Thursday, February 11, 2016

வலையுலகில் புலவரெனில்....

My Photo


பேராசிரியர் என எத்துனையோ பேர் இருப்பார்கள்
ஆனால் ஒரு இயக்கத்தில் பேராசிரியர் என்றால்
அது ஒருவரை மட்டுமே குறிக்கும்
(பெயர் சொல்ல வேண்டுமா என்ன ? )

அதைப் போல பதிவுலைகில் புலவர் என்றால்
அனைவருக்கும் தெரிவது
 புலவர் இராமானுஜம் ஐயா அவர்களைத்தான்.

சென்னை என்றால் நான் பதிவுலகிற்கு வரும் முன்பு
சில இடங்கள் தான் நினைவுக்கு வரும்.

பதிவுலகில் இணைந்தது முதல் சென்னை என்றால்
முதலில் நினைவுக்கு வருபவர்
 புலவர் ஐயா அவர்கள்தான்.

கூடுமானவரையில்  சென்னை
வரும்போதெல்லாம் அவர் இல்லம் சென்று
சந்திக்காமல் வந்ததில்லை

சிலர் வீடு கோவில் போல இருக்கும்,
சிலர் வீடு நூலகம் போல இருக்கும்
அதற்குக் காரணம் அவர்கள்
அதில் கொண்டிருக்கும் ஈடுபாடு.

அதைப் போல புலவர் ஐயா வீட்டிற்க்கு வந்தாலே
ஏதோ பதிவுலக அலுவலகத்தில்  நுழைந்தது போலவே
இருக்கும். நான் வந்திருக்கும் தகவலை உடன்
முக்கியப்  பதிவர்களுக்குத்  தெரிவித்து விடுவார்
உடன் ஒரு குட்டி பதிவர்கள்  சந்திப்பு போலவே
ஒரு இரண்டு மூன்று மணி நேரம் கடக்கும்

இடையிடையே அன்புடன் அவரது புதல்வி
அவர்கள் வழங்கும் புன்னகையுடன் கூடிய
சிற்றுண்டியும் காஃபியும் நாம் நம் இல்லத்தில்
இருப்பது போன்ற உணர்வினைத் தரும்

எண்பது வயதுக்கு மேலாகியும், முழுமையாக
உடல் ஒத்துழைக்கவில்லையாயினும்
அவர் ஒரு இளைஞரைப் போல பதிவுகளைத்
தொடர்வதும், பின்னூட்டமிடுவதும் பதிவர்கள்
அனைவருக்கும் நிச்சயம் ஒரு பாடமே

அவருடைய கவித் திறன் குறித்தோ
கவிஞர் வாலி அவர்களைப் போல இயைப்புத்
தொடை, மிக இயல்பாய் இணையும்படி
அவர் வடிக்கும் கவிதைகளின் சிறப்புக் குறித்தோ
இங்கு நான் குறிப்பிடப் போவதில்லை
காரணம் சூரியன் உதிப்பது கிழக்கு என்பதைப்போல
அது பதிவர்கள் அனைவருக்கும்
தெரிந்த விஷயம் தானே

ஆனால் தமிழ் ஆசிரியர் சங்கத்தில் மாநில அளவில்
தலைவராக இருந்து அவர் அந்தச் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் அவரை நெருக்கமாக
அறிந்தவர்களுக்கே தெரியும்

ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப்
பின்னால கூட(ஏறக்குறைய  இருபத்திரண்டு
ஆண்டுகள் ) அவரது மகத்தான பணிகள் குறித்து
புதுக்கோட்டைபதிவர் மா நாட்டில்
அங்கு வந்திருந்த தமிழாசிரியர்கள்
நினைவு கூர்ந்ததை அருகில் இருந்து வியந்தவன் நான்.

அத்தகைய மூத்த பதிவருக்கு
வலைப்பதிவர்களுக்கென ஒரு மைய அமைப்பு
வேண்டும் என்பது நெடு நாளைய கனவு

நான் அவரைச் சந்தித்த நாள் முதல்
இதற்கு முன்பு சந்தித்தவரை அது குறித்து
அவர் பேசாமல் இருந்ததில்லை

புதுகை பதிவர் சந்திப்பின் பதிவுகளில் கூட
அது குறித்து கோடிட்டுக் காட்டியிருந்தேன்

ஒரு மைய அமைப்பு ஏன் வேண்டும் ?
இந்தச் சூழல் அதற்கு சரியான நேரம் எப்படி ?
அதைச் செய்ய வல்லார் யார் ?
என்பது குறித்தெல்லாம் அடுத்த பதிவில்
எழுத உத்தேசித்துள்ளேன்

இதை படிக்கிற தாங்களும் அது குறித்து தங்கள்
ஆலோசனைகளையும்,நமது மூத்த பதிவர்
புலவர் அவர்களின்  பண்பு நலன்கள்
மற்றும் அவரது கவிதைச் சிறப்புக் குறித்து
விரிவாக பின்னூட்டமிடலாமே !

