Thursday, January 1, 2015

0...600...1000....... ?

சட்டெனத் துவங்கி
அதே வேகத்தில்
சட்டென விட்டுப் போகும்
மேதைகளை விட

நிதானமாகத் துவங்கி
விடாது தொடரும்
 "சராசரிகளும்
"அரைகுறைகளும் "

நிலைக்கவும் சாதிக்கவும்
வாய்ப்பு உண்டு என்பதற்கு
அடியேனே பதிவுலகில்
ஒரு அசலான சாட்சி

யானை நடந்து
விழாத தடங்கள்
எறும்பின் தொடர் ஊறலில்
சாத்தியமாவதைப் போல

தொடர்ந்த பாராட்டு
ஒரு சப்பாணியையும்
புயல் வேகத்தில்
ஓட வைப்பதைப் போல

மிகச் சரியாய் ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான் என்னும்
அந்த அனுபவ மொழியினைப் போல

600க்கு மேற்பட்ட பதிவுகளுடன்
104 நாடுகளில்
400 க்கும் மேற்பட்ட தொடர்பவர்களுடன்

25000 க்கு மேற்பட்ட பின்னூட்டங்களுடன்
274000 க்கு மேற்பட்ட பக்கப்பார்வையுடன்

ஜீ + இல் 559 தொடர்பவர்களுடன்
ஐந்து  இலட்சத்து இருபதாயிரத்திற்கு
மேற்பட்ட பக்கப்பார்வையாளர்களுடன்..

நான் தொடர்ந்து
பயணிப்பத்துக் கொண்டிருப்பது
நிச்சயம் திறமையினால அல்ல
பாண்டித்தியத்தினாலும் அல்ல

எல்லாம் உங்கள்
தொடர் அன்பினாலும்
அரவணைக்கும் பண்பினாலுமே
என்பதை முழுமையாய் அறிவேன்

இந்தப் புத்தாண்டுத் தினத்தில்
உங்கள் அனைவருக்கும்
என் நன்றியினைக் காணிக்கையாக்குவதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

"கசடறத் தொடர்ந்துக்
கற்றலைத் தொடர்வோம்
பயனுறப் பகிர்ந்து
மென்மேலும் உயர்வோம் "

வாழ்த்துக்களுடன்......

28 comments:

ஸ்ரீராம். said...

திறமை இல்லாமல் எப்படி முன்னே வர முடியும்?

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
திறமை இல்லாமல் எப்படி முன்னே வர முடியும்?

ஊக்கம் திறன் வளர்க்கும்
"தலைத் தட்டல் "திறன் அழிக்கும் தானே ?

அம்பாளடியாள் said...

தித்திக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரமணி ஐயா .

V. Chandra, B.COM,MBA., said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...

மென்மேலும வளர வாழ்த்துகள் கவிஞரே....

vimalanperali said...

"கசடறத் தொடர்ந்துக்கற்றலைத் தொடர்வோம்,இன்னும் நிறைய எழுதுவோம்,வாழ்த்துக்கள் 2015ன் இனிய துவக்கத்துடன்/

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிப்பு இருக்கும் இடத்தை எறும்புகள் மொய்ப்பதைப் போல, தாங்கள் கொடுக்கும் பதிவுகளில் நிறையவே ருசியும் தரமும் உள்ளன.

அதனாலேயே தங்களை நாடி அவரவர்களாகவே ஓடி வந்து சிறப்பிக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் எதுவுமே இல்லை.

சிலர் தங்கள் பக்கம் பிறரை வரவழைக்க கஜகர்ணம் போட்டு வருகிறார்கள். எழுத்தினில் தரமேதும் இல்லாமல் தங்களையும் வருத்திக்கொண்டு, பிறரையும் ஓயாமல் வருந்தி வருந்தி அழைத்து வருத்தி வருகிறார்கள்.

அப்படியும் அவர்கள் பக்கம் விஷயதாகம் உள்ள யாரும் தலைவைத்துப்படுப்பது இல்லை.

தங்களின் உண்மையான உயர்வான சாதனைகளுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேலும் மேலும் சிறக்க, இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள், Mr ரமணி Sir.

VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் தொடர்ந்து
பயணிப்பத்துக் கொண்டிருப்பது
நிச்சயம் திறமையினால் அல்ல
பாண்டித்தியத்தினாலும் அல்ல//

அல்ல, அல்ல, இதுபோன்ற பணிவினாலும், பண்பினாலும், தன்னடக்கத்தினாலும் மட்டுமே :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள் ஐயா...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said...

இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம்தான். வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

நீங்கள் தன்னடக்கத்துடன் சொன்னாலும் உங்கள் திறமைமீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது! வாழ்த்துக்கள் ஐயா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தகவலுக்கு நன்றி
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Unknown said...

உங்களின் வாழ்த்தால் ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் ,வைகோகி கருத்தால் இன்னொரு புறம் மகிழ்ச்சி ...உங்களைத் தொடர்வதால் என்னையும் விஷயதாகம் என்று சொல்லி இருக்கிறாரே :)
த ம 4

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

kingraj said...



மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
த.ம.6

கவியாழி said...

சட்டெனத் துவங்கி
அதே வேகத்தில்
சட்டென விட்டுப் போகும்
மேதைகளை விட///புரிகிறது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் திறமை அசாதாரணமானது. 600 பதிவுகள் எழுத எவ்வளவு திறமை வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடர்ந்து எழுதுபவர்கள் சாதனையாளர்களே! தான் எழுதுவது மட்டும் அல்லாமல் பிறரையும் ஊக்குவிப்பது எல்லோரும் செய்வதில்லை. உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இன்றி என்னைப்போன்றவர்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்க முடியாது .
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன தங்கள் பணி தொடரட்டும் .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தொடருங்கள் வெற்றிப் பாதையில்..

துரை செல்வராஜூ said...

மேலும் பல சிறப்புகளைத் தாங்கள் எய்த வேண்டும்..

தங்களால் - தங்களைத் தொடர்வோரும் பெருமை கொள்ள வேண்டும்!..

வரும் நாட்களில் வளமும் நலமும் -
அனைவருக்கும் நிறையட்டும்!..

வாழ்க பல்லாண்டு!..

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துக்கள் சார்! மேலும் தங்கள் எழுத்துக்கள் வளரவும், தொடரவும் வாழ்த்துக்கள் சார்!

"சராசரிகளும்
"அரைகுறைகளும் "

நிலைக்கவும் சாதிக்கவும்
வாய்ப்பு உண்டு என்பதற்கு
அடியேனே பதிவுலகில்
ஒரு அசலான சாட்சி//

நீங்கள் உங்களையே இப்படிச் சொல்லிக் கொண்டால்..நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் எங்களை என்னவென்று சொல்லுவது.....

Iniya said...

மேலும் சிறப்புற இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

இளமதி said...

வணக்கம் ஐயா!

மென்மேலும் சிறப்புகள் உங்களை வந்தடைய வேண்டி வாழ்த்துகிறேன்!

தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது ஐயா!..

இறைதுணை என்றும் உங்களுடன் இருக்கும்!
மீண்டும் அன்புடன் உளமார வாழ்த்துகிறேன்!

சென்னை பித்தன் said...

சாதனைகள் தொடரட்டும்!
புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown said...

வாழ்க! தங்கள் தன்னடக்கம்! நன்றி!

ShankarG said...

வாழ்த்துக்கள் ரமணி. இன்னும் நீண்ட பல ஆண்டுகளுக்கு உங்கள் பயணம் தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். மென்மேலும் சிறந்த படைப்புக்களுடன் தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.

Post a Comment