றி...
tm2

semmalai akash said...

ஆமாம், ஆமாம்,அப்படிதான் நானும் நினைக்கிறேன்.
நல்ல சிந்தனை.

தி.தமிழ் இளங்கோ said...

எளிமைக்கு எப்போதுமே வரவேற்புதான்.

நிலாமகள் said...

இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது//

ஆம்.

கதம்ப உணர்வுகள் said...

அருமையான தலைப்பு….. சீரிய சிந்தனை வரிகள்…. தொடங்கியவிதம் அசத்தல்…. மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பளபளப்பதெல்லாம் பகட்டுக்காக மட்டுமே… உள்நோக்கினால் மட்டுமே அறியப்படும் அதில் இருக்கும் விகாரங்களும் விரசங்களும்… எளிமையான அடக்கமான அன்பான பண்பான அழகே ரசிக்கவைப்பது…. கைக்கூப்பி வணங்கவைப்பது…. வறுமை…. வறுமையிலும் செம்மை…. உழைப்பு…. உழைப்பில் சிந்தும் வியர்வு மணக்கும்…. ஏனெனில் அந்த உழைப்பில் இருக்கும் உன்மத்தம் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவோர் அறிய இயலாது…. பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்க இயலும் என்று நினைப்போருக்கு சரியான சாட்டையடி கவிதை….

அழகு…. அக அழகு மட்டுமே வாழ்க்கையை சுந்தரமாக்கும்…. மேல்பூச்சும் நகப்பூச்சும், கவர்ச்சியும்… பகட்டுப்புன்னகையும் என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்துவிடும்…. எளிமையோ என்றும் நிலைத்து இருக்கும்…. காந்தி பொக்கைவாயோடு சிரிக்கும் சிரிப்பில் எளிமை மட்டுமா அழகும் தூக்கல் தான்.. அதுவே கவர்ச்சிக்கன்னிகளின் படங்களில் எல்லாமே பூச்சு பூச்சு… கன்னத்தில் ரூஜ், நகத்தில் நகப்பூச்சு, உதட்டில் சாயப்பூச்சு… உடல் முழுக்க மணக்கும் செயற்கை திரவியம்….

மற்றவர்களை கவர்வதில் முதன்மையாக நிற்கும் இந்த வெளிப்பூச்சுக்கெல்லாம் மயங்கினாலும் அது தற்போதைக்கு மட்டுமே… எளிமையான ஏழ்மையான அழகு வீட்டுக்கு இல்லத்திற்கு ஒளி கொடுக்கும் பிரகாசமாய்….

அருமையான வரிகளில் அலங்காரம் இல்லாது எளிமையாக அழுத்தமாக சொன்ன வரிகள் அத்தனையும் சிறப்பு ரமணிசார்….

தலைமுடி சரியாக முடிய நேரமில்லை… ஏனெனில் குடும்பத்தில் தன் கவனம் செலுத்துவதால்…. நூல் சேலை போதும் கணவனின் சம்பாத்தியம் குறைவென்றாலும் அதில் சிக்கனமாக கனகச்சிதமாக குடும்பத்தை நடத்தும் பெண்மணிகளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்… பிள்ளைகளின் மனதில் அன்பு தாய் தந்தையரைப்போலவே பெருகி இருக்கும்… எல்லோரிடமும் பழகும் விதத்தில் பண்பு இருக்கும்.. வெற்றியின் படிகளில் முன்னேறிக்கொண்டே இருக்கும்…

ரேஷன் கடையில் வெயிலில் சுடு மணலில் நின்று காத்திருந்து பொருட்களை வாங்கிச்செல்லும் பெண்மணியின் முகத்தில் தெரியும் பெருமிதம் தன் குடும்பத்தின் இன்னும் சில நாட்கள் பட்டினி தீர்க்கும் அன்னப்பூரணியாக நிற்கும் அவள் தான் நம்மனதில் உயர்ந்து நிற்பாள்…

கதம்ப உணர்வுகள் said...

tha.ma.5

அதிக பகட்டும் பட்டாடையும் சம்பாதிக்கும் திமிரும் அடக்கமின்றி சிரிக்கும் சிரிப்பும், பணம் செலவழிக்கும் வேகமும் ஹீ இஸ் மை ஹஸ்பண்ட் வர்க்கிங் ஆஸ் மேனேஜர் எம் டி என்று பெருமையாக சொல்லிக்கொள்வதில் இருக்கும் அவர் பெருமை, அவர் பிள்ளைகளையும், கணவரையும் கவனிப்பதில் தவறுவதால் குடும்பத்தில் விரிசலும் சந்தேகமும் பொறுப்பின்றி வெளியே செலுத்தும் கவனத்தில் ஒரு துளி கூட தன் குடும்பத்தில் செலுத்தாததால் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளும் ஆயாவிடம் பாசம் செலுத்துவதும், வயது முதிர்ந்தப்பின்னர் இதே பெண்ணின் கவர்ச்சி , பெருமை எல்லாம் மறைந்தப்பின்னர் எல்லோரும் ஒதுக்குவது அல்லாது பிள்ளைகளும் தன் பங்குக்கு முதியோர் இல்லத்திற்கு வழி காட்டுவதும் இன்றைய நடப்பு…

அதை மிக அழகாக இரத்தினமாக சொல்லி சென்றது வரிகளில் அத்தனை சிறப்பு ரமணி சார்…

ஒரு கும்பலில் அடக்கமாக அமைதியாக மென்மையாக சிரிக்கும் பெண்ணை தான் எல்லோரும் விரும்புவர்… அதே கும்பலில் அட்டகாசமாக, ஆர்ப்பாட்டமாக, சத்தமாக சிரித்து மற்றவரை கவர செய்யும் அத்தனை சேஷ்டைகளை பார்ப்பவர் அந்த நொடி ரசித்தாலும் அதுவே தொடரும்போது அருவெறுத்து வெறுத்து ஒதுங்கி ஓடுவர்….

கதம்ப உணர்வுகள் said...

இப்படிப்பட்டவருடன் நட்போ உறவோ வைத்துக்கொள்வதில் எல்லோருமே பின் வாங்குவர்… அதை மிக அழகாக கடைசி பத்தியில் சொன்னது அசத்தல் ரமணி சார்….

அன்பாய் இருக்கும் அம்மாவையே பிடிக்கும் பிள்ளைகளுக்கு கண்டித்தாலும் கூடவே இருந்து அரவணைப்பதால்….

பணத்தை கொடுத்து வேலைக்காரி வைத்து பிள்ளைகளை கவனிக்கும் அம்மாவை எந்தப்பிள்ளைக்கும் விருப்பமிருப்பதில்லை… வீட்டை கவனிக்காது குடும்பத்தை கவனிக்காது தன்னை அலங்கரித்துக்கொள்வதிலும் தன் பிரதாபங்களை மற்றவரிடம் பறைசாற்றுவதிலும், மற்றவரை கவர தன்னால் முடிந்தவரை செய்யும் அத்தனை சாகசங்களும் வெகு சீக்கிரமே அடிபட்டுவிடும்….

உண்மையான, நேர்மையான, மென்மையான, எளிமையான ஏழ்மை என்றாலும் அந்த அடக்கமே எல்லோருக்கும் விருப்பமாகிறது.. உண்மையே ரமணிசார்….

பளபளத்து எல்லோரையும் கவரும் பொருட்டு செய்யும் முயற்சியில் நட்பையோ உறவையோ அன்பையோ தன் அருகே வரவைக்க இயலாது… மனதில் நிலைக்கவும் செய்யாது….

கடைசி நான்கு வரிகள் எல்லோருக்கும் உசிதமான வரிகள் ரமணிசார்…

//இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது//

படிக்கும் அத்தனை வாசகர்களுக்கும் உங்களின் இந்த சிறப்பான சிந்தனை முத்துகளான வரிகள் இஷ்டமானது ரமணி சார்..எனக்குமே... ரசித்து வாசித்தேன்.. நானும் உங்களுடனே பயணிப்பதால்...

அன்புவாழ்த்துகள் ரமணி சார்... அழகிய எளிமையான சிறப்பான சீரிய சிந்தனை வரிகள் பகிர்வுக்கு...

Anonymous said...

ஒரு வயது வர ஒரு நிலை வரும் என்பார்கள் அது இது தானோ!!!!!
நல்ல பதிவு!.
இனிய நல்வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.

ADHI VENKAT said...

//இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது//

இது தான் எப்போதும் நிலையானது. சரியானது.

மகேந்திரன் said...

சிறந்த படைப்பு
சீரிய எண்ணம்

இயல்பினைக் களையாதீர்
என அழகாய்ச் சொல்லும்
இனிய கவிதை ஐயா ..

Thozhirkalam Channel said...

எப்போதுமே எளிமையாய் இருப்பதுதான் நிலையானது.செயற்கையை விட இயற்கைதான் நிரந்தரமானதும்கூட உங்களின் எளிமையான கவிதை வரிகள் அருமை

Admin said...

மரியாதையையும் வெறுப்பையும் அழகாய்ச் சொன்னீர்கள்..

பதிவுகள் said...

அழகாகச் சொன்னீர்கள்.

சேக்கனா M. நிஜாம் said...

// இப்போதெல்லாம் ஏனோ
பட்டங்களையும் பட்டயங்களையும்
சாட்சிகளையும் விரித்து வைப்பதிலேயும்
அடுத்தவர்களை முற்றாக கவர்வதிலேயும்
அதிக கவனம் கொள்கிறவர்களைவிட
இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது //

என்னைக் கவர்ந்த அழகிய வரிகள் !

தொடர வாழ்த்துகள்...

சசிகலா said...

இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது.
அழகாகச் சொன்னீர்கள்.

”தளிர் சுரேஷ்” said...

உண்மை! எளிமை என்றும் இனிமை! பகிர்வுக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

சரியான கேள்வியைப் போட்டீர்கள்
அந்த இடத்திலொரு லிங்க் கிடைக்க அப்படிப்போட்டேன்
மற்றபடி எப்போதும் அப்படித்தான்
தங்கள் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

பகட்டு ஒரு நாளில் வெளுத்து விடும்... இயற்கையாய் இருப்பவர்கள் என்றும் இனிமையானவர்கள் என உணர்த்தும் கவிதை அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Semmalai Akash! ;;

ஆமாம், ஆமாம்,அப்படிதான் நானும் நினைக்கிறேன்.
நல்ல சிந்தனை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
எளிமைக்கு எப்போதுமே வரவேற்புதான்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //.

தங்கள் அருமையான அழகான விரிவான
பின்னூட்டங்களை படிக்கையில் என் மனத்தை
என் எண்ணங்களை நானே கண்ணாடியில் பார்ப்பது போலஉள்ளது.எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

இது நியாயம்தானே!சொன்ன விதம் அருமை!

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

ஒரு வயது வர ஒரு நிலை வரும் என்பார்கள் அது இது தானோ!!!!!நல்ல பதிவு!.
இனிய நல்வாழ்த்து!/

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

இது தான் எப்போதும் நிலையானது. சரியானது.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/




Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

சிறந்த படைப்பு
சீரிய எண்ணம்
இயல்பினைக் களையாதீர்
என அழகாய்ச் சொல்லும்
இனிய கவிதை ஐயா ..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

தொழிற்களம் குழு //

எப்போதுமே எளிமையாய் இருப்பதுதான் நிலையானது.செயற்கையை விட இயற்கைதான் நிரந்தரமானதும்கூட உங்களின் எளிமையான கவிதை வரிகள் அருமை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

மரியாதையையும் வெறுப்பையும் அழகாய்ச் சொன்னீர்கள்..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

முனைவர் இரா.குணசீலன் //

அழகாகச் சொன்னீர்கள்/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

என்னைக் கவர்ந்த அழகிய வரிகள் !///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

அழகாகச் சொன்னீர்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

s suresh //

உண்மை! எளிமை என்றும் இனிமை!
பகிர்வுக்கு நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

இது நியாயம்தானே!
சொன்ன விதம் அருமை!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

ஆத்மா said...

இயக்குனர் மனிரத்தினத்தின் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை ஞாபகத்திற்கு வருகிறது சார்

சிவகுமாரன் said...

இயல்பே அழகு
எளிமையே வலிமை
தங்கள் கவிதைகளைப் போலவே

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் /

இயல்பே அழகு
எளிமையே வலிமை
தங்கள் கவிதைகளைப் போலவே//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

இராஜராஜேஸ்வரி said...

இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது

நிதர்சன வரிகள் வாழ்க்கைப்பயணத்திற்கு வலுவூட்டுகின்றன ஐயா..

வெங்கட் நாகராஜ் said...

எளிமை....

என்றுமே இனிமை....

சிறப்பாகச் சொன்ன கவிதை!

த.ம. 10.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

நிதர்சன வரிகள் வாழ்க்கைப்பயணத்திற்கு வலுவூட்டுகின்றன ஐயா..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

எளிமை....
என்றுமே இனிமை....
சிறப்பாகச் சொன்ன கவிதை! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Easy (EZ) Editorial Calendar said...

உண்மை....எளிமை தான் என்றும் சிறந்தது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Yaathoramani.blogspot.com said...

Easy (EZ) Editorial Calendar //

உண்மை....எளிமை தான் என்றும் சிறந்தது.....தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


//

Yaathoramani.blogspot.com said...

Easy (EZ) Editorial Calendar //

உண்மை....எளிமை தான் என்றும் சிறந்தது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Murugeswari Rajavel said...

எளிமையே என்றும் ஏற்றம் பெறுகிறது.அதைச் சொன்ன விதம் வழமைபோல் அருமை ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

காரஞ்சன் சிந்தனைகள் said...

இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது// நிதர்சன் வரிகள்! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. //

நிதர்சன் வரிகள்! நன்றி!



தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Seeni said...

unamithaan ayya..

Post a Comment