Sunday, July 20, 2014

துரோகம் ( 7 )

கதையைப் போலவே சுப்புப்பாட்டியின்
 மனோ நிலையும் அடுத்த நிலைக்கு
மாறுவதைப் போல இருந்தது
இதுவரை இயல்பாக இருந்த அவளது முகம் சற்று
இறுக்கமாக மாறுவதைப் போல இருந்தது

எனக்குள்ளும் அதுவரை இருந்த சுவாரஸ்ய
மனோ நிலை மிக லேசாக பய உணர்வுக்கு
மாறுதலாகிக் கொண்டிருந்தது
.நான் அம்மாவை ஒட்டிஅமர்ந்து கொண்டேன்

சுப்புப் பாட்டி தொடர்ந்தாள்

"நீ வேதம் படிச்சவரின் பொண்ணு. உனக்கு
அதிகம் விளக்கவேண்டியதில்லை.ஆறு வகைப்
பிரமாணங்களில் இதுவரை நான் சொன்னதெல்லாம்
பிரத்தியட்சம் மாதிரித்தான்.
ஏன்னா இப்ப சொன்ன விஷயமெல்லாம் நான்
நேரடியா அறிஞ்சது பார்த்தது
சம்பத்தப்பட்டவர்களிடம்நேரடியாகக் கேட்டது

இனி சொல்லவதெல்லாம்
அனுமானம், ஆப்தவாக்கியம்,உபமானம் மாதிரித்தான்
விதை செடியாகற மாதிரி,கரு உருவாகறமாதிரி
அந்த நாளுக்குப் பின்னால் இயல்பா மிகச் சிறப்பா
இருந்த அந்த ரெண்டு பேரின் குடும்பமும் இப்படி
வேறு மாதிரி தலைகீழாப் போனதுக்கு ஊர் நம்புற
காரணம் நிச்சயமா இருக்கதான் இருக்கணும்டி
யார் நம்புறாங்களோ இல்லையோ நான் நம்பறேன்

இப்ப மாதிரி இல்லையடி,
அப்பவெல்லாம் உள்சன்னதிக்குள்ள
நம்ம தெருவைச் சேர்ந்தவா
பிள்ளைமார் தெருவில சில குடும்பம்,
கோனார் தெருவிலே ரெண்டு குடும்பம்
இந்த செட்டியார் சீதாராம ராஜுக் குடும்பம் தவிர
யாரும் வரமாட்டாங்கடி.
ஜாதி வித்தியாசம்னு இல்லை
எப்படியோ பரம்பரையா அப்படிப்பழகிப் போச்சு
கருப்புச் சட்டைக் காரங்க  வெளியிலே ஆ ஊன்னு
பேசினாலும் கூட அந்த வெளிச்சன்னதி தாண்டி
வருந்தி கூப்பிட்டாக்கூட வரமாட்டாங்கடி,

ஆகையாலே அந்த சன்னதி நீர்தாரையை அடைக்க
யாரையும் கூப்பிடாம மீனா அப்பா பிள்ளைவாள்,
எடுபிடி வேலைக்கு அவா சொந்தத்திலே
ஒரு ஊமையன்இருந்தான்,வேலை நேரம் போக
மீதி நேரம்கோவிலிலதான் அவன் கிடைப்பான் அவன்
ஆக இது ரொம்பச் சின்ன வேலை என்பதால
 மூணு பேருமட்டும் இருந்து செய்யறதுன்னு
 முடிவு பண்ணிஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி
ஒன்பது மணிக்கு மேல கோவில் நடை
சாத்திர நேரத்தில இருந்து செய்யிறதா
முடிவு செஞ்ச்சாங்கடி,

ஏன்னா வெள்ளிக்கிழமை எட்டுமணிவரை எப்பவும்
கோவில்ல கூட்டம் ஜெ ஜேன்னும் இருக்கும்
அதுமாதிரி சனிக்கிழமையும் நவக்கிரஹம் சுத்த
காலையிலேயே கூட்டம் சேர்ந்திடும்

எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அந்த வெள்ளிக்கிழமை
வழக்கம்போல பட்டுப் பாவாடைக் கட்டி குஞ்சம் வைச்சு
சடைப்போட்டு,தலை நிறையப் பூ வச்சு
அந்த பூஜைக்கான போக்கூடைய தூக்கிக் கிட்டு
மீனா தங்க விக்ரகம் போல கோவிலுக்குப் போறப்ப
நானும் கூடத்தான் போனேன்

கோவில் திபாராதனை முடிஞ்சு பிரசாதம் வாங்கிண்டு
கிளம்பறச்சே மீனாவோட அப்பா மீனாக்கிட்டே
"இன்னைக்கு அப்பா கோவில் தங்கல்டா கண்ணா
வேலை இருக்கு வீட்டுக்கு வரமாட்டேன்,
அம்மாகிட்டே சொல்லி நாலு பேரு சாப்பிடற மாதிரி
லெமன் சாதமும் வடாமும் செஞ்சு தரச் சொல்லி
கொண்டு வா. பிள்ளைவாள் விரும்பிச் சாப்பிடுவார்
உங்க அண்ணன் வேண்டாம்.நீயே கொண்டுவா
வேணுமானா துணைக்கு இவளைக் கூட்டிண்டு வா "
என்றார்

