Sunday, July 6, 2014

துரோகம் ( 3 )

பாதித் தெரு கடந்து பஜனைமடத்தைத் தாண்டியதும்
சாமானை ஏற்றி வந்த வண்டி கொஞ்சம்
ஒதுங்கி வழிவிட கூட்டு வண்டி
அதைத் தாண்டி முன்வர
சுப்புப்பாட்டி இன்னும் கூடுதல் பரபரப்பாகி விட்டாள்

நானும் எழுந்து நின்று அப்படி என்ன விஷேசம் என
எட்டிப்பார்க்க எங்கள் தெருவின் எல்லோருடைய
வீட்டு வாசலிலும் அதே பரபரப்போடு சிறுவர் முதல்
பெரியவர்கள் வரை நின்று கொண்டிருப்பதுத் தெரிந்தது

அந்தக் கூட்டு வண்டி மிகச் சரியாக சுந்தரம் மாமா வீட்டு
வாசலில் நிற்க ஓட்டி வந்த ஐயனார் முதலில்
கீழே இறங்கி"சாமி நீங்க கொஞ்சம் முன் நகர்ந்து
 உட்காருங்கள்"எனச் சொல்லிவிட்டு
சாட்டைக் கம்பியை வண்டியின்
பக்கவாட்டில் சொறுகிவிட்டு வண்டியை
அழுத்திப் பிடித்துக் கொண்டு "இப்ப பைய முதல்ல
நீங்க பேரும் இறங்கிக்கிட்டு சின்னச் சாமியை
இறக்கிவிட்டுட்டு அப்புறம் சூதானமா பெரியம்மாவை
இறக்கிவிடுங்கம்மா " என்றான்

எட்டி நின்ற சுப்புப்பாட்டி இப்போது எங்கள் அம்மாவிடம்
நெருங்கி வந்து "இப்போ முன்பாரமா
 உட்கார்ந்திருக்கானேஅவன்தான்
மீனாட்சியின் பிள்ளை .பின்னே இறங்கிற ரெண்டும்
 மூத்த தாரத்துப் பிள்ளங்க"எனக் கிசுகித்தாள்

முன்னால் வண்டியில் அமர்ந்திருந்த ராகவனை
அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்
கொஞ்சம் கட்டை குட்டை வயது நிச்சயம் முப்பதுக்கு
மேலிருக்கலாம்.மற்றபடி சொல்லிக்
கொள்ளும்படியான சிறப்பம்சம் ஏதும் எனக்கு
அப்போது தெரியவில்லை.

பின்னால் முதலில் இறங்கிய மாமிக்கு வயது
நாற்பதுக்கு மேல் இருக்கலாம்.கணவனை இழந்தவர்
என்பதுபார்த்ததும்தெரிந்துகொள்ளமுடிந்தது.
இரண்டாவதாகஇறங்கியவருக்கு
வயது முப்பதந்து இருக்கலாம்
உடன் இடுப்பில் ஒரு பையனைச் சுமந்தபடி கீழே
இறங்கி பையனை கீழே இறக்கிவிட்டு இருவரும்
சேர்ந்து அந்த வயதான பாட்டியை
இரு தோள்பட்டைலும்கைகொடுத்து இறக்கி
கைதாங்களாக வீட்டுக்குள்அழைத்துப் போனார்கள்.

அந்த தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அந்த
மீனாட்சியைப் பார்த்தேன்.அப்போது நான்
காந்தித் தாத்தாவுக்குபெண் வேஷம் போட்டால்
இப்படித்தான் இருப்பாரோ எனஎண்ணியது
இப்போதும்  நன்றாக நினைவிருக்கிறது
வெள்ளை நார்ப்புடைவையில் முக்காடிட்டபடி
 இறங்கியஅவரைப் பார்த்ததும் வறுமையின்
கோரப்பிடியில்நைந்து போனவராகத் தெரிந்தாலும்
ஏதோ ஒருஈர்ப்புச் சக்தி அவரிடம்
இருப்பது போலப் பட்டது

இப்போது மீண்டும் எங்கள் வீட்டுப் படிக்கட்டில்
நன்றாக சாய்ந்து உட்கார்ந்த சுப்புப்பாட்டி
"இவ தாண்டி நேத்து நான் சொன்னகிரேட் மீனாட்சி
எங்க காலத்தில்  அப்படித்தான் எல்லோரும்
அவளச் சொல்வாங்க.கொஞ்சம் மா நிறமானாலும்
அழகுன்னா அவ்வளவு அழகுடி,காலம் அவள
எப்படிச் சிதைசிருக்குப் பாரு.
கையெழுத்து நல்லா இருக்கிறவா தலையெழுத்து
நல்லா இருக்காதுன்னு சொல்வா
அழகா இருக்கிறவ தலைய்ழுத்தும்
அப்படித்தான் போல"என சொல்லி நிறுத்தினாள்.

சுப்புப்பாட்டியால் துவங்கிய விஷயத்தை முடிக்காமல்
தூங்க முடியாது எங்கள் அம்மாவும்  துவக்கியதை
முடிக்காமல் யாரையும் விட்டு விடமாட்டாள்.

நிச்சயம் கதை சோகமாக இருந்தாலும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என
எனக்குப்பட்டதால்லேசாகக் கிளம்பிய பசியையும்
பொருட்படுத்தாதுநானும் கதை கேட்கத் தயாரானேன்

(தொடரும் )

27 comments:

Unknown said...

சொக்குப் பொடி மீனாட்சி போலிருக்கே ...நீங்க பொடி வைத்து வர்ணிப்பதைப் பார்த்தால் !
த ம 2

Yarlpavanan said...

கதை நகர்வு சிறப்பெனச் சிந்திக்கையில்
"நானும் கதை கேட்கத் தயாரானேன்" என்றால்
இனித் தான் கதையே சொல்லப் போறியள்!

ADHI VENKAT said...

கதை கேட்க நாங்களும் சுவாரஸ்யத்துடன் காத்திருக்கிறோம்.... த.ம - 3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கதையைமிக அருமையாக நகர்த்தியுள்ளீர்கள் அடுத்த கதை கேட்க நானும் தயாராக உள்ளேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

பசியையும்
பொருட்படுத்தாதுநானும் கதை கேட்கத் தயாரானேன்//

நாங்களும் தான்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கடந்த 20.11.13 தங்களின் பதிவில் .. தனிப்பதிவர்கள் என்றேனும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?என்று ...அதாவது ,தமிழ் மணத்தில் முதல் இடத்தில் தனி நபர் வர முடியுமா என்று கேட்டு இருந்தீர்கள் ...
இதோ இன்று ,ஜோக்காளி முதல் இடம் பிடித்து விட்டான் ,உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி !

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாகச் சொல்லிச் செல்கின்றீர்கள்! தொடரவும்! வெயிட்டிங்க்!

த.ம.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கையெழுத்து நல்லா இருக்கிறவா தலையெழுத்து
நல்லா இருக்காதுன்னு சொல்வா
அழகா இருக்கிறவ தலைய்ழுத்தும்
அப்படித்தான் போல"//

அருமை + உண்மையும் கூட.

படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...
கடந்த 20.11.13 தங்களின் பதிவில் .. தனிப்பதிவர்கள் என்றேனும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?என்று ...அதாவது ,தமிழ் மணத்தில் முதல் இடத்தில் தனி நபர் வர முடியுமா என்று கேட்டு இருந்தீர்கள் ...
இதோ இன்று ,ஜோக்காளி முதல் இடம் பிடித்து விட்டான் ,உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி !//

உங்களைவிட நான் அதிக மகிழ்ச்சி
கொள்கிறேன்,இது மிகையான வார்த்தையில்லை
தொடர நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கதையை கேட்க நானும் ஆவலுடன் இருக்கிறேன் ஐயா... நன்றி...

Anonymous said...

Thodarunkal...
Vetha.Elangathilakam.

G.M Balasubramaniam said...

கதை களை கட்டுகிறது. தொடருங்கள் காத்திருக்கிறோம்

”தளிர் சுரேஷ்” said...

சூடு பிடிக்கிறது கதை! தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்! நன்றி!

மாதேவி said...

கதையை கேட்க ஆவலுடன்..........

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

KILLERGEE Devakottai said...

கதையை தொடர்கிறேன் ஐயா...

ஸ்ரீராம். said...

கையெழுத்து நன்றாய் இருந்தால் தலையெழுத்து நன்றாய் இருக்காது என்று சொல்வார்கள் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அழகாய் இருந்தாலும் தலை எழுத்து நன்றாய் இருக்காது என்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! :))

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான கதை..!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே
கதையின் சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி (தொடரும்) போட்டு விட்டீர்கள். மீண்டும் கதையை தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!
தொடர வாழ்த்துக்கள்!
என் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து பின்னூட்டங்களுடன், வாழ்த்தி வருவதற்கும்,என் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்....

Seeni said...

சொல்லுங்கய்யா..

கரந்தை ஜெயக்குமார் said...

அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 10

Unknown said...

தமிழ் மணத்தில் முதல் இடத்தில் தனி நபர் வர முடியுமா என்று கேட்டு ,நீங்கள் எழுதியிருந்த அந்த பதிவு 'ஏன் முடியாது 'என்ற தாக்கத்தைஎன் மனதில் ஏற்படுத்தியது ,என் தீவிர முயற்சி,உழைப்பு .உங்களைப் போன்றோரின் ஆதரவில் இது சாத்தியமாக்கிவிட்டது !
மீண்டும் உங்கள் வாழ்த்திற்கு நன்றி !

தி.தமிழ் இளங்கோ said...

கதையை மேலும் கேட்க ஆவலாய் உள்ளது.
த.ம.11

Post a Comment