வாழ்த்துக்களுடன்...

11 comments:

KILLERGEE Devakottai said...

நானும் புலவரை அவரது வீட்டில் சந்தித்து இருக்கிறேன் என்னையும் பொருட்டாக மதித்து அனைவரையும் அழைத்து சிறிய பதிவர் சந்திப்பு தந்தவர் அவரைப்பற்றிய குறிப்பு அறிந்து மகிழ்ச்சி
தமிழ் மணம் 1

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலையுலகில் புலவரெனில்....

வலையுலகில் ஓர் மகத்தான மாமனிதர் பற்றிய சிறப்பான பதிவு, சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

புலவர் ஐயா அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

ஸ்ரீராம். said...

புலவர் ஐயாவை நான் நேரில் சந்தித்தது இல்லை. அவரைப் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் எனக்குப் புதிது. வணங்குகிறேன் அவரை.

மைய அமைப்பு என்பதால் என்ன பயன் என்று எனக்கு யோசிக்கத் தெரியவில்லை. மற்றவர்கள் கருத்துக்காய் ஆவலுடன் நானும்.

ஸ்ரீராம். said...

த ம +1

S.P.SENTHIL KUMAR said...

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் முதன் முதலாக புலவர் அய்யாவை சந்தித்து அளவலாவியத்தை மறக்க முடியாது. மிகவும் பண்பான மனிதர். அவரைப் பற்றி பதிவிட்டதற்கு தங்களுக்கு நன்றி. மைய அமைப்பு பற்றி அடுத்த பதிவில் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
த ம 3

sury siva said...

இவரது மரபுக் கவிதைகளை பாடிப் பாடி மகிழ்வதில் நானும் அவரது பரம ரசிகன். பல தடவைகள் அவருடன் அளவளாவி இருக்கிறேன். இனிமையாகப் பழகும் நண்பர் .

இவர் ஒருபுரட்டாசி சனிக்கிழமை அன்று இறைவன் வேங்கடவனைப் பற்றி எழுதிய பாடலை நான் ஒரு ராகத்தில் மெட்டு அமைத்தேன். பாடினேன். அதை சென்னை டி.நகர், வேங்கட நாராயணன் தெருவில் இருக்கும் திருப்பதி கோவிலில் பாடியபோது என்னைச்சுற்றி ஒரு பக்தர் கூட்டமே திரண்டு நான் பாடப்பாட அவர்களும் பாட, ஒரு புனித சூழ்நிலை அங்கு உருவாகியதை இன்றும் நான் மறக்கவில்லை.

/www.youtube.com/watch?v=KwEX63OPxpc

சுப்பு தாத்தா.

வலிப்போக்கன் said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி!

G.M Balasubramaniam said...

பதிவுலகில் வலைப் பதிவர்களுக்கு என்று ஒரு மைய அமைப்பு தேவை மற்றபடி பதிவர்கள் ஒவ்வொரு வருடமோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ ஏதாவது ஒரு இடத்தில் கூடலாம் மைய அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் இது குறித்து நான் ஒரு பதிவு எழுதுவேன்

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலகில் புலவர் என்றால், ஆசிரியர் - புலவர் இராமானுஜம் அய்யா அவர்களை மட்டுமே குறிக்கும். உங்கள் பதிவின் வழியே அவருக்கு ஆயிரம் வணக்கங்கள், கவிஞரே!

மைய அமைப்பு குறித்த தங்களின் பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

வலையுலகில் புலவர் என்றால் ஐயாவை மட்டுமே குறிக்கும்..... நானும் அவரை இரண்டு முறை அவரைச் சந்தித்து இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

மைய அமைப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
புலவர் ஐயாவின் கவிதைகள் காலத்தின் தேவைக்கு ஏற்ப தேர் ஓடும் வரிகள் பொதுவாக சொன்னால் கவிதைகள் சிறப்பு ஐயா...
புலவர் ஐயாவுடன் நான் தொலை பேசிவழி பேசியுள்ளேன் நேரில் வந்து பார்த்தில்லை தகவலுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment