Saturday, May 17, 2014

பெரியார் உழ அண்ணா பரம்படிக்க.....

பெரியார் ஆழமாக உழ
அண்ணா அருமையாகப் பரம்படிக்க
அன்புத் தம்பிகள் வீரிய விதைகளை
மிக நேர்த்தியாய் விதைக்க

விளைந்துச் செழித்த
வயல்வெளி ஏன் இப்படி
பட்டுப் போனதோடு அல்லாமல்
பரிதாபப்படும்படி
பொட்டலாகியும் போனது ?

பண்ணயாய் இருந்த
அந்தப் பூமியை
பண்ணையார் பூமியாக்க முயன்றதாலா ?

அண்ணன் தம்பியாய் இருந்த
விவசாயப் பெருங்குடி மக்களை ஒதுக்கி
அண்ணன் தம்பிகளே
சொந்தம் கொண்டாடத் துவங்கியதாலா?

எது எப்படியோ
எதனால் இப்படியோ

பக்கத்துக் குளத்து
தாமரைக் கொடி மெல்ல
வயல்வெளியில் படரத் துவங்கிவிட்டது

ஒரு பூ பூத்து
மெல்ல இடம் பிடித்து
விரைவாய் பரவவும் துவங்கிவிட்டது

இனியேனும்
தூங்குவது போல் நடிக்காமல்
பண்ணையார் விழிகளைத் திறப்பாரா ?

நிலத்தை மீண்டும் பொதுவாக்கி
பண்ணையாக்கும் பணிதனைச்
செய்திடும் வழிகளைப் பார்பாரா ?

இல்லை வழக்கம்போல்
பட்டுப்போனதற்கு  புதுவிளக்கம் சொல்லி
தன் புலமையைத் தானே ரசிப்பாரா ?

மாலை சூடி
மன்னவானாக்கி மகிழ்ந்த காலம்
பதில் வேண்டிக் காத்துக் கிடக்கிறது

சரியான பதில் இல்லையெனில்
தான் சூடிய  மாலையை  பிய்த்து எறியும்
உறுதியான மன நிலையோடும்....

21 comments:

இராஜராஜேஸ்வரி said...

அண்ணன் தம்பியாய் இருந்த
விவசாயப் பெருங்குடி மக்களை ஒதுக்கி
அண்ணன் தம்பிகளே
சொந்தம் கொண்டாடத் துவங்கியதாலா?

பிரச்சினையின் ஆணிவேரை
கச்சிதமாய் கண்டடைந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!

Anonymous said...

அப்பப்பா! என்ன உண்மை!.....
நல்லது நடக்கட்டும்!..
நாடகம் ரசனை தான்!
எல்லா நாட்டிலும் இதே கோலமே!
அதனால் கெக்கட்டம் விட்டுச் சிரிக்க முடியவில்லை...
கெக்கட்டம் - பெருஞ்சிரிப்பு - வழமையாக ஊரில் கூறுவோம்))
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

நெஞ்சுக்கு சரியான பதில் தெரிந்தாலும் சுயநலம் சொல்ல விடுமாவென்று தெரியவில்லை !
த ம 2

அம்பாளடியாள் said...

மாலை சூடி
மன்னவானாக்கி மகிழ்ந்த காலம்
பதில் வேண்டிக் காத்துக் கிடக்கிறது

சரியான பதில் இல்லையெனில்
தான் சூடிய மாலையை பிய்த்து எறியும்
உறுதியான மன நிலையோடும்....

பிய்த்து எறிந்தாலும் தப்பில்லை சரியான பதில்
கிட்டாத போதினிலே ! அருமையான பகிர்வு
வாழ்த்துக்கள் ஐயா .

வெங்கட் நாகராஜ் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு. பதில் சொல்லாமல் இப்போதும் பழங்கதை பேசப் போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! பண்ணையார் விழித்துகொண்டால் பிழைப்பார்! இல்லையேல் பிழைக்கு பொறுப்பேற்பார்! நன்றி!

G.M Balasubramaniam said...

/
இனியேனும்
தூங்குவது போல் நடிக்காமல்
பண்ணையார் விழிகளைத் திறப்பாரா ?

நிலத்தை மீண்டும் பொதுவாக்கி
பண்ணையாக்கும் பணிதனைச்
செய்திடும் வழிகளைப் பார்பாரா ?/ இருந்தாலும் எல்லாமே பண்ணையார்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பது சரியா?பண்ணையாருக்கும் வயது குறைந்தா வ்ருகிறது. ஒருவரை நம்பிக் கட்சி செயல்படுவது நல்லதல்ல. இது அம்மையாருக்கும் பொருந்தும்.

மனோ சாமிநாதன் said...

அருமையான பகிர்வு!

கோமதி அரசு said...

அருமையாக சொன்னீர்கள்.
உணர்ந்தால் சரி.

vimalanperali said...

நல்ல பகிர்வு/வாழ்த்துக்கள்/

RajalakshmiParamasivam said...

நல்லதொருக் கவிதை . அர்த்தம் பொதிந்த வரிகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனியும் பதில் வேண்டிக்காத்துக் கிடப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

உறுதியான மன நிலையோடு இருப்பது உண்மையானால் இன்றே இப்போதே மாலையை பிய்த்து எறிந்துவிடலாம், என்பதே நான் சொல்ல நினைப்பது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

பொருள்நிறைந்தகவித்துவம் காலம்உணர்ந்து புனைந்த விதம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கொள்ளை அடித்துக் குவித்திட்ட பாவங்கள்
பிள்ளைவரை தாக்கும் பெருத்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

KILLERGEE Devakottai said...

அப்பப்பா மறைமுகமாய் இப்படியும் ஒரு அரசியல் பேச்சா ? புரிவோருருக்கு புரிந்தால் ? புவி மீண்டும் உமக்கே...... அருமை ஐயா.
Killergee
www.killergee.blogspot.com

kingraj said...

இதெல்லாம் செவிடன் காதில் சங்குதான் ஐயா. ஊதிப்பார்ப்போம் கேட்டால் கேட்கட்டும்

kingraj said...

இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான். கேட்டால் அவர்களுக்கு ந்ல்லது. இல்லையென்றால் 'இப்படி' அடிக்கடி காண வேண்டிவரும்

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

அருணா செல்வம் said...

Arumai

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சொல்லிய விதம் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Post a Comment