Saturday, May 25, 2013

வாலிபத்து டி.எம்.எஸ்ஸும் சிறுவன் நானும்

மரியாதைக்குரிய டி.எம்.எஸ் அவர்கள் உச்சத்தில்
இருந்த காலக்கட்டம்.ஆண் குரல் பாடல் என்றால்
அதிகமாக டி.எம் எஸ் அவர்களும்
அடுத்துசீர்காழி அவர்களும்ஏ.எம் ராஜா மற்றும்
பி பி எஸ் அவர்களும் என இருந்த காலம்

மதுரையில் டி வி.எஸ் நகரை ஒட்டிய
சத்தியசாயி நகரில் அவரின் பங்களா  இருந்தது
அவர் மதுரைக்கு வரும் காலங்களில்
இந்த பங்களாவில்தான் தங்குவார்.அவர் பகவான்
சாயிபக்தர் என்பதால் அவர் தங்குகிற நாட்களில்
அதிகாலை அருகில் இருந்த பகவான் சாயி
கோவிலில் சில பக்திப்பாடல்களைப் பாடுவார்

அந்தக்  கோவிலின் பூசாரியாக அப்போது
எனது உறவினர் பையன் ஒருவன் இருந்தான்
அவர் இலவசமாக தங்கிக் கொள்ளும்படியாக
அவர் பங்களாவிலேயேஒரு அறையை
ஒதுக்கிக் கொடுத்திருந்தார்
அப்போது இந்தப் பகுதி அதிக ஜன நடமாட்டம்
இல்லாத பகுதியாக இருக்கும்,.அவர் மதுரைக்கு
வந்திருப்பதோ இந்த பங்களாவில்தான்
தங்குகிறார் என்பதோ பொது மக்களுக்கு
அதிகம் தெரியாது

எனது ஊருக்கும் சத்தியசாயி நகருக்கும் இடையில்
ஒரு கண்மாய் மட்டும் தான் இருந்தது.அப்போது
டெலிபோன் வசதிமட்டுமே இருந்தகாலம்
அவர் வருகிற தகவல் சென்னையில் இருந்து
அந்தப் பூசாரிப் பையனுக்கு  வந்தவுடன்
எனக்கும் போன் செய்து சொல்லிவிடுவான்

நான் டி.எம் எஸ் அவர்களின் பாடல்களைக்
கேட்கவேண்டுமே என்பதற்காக
அந்தப் பூசாரிப்பையனிடம் இருந்து
தகவல் வந்ததும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து
விடிந்தும் விடியாத  தனியாக அந்தக் கண்மாய்க்
கரைவழி நடந்து வந்து சத்தியசாயி கோவிலில்
காத்திருப்பேன்

சுமார் ஐந்தரை மணியளவில் அந்த அகன்ற நெற்றியில்
விபூதிப்பட்டை விளங்க அந்தத் தும்பைப் பூ  வெள்ளை
வேட்டி தரையத்  தழுவ கட்டி அவர் நடந்து வருகிற
அழகே அவ்வளவு அழகாயிருக்கும்

கோவிலுக்கு வந்தவர் பிரகாரத்தை
ஒரு சுற்று சுற்றுவிட்டு நெடுஞ்சாண்டையாக விழுந்து
 வணங்கி எழுந்ததும் கண்களை மூடி
 ஒரு ஒரு மணி நேரம் பக்திப்பாடலகளைப் பாடுவார்.
அப்போது அவருடைய கண்களில் இருந்து
சாரைசாரையாக கண்ணீ ர்பெருகி வழியும்
இசையினைப் பற்றி ஏதும் அறியாத நானும்
என் நண்பனும் சேர்ந்து விக்கி விக்கி
அழுதபடி இருப்போம் எங்கிருக்கிறோம்
என்ன நடக்கிறது என்பது கூட
அப்போது என்க்குத் தெரியாது,

முதலில் பிரபலமானவர்
ஒருவரின் பாடிக் கேட்கிற ஆவலில் வந்த நான்
அவர் இறைவனுக்காக ஆத்மார்தமாகப் பாடுகிற
அந்தப் பாடலைக் கேட்டு அதன் தெய்வீகச் சக்தியை
அறிந்தது முதல் அங்கு அவர் வருவதைப்  பார்க்கவும்
அவர் பாடலைக் கேட்பதையும் ஒரு தவமியற்றச்
செல்வது போலவே எண்ணித் தொடர்ந்து பல நாட்கள்
கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்

இசையின் சக்தியை இறைவன் இசை வடிவானவன்
என்கிற தகவலை எல்லாம்
பிற்காலங்களில் தெரிந்து கொண்ட போது எனக்கு
இந்தக் காட்சி நினைவுக்கு வருவதோடு அல்லாமல்
கண்களும் கலங்கத் துவங்கிவிடும் ,இன்றுவரை
அதற்கான காரணம் எனக்கு விளங்கவில்லை

