Tuesday, May 24, 2016

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின்
அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின்
சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

12 comments:

Unknown said...

ஆமாம் கவிஞரே,உலகில் உள்ள அத்துனை ஜீவராசிகளுக்கும் இழைதல்,இயந்து போதல் ஒரு சுகமான அனுபவம். வாழ்க நீவீர்.

Unknown said...

ஆமாம் கவிஞரே,உலகில் உள்ள அத்துனை ஜீவராசிகளுக்கும் இழைதல்,இயந்து போதல் ஒரு சுகமான அனுபவம். வாழ்க நீவீர்.

ஸ்ரீராம். said...

ஆஹா... ஒன்றும் மனம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீங்கள் அனுபவித்ததை நாங்களும் அனுபவித்தோம், கவிதை மூலமாக.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிஜமான வார்த்தைகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிஜமான வார்த்தைகள்

G.M Balasubramaniam said...

சொன்னதெல்லாம் முற்றிலும் உண்மை

Thulasidharan V Thillaiakathu said...

அருமை. உண்மை...நாங்களும் அனுபவிக்கின்றோம் அந்த உண்மையான சுகத்தை...

ஸ்ரீமலையப்பன் said...

அருமை

”தளிர் சுரேஷ்” said...

அருமையான சிந்தனை!

Unknown said...

நன்னயம்

Unknown said...

நன்னயம்

Post a Comment