எதனாலயோ மீனா என்னைக் கூப்பிடலை
அது கூட நல்லதுக்குத்தானோன்னு இப்பப் படுது

சரி விஷயத்துக்கு வாரேன்,இப்ப இருந்து அனுமானம்
ஆரம்பிக்கிறதுடி,

முதலிலே உடஞ்ச கல்லை மட்டும் எடுத்துட்டு
ஓட்டையை சிமெண்ட் வைச்சு அடைச்சிடறதுன்னு
நினைச்சுத்தான்,சின்ன வேலைன்னும் நினைச்சுத்தான்
ஆரம்பிச்சிருக்கா.ஆனா அதை உடைச்சதும்
இத்தனை நாள் அபிசேக தீர்த்தம் ஓடி
 மண் அலசிப்போக அடுத்து அடுத்தக் கல்லும்
சட்டெனச் சரிய்வேறு வழி இல்லாம சுத்துக் கல்லு
மூணு  நாலையும்சேர்த்து எடுக்க வேண்டி வந்திருக்குடி

சரி செய்றது  செய்றோம்  சரியாச் செய்துடுவோம்னு
ஊமையனை விட்டு முழுசும் வெளியே
எடுக்கச் சொல்லிப்பாக்கிறப்பத்தான் அத்தனைப் பெரிய
ஒரு தேக்குப் பெட்டிஇருந்திருக்குடி.
பெட்டியை சேதாரம் இல்லாம முழுசா வெளியே
எடுக்க மூணு பேரும் முயற்சி செஞ்சும்
முடியாமப் போகஉள்ளே வெச்சே பெட்டியை
உடைச்சுப் பார்த்தாஎல்லோரும்
திகைச்சுப்போயிட்டாளாம்
உள்ளே முழுசும் மீனாட்சிக்கான தங்க வைர
ஆபரணங்களாண்டி,திறந்ததும் அப்படிச் ஜொலிச்சதாம்

அதுவரை பேசிக்கிட்டே வேலை
பார்த்துக் கொண்டிருந்த மூணு பேருக்கும்
அப்புறம் பேச்சே வரவில்லையாம்
மூணு பேரும் ஓய்வெடுக்கிற சாக்கில்
ஒவ்வொரு மூலையில்
வாயடைச்சு உட்கார்ந்திட்டாளாம்.

எல்லா பெண்களுக்கும் வர்ற ஆசை மாதிரி
தன் தாய்வீட்டு சீதன நகைகளைப்
போட்டுப்பார்க்கிறஆசை வந்ததோ இல்லை
மூணு தலைமுறையா விசுவாசமா தனக்கு
சேவை செய்த இந்த இரண்டு குடும்பமும்
உண்மையாகவே விசுவாசமா சேவை செய்திருக்காளா
அல்லது சந்தர்ப்பம் கிடைக்காததால
நல்லவளா இருக்காளாஎனச் சோதிக்கிற எண்ணம்
 பாலமீனாம்பிகைக்கு வந்ததோன்னு
சரியாத் தெரியலடி

ஆனா மூணு தலைமுறையா சாஸ்திர சம்பிரதாயம்
மீறாமவாழ்ந்திருந்த அந்த இரண்டு குடும்பத்தையையும்
பிடிச்சுஆட்டமுடியாம இருந்த சனீஸ்வரனுக்கு இந்த
நகைப்பொக்கிஸம்நல்ல குடுமிப்பிடியாப்
போயிருக்கும்போல

அவா நாளு பேரு மனசிலேயும் ஒவ்வொரு
ஆசையைகற்பனையை   அவா அவளுக்குத் தகுந்தபடி
தூண்டிவிட்டுச் சனீஸ்வரன் விளையாட
ஆர்ம்பிச்சது தெரியாமஉச்சச் சரிவிலிருந்து
அதல பாதாளத்தில் விழப்போறதும்
தங்கள் தலைமுறையே நாசகாடாகிப்
போகப்போறதும் தெரியாமஅந்த நகையை
எப்படி அவா அவாளுக்குக் தகுந்த
மாதிரி பிரிச்சுக்கிறதுஅதுவரை எப்படி மறைக்கிறது
என்கிற நினைப்பில்ரொம்ப நேரம் கிடந்தாதாங்களாம்

மறு நாளில் இருந்த அவர்கள் மட்டும் இல்லை
அவர்கள் வாழ்வும் மெல்ல மெல்ல
 மாறத்  துவங்கிடுச்சுடி

அதை வைச்சுத் தான் நான் அனுமானமா
சொன்னவா மூலம்கேள்விப்பட்டதெல்லாம்
நிச்சயம் நிஜம்னு நம்பத் துவங்கிணேன்டி

உனக்கும் அதைப் புரியச் சொன்னா நிச்சயம்
இது அனுமானம் இல்லை பிரத்தியட்சம்னு
 நீயும் நம்புவே"எனச் சொல்லி நிறுத்தி
தெருக்கோடியை ஏனோ
சுப்புப் பாட்டி கொஞ்சம் உற்றுப் பார்த்தாள்
தெரு விளக்கு வெளிச்சத்தில் அப்பா வருவது தெரிந்தது

(தொடரும் )

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குடுமிப்பிடியாப் பிடித்து நாசகாடாகிப் போய் விட்டார்களா...?

Unknown said...

சிவன் சொத்து குல நாசம் என்பதைப் போலவே !
த ம 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
கதையை படிக்க படிக்க திகட்டவில்லை ஐயா நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கேன்
த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

பிரத்தியட்சம் முடிய அடுத்து...
கதை விறுவிறுப்பாக நகர...
தொடருங்கள்...

Anonymous said...

சிறிது பயமாக உள்ளது.....
அப்புறம்!......
வேதா. இலங்காதிலகம்..

சரணாகதி. said...

//விதை செடியாகற மாதிரி,கரு உருவாகறமாதிரி//
என்ன பொருத்தமான உபமானம். கதை சுவாரசியமாகச்செல்கிரது அடுத்து எப்போன்னு எதிர்பார்ப்பு அதிகமாகுது.

ADMIN said...

படிக்க..படிக்க விறுவிறுப்பு.. பகிர்வினிற்கு நன்றி.

எதிர்வரும் நண்பர்கள் தின வாழ்த்துகளை பகிர பயன்படும் தளம் :
Happy Friendship Day 2014 Images

இராஜராஜேஸ்வரி said...

கோவில் சொத்து குல நாசம்
என்பதற்கான பிரத்யட்ச உதாரணம்..!

Thulasidharan V Thillaiakathu said...

//விதை செடியாகற மாதிரி,கரு உருவாகறமாதிரி//

அழகான உவமை! அடுத்தவர் சொத்தை அபகரித்தலே பாவம் அதிலும் கோயில் சொத்துஎன்றால்.....அழிவுதான்....திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பதுக்கி வைக்கப்பட்ட சொத்துக்கள்தான் நினைவுக்கு வருகின்றது!

தொடர்கின்றோம்!

”தளிர் சுரேஷ்” said...

புதையல் கிடைச்சு அவங்க வாழ்க்கையை புதைச்சு போட்டுருச்சு போல! சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நல்ல நடையில் எழுதும் தொடா்கண்டேன்!
வல்ல கவிஞன்என் வாழ்த்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, புதையல் என்கிற சனி கிடைத்து விட்டது. அனைவருக்குமே சனி பிடிக்கப்போகிறது.

இனிமேல் தான் சுவாரஸ்யமாக இந்தக் கதையும் செல்லக்கூடும். தொடருங்கள்.

மாதேவி said...

"சனீஸ்வரன் விளையாட
ஆர்ம்பிச்சது" ...... அடுத்து ? தொடர்கின்றோம்.

ஸ்ரீராம். said...

உம்...... அப்புறம்.....

G.M Balasubramaniam said...

கவிதை எழுதுவதில் மட்டுமல்ல கதை சொல்வதிலும் உங்கள் தனித்திறன் பளிச்சிடுகிறது.. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

விறுவிறுப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது. ஜூரம் அதிகரிப்பது போல.

RajalakshmiParamasivam said...

நல்ல சுவாரஸ்யமான நடையில் ஆர்வத்தைத் தூண்டும் பதிவு.\

வாழ்த்துக்கள்....

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க விறுவிறுப்புக் கூடிக்கொண்டே போகிறது ஐயா
ஆவலுடன் காத்திருக்கிறேன்
தம +1

aavee said...

அடுத்து என்ன என்ற ஆவலுடன்...

Unknown said...

இடையில் வந்தேன் என்றாலும் தடையின்றி கதை புரிகிறது! எழுத்தும் நடையும் தங்களுக்கே உரியது! இனி தொடர்வேன்!

தி.தமிழ் இளங்கோ said...

சஸ்பென்ஸ்! அடுத்த நகர்வுக்கு காத்து இருக்கிறேன்!
த.ம.11

மனோ சாமிநாதன் said...

பதிவு சுவாரஸ்யத்தைக்கூட்டிக்கொண்டே போகிறது! தொடருங்கள்!!

கோமதி அரசு said...

அவா அவளுக்குத் தகுந்தபடி
தூண்டிவிட்டுச் சனீஸ்வரன் விளையாட
ஆர்ம்பிச்சது//

மிக விறு விறுப்பாய் போகிறது கதை.

வெங்கட் நாகராஜ் said...

ம்... புதையல் அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது.... தொடர்கிறேன்...

Post a Comment