Monday, March 24, 2014

மூடுபனி ( 3 )

மூடுபனி  ( 2 )
http://yaathoramani.blogspot.in/2014/03/2.html

நினைவிழந்து எவ்வளவு நேரம் கிடந்தேன்
எனத் தெரியவில்லை

நான் விழித்தபோது ஹாலின் மேற்குச் சுவற்றோரம்
இருந்த சோபாவில் படுக்கவைக்கப் பட்டிருந்தேன்
நெற்றியிலும் முன் தலை முடியிலும் தட்டுப்பட்ட ஈரம்
என் முகத்தில் நீர் தெளித்து சோமு விழிக்கச்
செய்திருக்கிறார் எனப் புரிந்து கொள்ளச் செய்தது

எதிர் சுவற்றில் இருந்த கடிகாரம் மணி
பன்னிரண்டெனக் காட்டியது

மெல்ல மெல்ல எனக்கு பழைய நினைவுகள்
திரும்பத் துவங்கியது

நான் மெல்ல சோபாவைவிட்டு எழுந்திருக்க
முயலுகையில்உள் அறையில் இருந்து
வெளிப்பட்ட சோமு
"கொஞ்சம் அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்
இப்போது எழவேண்டாம் ,நான் சொன்னதும்
எழுந்தால் போதும் " என்று சொல்லியபடி
என் அருகில் இருந்த ஒரு சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு என்னையே வெறிக்கப் பார்த்தார்.

எனக்கு உதறலெடுக்கத் துவங்கியது

நான் பேசாமல் கொசுக்கடியுடனேயே மண்டபத்தில்
படுத்திருக்கலாமோ ? இவர் என்னை வைத்து
என்னவோ பரிட்ஷித்துப் பார்க்கிறாரோ ?
நான் பலிகடா ஆகிப் போனேனோ ?
அது சரி அவர் என்னை எதற்கு இதற்குத் தேர்ந்தெடுத்தார் ?
நானும் இனி இவர் சொல்லிகிறபடிச் செய்கிற
பொம்மையாகிப் போவேனோ ?
விபரீத கற்பனைகளில் என் மனது தவிக்கத் துவங்கியது

தலையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு என்னை
 வெறிக்கப்பார்த்தபடி சோமு பேசத் துவங்கினார்

"மாப்பிள்ளை என்னிடம் இதுவரை யாரிடமும்
சொல்லாத ரகசியம் ஒன்று இருக்கிறது
அதை யாரிடமாவது சொல்லிப் போகவேண்டிய
காலமும் வந்து விட்டது

நான் உங்களை மூன்று மாதங்களுக்கு முன்னால்
இதே போல்  ஒரு சாத்தூரில் ஒரு திருமணத்தில்
பார்த்தபோதே உங்களிடம்  சொல்லவேண்டும் என
நினைத்தேன்.அப்போது ஏனோ சரியாக அமையவில்லை
இன்றுதான் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறது
அதுதான் தெய்வ சித்தம் "என்றார்

சரி இவரை இனிமேல் இவர் போக்கிலே விட்டால்
நமக்கு எதாவது விபரீதம் நேர்ந்து போகும்
இனி சங்கடப்படாமல் முரண் படவேண்டும்
அதுதான் சரி என முடிவெடுத்து மெல்ல எழுந்து அமர்ந்தேன்

"கோவித்துக் கொள்ளாதீர்கள்.எனக்கு இந்த சாமி பூசாரி
தெய்வ சித்தம் இதிலெல்லாம் எனக்கு துளியும்
நம்பிக்கையில்லை.நான் உங்கள் சொந்தத்தில்
பெண்ணெடுக்கும் போது கூட ஜாதகம் தரவில்லை
அது உங்களுக்கும் தெரியும் தானே
தயவு செய்து உங்கள் உங்கள் ரகசியத்தை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
என்னை ஆளை விடுங்கள்நான் தூங்க வேண்டும்.
நாளை எனக்கு ஊரில்மிக முக்கியமான வேலைகள் இருக்கிறது
இப்போது படுத்தால்தான் சரியாக வரும் "எனச் சொல்லி
நான் எழத் துவங்கினேன்

அதுவரை இயல்பாக இருந்தவரின் முகம்
சட்டென இறுகத் துவங்கியது போல் பட்டது

சட்டென கனத்த குரலில் பார்த்தபடி
"இது நீங்களும் நானும் முடிவு
செய்கிற விஷயமில்லை.முடிவெடுக்கப்பட்டதை
செய்பவர்கள் மட்டும்தான் நாம்
நாளை நீங்கள் ஊருக்குப் போகவில்லை
என்னுடன் வேம்பார் கோவிலுக்கு வருகிறீர்கள்
இரவு அங்கு  தங்குகிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதை
அங்குவைத்துச்சொல்கிறேன்.சரியா ? " எனக்
கட்டளையிட்டது போலச் சொல்லிவிட்டு
அவர் என்னை வெறிக்கப் பார்த்தார்

அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது
என என் உள் மனம் உறுதிபடுத்தத் துவங்கியது

(தொடரும் )

34 comments:

ஸ்ரீராம். said...

மாயனாதணும் திலீபனும்! :)))

திண்டுக்கல் தனபாலன் said...

வேம்பார் கோவிலுக்கா...? அடுத்து என்ன நடக்கப் போகுதோ...?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பரபரப்பாக செல்கிறது,

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தம 4

Unknown said...

வேம்பார் கருப்பட்டி என்று கேள்விப் பட்டுள்ளேன் .காத்துக் கருப்புக்கும் என்ன சம்பந்தம் ?அறிய ஆவல் ஏற்படுகிறது !
த ம 5

G.M Balasubramaniam said...

என்னுடைய ஐந்தும் இரண்டும் கதை நினைவுக்கு வருகிறது

Thulasidharan V Thillaiakathu said...

விறுவிறுப்பாகச் செல்லுகின்றது! இப்படித் தொடரும் போட்டு எங்கள் ஆவலைக் கூட்டுகின்றீர்களே!!!!

த.ம.

அம்பாளடியாள் said...

இத் தொடர் மன்மேலும் சிறந்து விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .
த.ம .6

Iniya said...

திக் திக் என்கிறது .ம்...ம் அப்புறம் .......
சிறக்க வாழ்த்துக்கள்.....!

Sivaramakrishnan. Salem said...

nice thought.
but
different

கரந்தை ஜெயக்குமார் said...

ஹிட்ச் சாக் பாணியில் திக் திக் தொடர்கிறதே
அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.9

கோமதி அரசு said...

இது நீங்களும் நானும் முடிவு
செய்கிற விஷயமில்லை.முடிவெடுக்கப்பட்டதை
செய்பவர்கள் மட்டும்தான் நாம்
நாளை நீங்கள் ஊருக்குப் போகவில்லை
என்னுடன் வேம்பார் கோவிலுக்கு வருகிறீர்கள்//

ஆவல் அதிகமாகுதே!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

உடன் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

உடன் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...//

பரபரப்பாக செல்கிறது, //

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam,,//

என்னுடைய ஐந்தும் இரண்டும் கதை நினைவுக்கு வருகிறது//


அந்தக் கதையைப் படிக்க ஆவலாக
உள்ளது .மாதம் எது எனச் சொல்லி இருந்தாலோ
லிங்க் அனுப்பி இருந்தாலோ உடன் படிக்க
ஏதுவாகி இருக்கும்
தேடிப்பிடித்துப் படித்து விடுகிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu said...//

விறுவிறுப்பாகச் செல்லுகின்றது! இப்படித் தொடரும் போட்டு எங்கள் ஆவலைக் கூட்டுகின்றீர்களே!!!!

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் வலைத்தளம் said...//

இத் தொடர் மன்மேலும் சிறந்து விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .//

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Iniya said...//

திக் திக் என்கிறது .ம்...ம் அப்புறம் .......
சிறக்க வாழ்த்துக்கள்.....!//

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

siva rama said...//

nice thought.
but
different//

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//

ஹிட்ச் சாக் பாணியில் திக் திக் தொடர்கிறதே
அருமை//

உடன் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//

ஆவல் அதிகமாகுதே!//

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யம் கூடுகிறது! அடுத்து என்ன நடந்தது? அறிய ஆவலுடன் தொடர்கிறேன்! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

‘தளிர்’ சுரேஷ் //

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

இந்த பதிவு எனக்கு update ஆகலை போல!

ஸ்வாரஸ்யம் அதிகமாகிவிட்டது. அடுத்த ப்குதியையும் படித்துவிடுகிறேன் இப்போதே!

Yarlpavanan said...


விறுவிறுப்பாகக் கதை நகர்கிறது.
தங்களின் சிறந்த தொடரை வரவேற்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

Jeevalingam Kasirajalingam //

தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும்
உங்கள் பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சசிகலா said...

திகில் கதை போல இருக்கே... சுவார்யஸ்ம் தொடர்கிறது.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

அடுத்து, வேம்பார் கோயில் மர்மம்? அது எங்கே இருக்கிறது?

கதம்ப உணர்வுகள் said...

நீங்கள் எழுதியதை படிக்கும்போது எனக்கே மிகவும் பயமாக இருக்கிறது... அதெப்படி நம் அனுமதி இல்லாமல் தான் சொல்லவேண்டியதை சொல்லுவேன் என்று சொல்லுகிறார். ஆனால் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்ததால் தப்பித்தீர்கள் ரமணி சார்... அப்படி என்ன தான் சொல்ல நினைத்தார் தெரியவில்லையே.... கோயிலில் போய் உங்களுக்கு முன்னாடியே காத்திருக்கிறேன்....த.ம.13

Post a Comment