Wednesday, October 21, 2015

பதிவர் சந்திப்பு, ( 9 )

"நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கிக்  கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது "

                      ------------------------------------
சில மாதங்களுக்கு முன்பு
இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்
என  இப்படி ஒரு  கவிதை எழுதி இருந்தேன்

அதன் காரணம் , நான் சார்ந்திருக்கிற
இணைந்திருக்கிற எந்த அமைப்புக்குள்ளும்
முற்றிலுமாக என்னைச் செயல் அளவிலும்
மனத்தளவிலும் முழுமையாக
ஈடுபடுத்திக் கொள்வேன்

அப்படித்தான் பதிவர் சந்திப்பு எனத்
தகவல் வந்ததும்,நானும் ஒரு பதிவர் இது
எனக்கான சந்திப்பு என மனத்தளவில் ஒரு
உத்வேகம் கொண்டதால்தான் என்னால்
சந்திப்புக்கு முன்பு சந்திப்புக் குறித்த 16 பதிவுகள்
தொடர்ந்து எழுத முடிந்தது

சந்திப்புக் குறித்து கருத்துக்களும் ஆலோசனைகளும்
பதிவர் குழுவால் வரவேற்கப் பட்டபோது

1 )ஒத்த உடை  (பதிவர் குழுவிற்கு )

2 )புரவலர் மற்றும் நன்கொடையாளர்கள்
    எனப் பிரித்து நிதி திரட்ட முயற்சிக்க
    ஆலோசனை

என நடைமுறைச் சாத்தியப்பட்ட அவசியமான
ஆலோசனைகளை உரிமையுடன் சொல்ல முடிந்தது

"உங்கள் பாணியில் பதிவர் சந்திப்புக் குறித்த
விமர்சனப் பதிவுகளை  எழுதுங்கள் "
என மரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா
உரிமையுடன்  எனக்குக் கோரிக்கை வைக்கவும்
அதன் தொடர்ச்சியாய் நான்  இப்படித் தொடர்ந்து
எழுதவும் முடிகிறது

புதுகையில் இல்லாமல் ,செயல்படுத்துகிற
நிர்வாகக் குழுவிலும் இல்லாமல் இது
எனக்கான சந்திப்புஎன நான் உரிமை எடுத்து
எழுதுவதைப்போலக் களத்தில் இருந்துப்
பணியாற்றியவர்கள் எழுதினார்களேயானால்
நிச்சயம் இதுபோல் ஆயிரம் எழுத முடியும்

அவைகள்  நம்  பதிவர் ஒற்றுமையை

பயனுள்ள அடுத்தத் தளத்திற்குக் கொண்டு
செல்லவும்  நிச்சயம்  உதவும்

அது அப்படி இருக்க ...

நான் இப்படி  தொடர்ந்து விரிவாகப்  பதிவர்
சந்திப்புக் குறித்து எழுதக் காரணம் இல்லாமலும் இல்லை

( தொடரும் )

9 comments:

தனிமரம் said...

மூத்தவர் நீங்கள் வலையில் சொல்லும் ஆலோசனையும் நல்லதே !அடுத்த பதிவர் உலகத்துகு! சொக்கி நிக்கும் பதிவு அறியும் ஆவலில்!

கரந்தை ஜெயக்குமார் said...

காரணத்தை அறியக் காத்தருக்கிறேன் ஐயா
நன்றி
தம +1

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

தொடருங்கள் ஐயா நன்றி... தொடர்கிறேன்...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

Geetha said...

உங்களின் அனுபவங்கள் ஆலோசனைகளாக வலைப்பதிவர் விழாவைச்சிறக்கச்செய்தது சார்...நன்றி.

கரூர்பூபகீதன் said...

அனுபவத்தில் சொல்லும் ஆலோசனைகள் அருமையானதாகமிருக்கும் அய்யா! நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மேலும் தொடருங்கள்... நானும் தொடர்கிறேன்.

இளமதி said...

ஐயா.. உங்களின் மனந்திறந்த நேரடிக் கருத்துகள் நிதர்சனமானவை!
கட்டாயம் மிகச் சரியான காரணம் ஏதாவது இருக்கும்.. தொடருங்கள் ஐயா!

அருணா செல்வம் said...

என்ன காரணமாக இருக்கும்......

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அடுது்த படியை தாண்ட நல்ல ஆலோசனை...ஐயா. தொடருகிறேன் த.ம8

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment