Saturday, February 27, 2016

விஜயகாந்த் அண்ணே....

நானும் நம்ம மதுரைதான் அண்ணே.

கண்கள் சிவப்பேற ஆரம்ப கால சினிமாக்களில்
கொடியவர்களைப்  பந்தாடுவதையும்
காக்கிச் சட்டையில் ரவுடிகளையும்
போலி அரசியல்வாதிகளையும்
போட்டுத் தாக்கியதையும்
ரசித்து புரட்சித் தலைவருக்கு அடுத்து
உங்கள் படங்களைத்தான்  அண்ணே
அதிகம் பார்ப்பேன்

பின் கொஞ்சம் நகர்ந்து நடிகர்
சங்கத் தலைவர் ஆனது
அது வைத்திருந்த கடனை அடைத்தது
எல்லாம் தங்கள் மதிப்பை என்னுள்
கூட்டியது  நிஜம்தான் அண்ணே

அணி மாறி நின்னு பின்னால தனித்து
நின்னு நீங்க செய்த அரசியலையெல்லாம்
விரிவா எழுதனும்னா அதிகப் பக்கம்
ஆகிடும் அண்ணே.அதனால அதையெல்லாம்
விடுத்து நேரடியாக இப்ப விஷயத்துக்கு
வரேன் அண்ணே.

இப்படியெல்லாம் அறிந்தோ அறியாமலோ
அல்லது அரசியல் சூழலினாலோ அல்லது
சுய நல ஆதாயத்துக்காகவோ நீங்க
மாறி மாறி நின்னதுனால உங்களுக்குன்னு
ஒரு ஓட்டு சதவீதம் இருக்குன்னு
எல்லோருக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே

உங்களுக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே
அதனாலதான் நீங்களும் இப்ப ரொம்ப
போங்கு ஆட்டம் போடறிங்க  அண்ணே

ஆனா இப்ப மிகச் சரியா முடிவு எடுக்காட்டி
அது தலைகிழா மாறவும் தரிசாப் போகவும்
நிச்சயம் வாய்ப்பிருக்கு அண்ணே

எனக்குத் தெரிய தமிழகத்தில்
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு பெல்ட் இருக்குண்ணே

உங்க இனத்துக்கு மட்டும் ஒரு பெல்ட்டுன்னு
இல்லாம பரவலா இருக்கிறது மட்டுமல்லாம
எண்ணிக்கை ரீதியாக நடுத்தர மக்களாகவும்
இன்னும் உழைக்கும் மக்களாகவும்
கணிசமான பணக்கார்களாகவும் பரந்து
கிடக்குண்ணே

அதனாலதான் புரட்சித்தலைவரை
தி.மு.கவே எதிர்த்து போராட்டம் நடத்தத்
தயங்கியபோது நாராயணசாமி நாயுடுவாலே
ஒரு பெரிய இயக்கத்தை தலைவருக்கு எதிரா
நடத்த முடிந்தது

தி.மு.க வில் சுப்புவுக்கு  (பின் அதிமுகவில்  )
மிக மோசமாக மின்சாரத்துறை இருந்தபோதும்
ஆற்காட்டாரை விடாது கலைஞர்
 தாங்கிக்  கொண்டிருந்ததெல்லாம்
மறைமுகமாகஉங்கள் ஜாதியைத்
திருப்திப்படுத்தத்தான் அண்ணே

வை.கோ அவர்கள் பிரிந்தபோது கூட
எல்லா கட்சியிலேம் நம்ம கறிவேப்பிலைபோல
பயன்படுத்தறாங்க, இதோ நமக்குன்னு
ஒரு தலைவர்ன்னுஅவர் பின்னால
போனாங்க அண்ணே

அவர் பாவம் நிலைமை புரியாம
மோசபோட்டொமியா,கிரீஸு,மார்க்ஸுன்னு
புலி சிங்கம்முன்னு  கவுண்டமணி
மாதிரி உள்ளூரைபத்தியே பேசாம
 வெறுப்பேத்தி நோகவிட்டுட்டாரு அண்ணே

அதுல வேறுத்துப் போனது பெரும்வாரி  ஜனம்
உன்னை நம்பி உங்கப் பக்கம் இருக்கு அண்ணே

இதை மனசுல வைச்சு முடிவு எடுங்க அண்ணே
நிலைமைய கொஞ்சம்  தெரிஞ்சுக்க  அண்ணே

இல்லாட்டி முன்னால சொன்னவங்க
நிலைமைதான் உங்களுக்கும் அண்ணே

எங்களுக்கு அதுல சந்தேகம் இல்ல அண்ணே

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணே புரிஞ்சிக்கிற நிலைமையில் இருந்தால் சரி...

KILLERGEE Devakottai said...

ஹாஹாஹா அண்ணன் புரிஞ்சுக்கிட்டாருன்னா சரிதான் ஆனால் அவரு தெளிவா இருக்குறே நேரமே கம்மியாத்தானே இருக்கு.
த.ம.3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா அண்ணா புரிய காலம் வரும்.4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

அண்ணனுக்கு முன்பு இருந்த பெயரும் வாய்ப்பும் இப்போதும் இருக்கிறதா என்ன. அவருக்கே தெரியும்

Post a Comment