அந்தத் தன்னிகரில்லாப் பாடகன் நேரடியாக
தெய்வத்திற்காக உலகை மறந்து பாடிய
பாடல்களை கேட்கிற பாக்கியம்
எனக்குக் கிடைத்தே என் வாழ்வில் கிடைத்தற்கரிய
பல பாக்கியங்களில் மிக முக்கியமானதாக
எண்ணி இன்றும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்

தமிழுலகு இருக்கிற வரை நிச்சயம்
அவர் குரல் தமிழகத்தின்  ஒவ்வொரு நொடியும்
ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்
தமிழ் இசை  உலகுக்கு செய்யவேண்டியதை
அவர் தன் வாழ்வில் செய்து முடித்துவிட்டதான
திருப்தியை நிச்சயம் அவரும் அடைந்திருப்பார்

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக



56 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வு மேலும் நெகிழ வைத்தது...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

குமரி எஸ். நீலகண்டன் said...

மனதைத் தொடுகிற நல்ல பகிர்வு.. நல்ல அனுபவமும் கூட.

இளமதி said...

ஐயா... கொடுத்துவைத்தவரையா நீங்கள். அவர் பாடுவதை அவரை நேரில்கண்டவரல்லவோ...
நினைவுப் பதிவு நெஞ்சை நிறைக்கிறது. நெகிழவும் வைக்கிறது.
அவரின் ஆன்ம சாந்திக்காகப் ப்ரார்த்திக்கின்றேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தமிழுலகு இருக்கிற வரை நிச்சயம் அவர் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்//

ஆம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக

G.M Balasubramaniam said...


தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இருக்கும் வரை டி எம் எஸ் அவர்களின் பெயர் நிலைக்கும் .நிறைந்த வாழ்வு வாழ்ந்தவர் அவர். மனசைத் தொடும் நினைவுகள்.

அம்பாளடியாள் said...

என் அபிமான பாடகர் அவரின் குரலை ,நடையைப் பக்தியைப் நேரில் பார்த்தும் கேட்டும் ரசித்த வாய்ப்பு பெற்ற தாங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் தான் .என் கண்நீரஞ்சலியையும் இங்கு சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

மாதேவி said...

நெகிழவைத்துவிட்டது பகிர்வு.

அவர்பாடலை அருகே இருந்து கேட்க நீங்களும் கொடுத்து வைத்திருக்கின்றீர்கள்.

என்றும் அவர் நாமம் நிலைக்கும்.

கவியாழி said...

பல பாக்கியங்களில் மிக முக்கியமானதாக
எண்ணி இன்றும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்//நெகிழ்ச்சியான அந்த தருணம்கள் உங்களுக்கும் நிம்மதியாய் இருந்திருக்கும்,

ஸாதிகா said...

pathivu manathinai wekizththi vittthu.

Anonymous said...

நீங்கள் உண்மையிலேயே பாக்கியவான்தான். நெகிழ்வான அஞ்சலி.

Amudhavan said...

யாருக்கும் கிடைக்காத அருமையான கணங்கள்...அற்புதமான நினைவுகள். இந்த நினைவு என்றைக்கும் உங்களோடு இருக்கும் என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

Unknown said...

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியானது!

Unknown said...

Very Interesting to here dis from UR words. Unfortunately we lost the mega singer.

Unknown said...

உங்களை போன்றே ஏழிசை வேந்தனை சந்தித்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் !
http://jokkaali.blogspot.in/2013/05/tms.html

பால கணேஷ் said...

உங்களுக்கு அவர் பாடுவதை நேரிலேயே கேட்டு நெக்குருகி ரசிக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது. நம்ம ஊர்க்காரரா இருந்தும் நான் சந்திச்சதில்லைங்கற வருத்தம் எனக்குண்டு.அவர் பாடல்கள் உள்ளவரை அவரும் இருப்பார்.

Avargal Unmaigal said...

அதிர்ஷ்டகாரரில் நீங்களும் ஒருவர்

உலக சினிமா ரசிகன் said...

எப்பேர்பட்ட புண்ணியம் செய்திருக்கிறீர்கள்.
இந்த வாய்ப்பு கிட்டியதே இறை அருள்தான்.

கீதமஞ்சரி said...

டிஎம்எஸ் அவர்கள் பாடுவதை நேரில் நின்று கேட்பது என்பதை விடவும் யாருக்காகவும் இல்லாமல் தனக்காக... தன் ஆத்மதிருப்திக்காக எந்த இடையூறும் இடைத்தரகர்களும் இல்லாமல் பாடிய பாடல்களையல்லவோ கேட்டு ரசித்திருக்கிறீர்கள். என்றைக்கும் மனதில் பெருமிதமெழுப்பும் நினைவுகள் அல்லவா அவை... பாக்கியசாலி நீங்கள் ரமணி சார்...

சசிகலா said...

நேரில் சந்தித்த பாக்கியம் பெற்றவர் நீங்கள். இசை உலகம் இருக்கிற வரை அவர் வாழ்வார்.

தீபிகா(Theepika) said...

நீ அழுது பாடினால்...
நாங்களும் அழுதோம்.
நீ சிரித்துப் பாடினால்
நாங்களும் சிரித்தோம்.
உன்குரல் சொன்ன தத்துவங்களை
எங்கள் வாழ்வின் வேதங்களாய் சுமந்தோம்

கற்பனை என்றாலும்..கற்சிலை என்றாலும்...
கற்கண்டு குழைத்த தமிழ்க் குரலில்
நீ பாடினால் கண்ணில் நீரொழுகும்.
உள்ளம் உருகுதய்யா நீ உச்சரித்தால்
இன்றும் உயிர் உருகி கரைந்தோடும்.

அம்பாளடியாள் said...

இன்று நான் வெளியிட்டுள்ள என் பாடல் வரிகளுக்கு தங்கள் கருத்தினையும் அன்புடன் எதிர்பார்கின்றேன் ஐயா .

அருணா செல்வம் said...

கொடுத்து வைத்தவர் நீங்கள் இரமணி ஐயா.

Anonymous said...

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக
Vetha.Elangathilakam.

அப்பாதுரை said...

உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தனியாக பாடவோ/சாதகம் செய்யவோ வரும் பிரபலங்கள் இப்படி உணர்ச்சிவயப்படுவதை நானும் ஒன்றிரண்டு முறை கவனித்திருக்கிறேன். எனினும் டிஎம்எஸ் தனியாகப் பாடுவதை கேட்க நான் நிறைய இழக்கத் தயாராக இருந்திருப்பேன்.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //


தங்கள் முதல் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

பகிர்வு மேலும் நெகிழ வைத்தது...//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

குமரி எஸ். நீலகண்டன் //
.
மனதைத் தொடுகிற நல்ல பகிர்வு.. நல்ல அனுபவமும் கூட.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//
ஆம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இருக்கும் வரை டி எம் எஸ் அவர்களின் பெயர் நிலைக்கும் .நிறைந்த வாழ்வு வாழ்ந்தவர் அவர். மனசைத் தொடும் நினைவுகள்.

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Ambal adiyal //
.
என் அபிமான பாடகர் அவரின் குரலை ,நடையைப் பக்தியைப் நேரில் பார்த்தும் கேட்டும் ரசித்த வாய்ப்பு பெற்ற தாங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் தான் .என் கண்நீரஞ்சலியையும் இங்கு சேர்த்துக்கொள்ளுங்கள் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

நெகிழவைத்துவிட்டது பகிர்வு.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //
..
பல பாக்கியங்களில் மிக முக்கியமானதாக
எண்ணி இன்றும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்//நெகிழ்ச்சியான அந்த தருணம்கள் உங்களுக்கும் நிம்மதியாய் இருந்திருக்கும்,//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

இளமதி //
.
ஐயா... கொடுத்துவைத்தவரையா நீங்கள். அவர் பாடுவதை அவரை நேரில்கண்டவரல்லவோ...
நினைவுப் பதிவு நெஞ்சை நிறைக்கிறது. நெகிழவும் வைக்கிறது.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

pathivu manathinai wekizththi vittthu.

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


//


Yaathoramani.blogspot.com said...

மீனாக்ஷி //

நீங்கள் உண்மையிலேயே பாக்கியவான்தான். நெகிழ்வான அஞ்சலி.

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

Amudhavan //

யாருக்கும் கிடைக்காத அருமையான கணங்கள்...அற்புதமான நினைவுகள். இந்த நினைவு என்றைக்கும் உங்களோடு இருக்கும் என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான்./

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...


புலவர் இராமாநுசம் //

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியானது!

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

உங்களை போன்றே ஏழிசை வேந்தனை சந்தித்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் !//

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //
.
உங்களுக்கு அவர் பாடுவதை நேரிலேயே கேட்டு நெக்குருகி ரசிக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது. நம்ம ஊர்க்காரரா இருந்தும் நான் சந்திச்சதில்லைங்கற வருத்தம் எனக்குண்டு.அவர் பாடல்கள் உள்ளவரை அவரும் இருப்பார்.//

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

அதிர்ஷ்டகாரரில் நீங்களும் ஒருவர்///

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

உலக சினிமா ரசிகன் //
..
எப்பேர்பட்ட புண்ணியம் செய்திருக்கிறீர்கள்.
இந்த வாய்ப்பு கிட்டியதே இறை அருள்தான்//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

டிஎம்எஸ் அவர்கள் பாடுவதை நேரில் நின்று கேட்பது என்பதை விடவும் யாருக்காகவும் இல்லாமல் தனக்காக... தன் ஆத்மதிருப்திக்காக எந்த இடையூறும் இடைத்தரகர்களும் இல்லாமல் பாடிய பாடல்களையல்லவோ கேட்டு ரசித்திருக்கிறீர்கள். என்றைக்கும் மனதில் பெருமிதமெழுப்பும் நினைவுகள் அல்லவா அவை... பாக்கியசாலி நீங்கள் ரமணி சார்/

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//




.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

நேரில் சந்தித்த பாக்கியம் பெற்றவர் நீங்கள். இசை உலகம் இருக்கிற வரை அவர் வாழ்வார்.///


தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

தீபிகா(Theepika) //

நீ அழுது பாடினால்...
நாங்களும் அழுதோம்.
நீ சிரித்துப் பாடினால்
நாங்களும் சிரித்தோம்.
உன்குரல் சொன்ன தத்துவங்களை
எங்கள் வாழ்வின் வேதங்களாய் சுமந்தோம்

கற்பனை என்றாலும்..கற்சிலை என்றாலும்...
கற்கண்டு குழைத்த தமிழ்க் குரலில்
நீ பாடினால் கண்ணில் நீரொழுகும்.
உள்ளம் உருகுதய்யா நீ உச்சரித்தால்
இன்றும் உயிர் உருகி கரைந்தோடும்.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/




Yaathoramani.blogspot.com said...

Ambal adiyal //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //
.
கொடுத்து வைத்தவர் நீங்கள் இரமணி ஐயா/

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாக///

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தனியாக பாடவோ/சாதகம் செய்யவோ வரும் பிரபலங்கள் இப்படி உணர்ச்சிவயப்படுவதை நானும் ஒன்றிரண்டு முறை கவனித்திருக்கிறேன்//

நீங்கள் சொல்வது மிகச் சரி
டி.எம் எஸ் அவர்கள் இசைக் குழுவினரோடு
பாடுவதை பலமுறைக் நானும்
கேட்டு ரசித்திருக்கிறேன்
ஆயினும் அவர்கள் அவர்களுக்காக
ஆத்மார்த்தமாக பாடும்போது
எப்படித்தான் அப்படி ஒரு தனிச்சுவை சேருமோ
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


கோமதி அரசு said...

தமிழுலகு இருக்கிற வரை நிச்சயம்
அவர் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு நொடியும்
ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்//

உண்மை நீங்கள் சொல்வது.
எப்போது அவர் பாடிய பாடல்கள் மூலம் அவர் ஜீவித்து இருப்பார்.

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...
தமிழுலகு இருக்கிற வரை நிச்சயம்
அவர் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு நொடியும்
ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்//

உண்மை நீங்கள் சொல்வது.
எப்போது அவர் பாடிய பாடல்கள் மூலம் அவர் ஜீவித்து இருப்பார்.//


தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சிகரம் பாரதி said...

ஒரு தெய்வீகக் குரல் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அவருடைய பாடல்களைக் கேட்காமல் யாருமே இருக்க முடியாது. "என்னுடைய பாடல் இல்லாத எந்தப் படமும் ஜெயிக்காது" என்று சவால் விட்டவர் அவர். இதை அவரே இலங்கையின் வானொலி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். உங்கள் பதிவும் அருமை.

Yaathoramani.blogspot.com said...

சிகரம் பாரதி //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ranjani Narayanan said...

உங்களது இந்தப் பதிவை இப்போதுதான் படிக்கிறேன். ஊரில் இல்லாததால் பல பதிவுகள் படிக்க முடியவில்லை.

திரு டிஎம்எஸ் பற்றிய உங்கள் நினைவை - அவர் தனியாகப் பாடி கேட்டு மகிழ்ந்து நெகிழ்ந்து போனதை வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

மனதை தொட்ட பதிவு!

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said...//
உங்களது இந்தப் பதிவை இப்போதுதான் படிக்கிறேன். ஊரில் இல்லாததால் பல பதிவுகள் படிக்க முடியவில்லை.

திரு டிஎம்எஸ் பற்றிய உங்கள் நினைவை - அவர் தனியாகப் பாடி கேட்டு மகிழ்ந்து நெகிழ்ந்து போனதை வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

மனதை தொட்ட பதிவு!//


/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Post a Comment