Thursday, December 8, 2016

2000/500 ரூபாய் நோட்டின் அவலம்

ஒருமுறை ஊழல் குறித்து மூதறிஞர்
இராஜாஜி அவர்கள் சொன்னதாக ஒரு
கட்டுரைப் படித்த ஞாபகம்
அது இந்த அர்த்தத்தில் இருக்கும்

அரசு எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றினாலும்
அதற்கு அரசு நிர்வாகத்தில் பல அடுக்குகளின்
துணையுடன்தான் நிறைவேற்ற முடிகிறது
அவ்வாறு பல அடுக்குகளைத்தாண்டி பயனாளிகளைச்
சேருகையில் அதன் பலன் மிகக் குறுகிப் போகிறது

உதாரணமாக ஒரு பெரிய ஐஸ் கட்டியை பத்துபேர்
கைமாற்றிக் கொடுக்கையில் கடைசியாக உள்ள
நபருக்கு அது போய்ச் சேருகையில் பாதிக்கும்
குறைவான அளவில்தான் போய்ச்சேருகிறது

வெளிச்சூட்டுக்கு ஐஸ் கட்டிக் குறைவதைத்
தவிர்க்க இயலாது. அப்படிக் குறைவதும்
கொஞ்சமாகத்தான் இருக்கும்

ஆனால் கை மாற்றிக் கொடுக்கையில் அவரவர்
கைச்சூட்டுக்குக் குறைவதுதான் ரொம்ப அதிகம்
ஏனெனில் அவர்கள் கைச் சூடு ரொம்ப
அதிகம் என்றார்

அந்த அளவில் எந்த திட்டத்தையும் செயலாற்றும்
அதிகாரிகள் எல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருந்தால்
நிச்சயமாக நாம் செயல்படுத்தும் திட்டம்
எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்
என்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம்
ஒரு நல்ல உதாரணம்

சமீப நாட்களாக மக்கள் எல்லாம் ஏடிஎம் மையங்களில்
வங்கி வாசல்களில் காத்துக் காத்து நோக

அவர்கள் பணத்தைப்பெறவே ஏதோ அரசிடம்
இனாம் பணம் வாங்க
நிற்பதைப்போல்அவதிப்பட....

கோடிக்கோடியாய் புதிய நோட்டுக்கள்
பெரும் செல்வந்தர்களிடம் இருந்து சிக்குவது
எப்படி என்பதுதான் இப்போது உள்ளப் பெரிய பிரச்சனை

நோட்டில் உள்ள எண்களை வைத்து நிச்சயம்
மத்திய வங்கியிலிருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது
என்பதை மிக எளிதாக் கண்டுப்பிடிக்கவும்
உடன் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்
உள்ள சூழலில்..

வெறுமனே வங்கி அதிகாரிகள் கைது எனச் சால்ஜாப்புச்
சொல்லாமல் அரசின் மிகப் பெரும் திட்டத்தை
செல்லாக்காசாக்குகிற இதுபோன்ற அவலம்
தொடராமல்இருக்கவேண்டுமானால்
உடன் இது போன்றுப்பிடிபடும் வங்கி அதிகார்களை
குண்டர் சட்டம் போல  ஒரு கடுமையான
சட்டப்பிரிவின் கீழ் ஜாமீனில்  வெளிவர
முடியாதபடி கைது செய்ய வேண்டும்

மிக கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிற
அச்சம் இல்லையெனில் இந்த அவலம் நிச்சயம்
தொடரத்தான் செய்யும் என்பதோடு அல்லாமல்

இதற்கு அரசு சம்பந்தப்பட்ட்டவர்களின் தொடர்பு
இருக்குமோ என் மக்கள் சந்தேகப் படவும் வாய்ப்புண்டு

அப்படி அவர்கள் சந்தேகப்பட்டால்
அந்தச் சந்தேகத்தை தவறு என நினைக்க முடியாமல்
போகக் கூடும்

அரசு இதை கவனிக்குமா அல்லது கொம்பை விட்டு
வாலைப்பிடித்தலையும் கோமாளிகள் போல
பிரச்சனை உள்ள இடம் விட்டு வேறு எங்கு எங்கோ
இப்போது போல தேடி அலையுமா ?

இதே நிலை தொடருமாய் ஐம்பது என்ன
ஐநூறு நாள் ஆனாலும் இந்தப் பிரச்சனை இப்படித்தான்
தொடரும்

ஊதுகிற சங்கை  ஊதிவிட்டோம்

பார்ப்போம்...

9 comments:

ஸ்ரீராம். said...

எழுபது கோடி ரூபாய் புதிய நோட்டுகள் எப்படி சேர்த்தார்கள்? படிக்கும்போது எனக்கும் அந்தக் கடுப்பு வந்தது நிஜம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பார்கள் போலும். அதே போல அந்த குஜராத் செல்வந்தர் செய்த ஆடம்பரத் திருமணம்.

G.M Balasubramaniam said...

மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஒரு பதிவில் எழுதி இருந்தேன் கோலத்தின் அடியில் போனால் தடுக்கின் அடியில் போகும் சாமர்த்தியம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று. சட்டம் இயற்றுபவரை விட அதன் ஓட்டைகளைக் கண்டறிபவர்களும் இருக்கிறார்கள் கருப்புப் பணத்துக்கும் கள்ளப் பணத்துக்கும் பொது ஜனம் என்றும் எதிரிதான் இந்த ஆதரவைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்

K. ASOKAN said...

காலத்தின் பதிவு-அருமை

Bhanumathy Venkateswaran said...

வாங்கி அதிகாரிகள் வெறும் அம்புதான், எய்தவர்களை தண்டிக்க முடியாத பொழுது எதுவும் செய்ய முடியாது.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! கறுப்பு ஆடுகள் எங்கும் பெருகிவிட்டன!

வெங்கட் நாகராஜ் said...

எப்படியும் திருட்டுத்தனம் செய்யமுடியும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது....

tharun said...

Panam pathum seiyum enpathai unarthavar neengal kavingara

tharun said...

Panam pathum seiyum enpathai unarthavar neengal kavingara

Thulasidharan V Thillaiakathu said...

என்னதான் பணம் செல்லாக்காசு ஆனாலும் திருட்டுத்தனம் நடக்கத்தான் செய்யும் இது தெரியாதா என்ன செல்லாக்காசு ஆக்கியவர்களூக்கு. முதலில் நல்ல நடவடிக்கை என்று மகிழ்ந்தாலும் இப்போது அதிருப்தியே....சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு...கள்ளப்பணத்தையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க எவ்வளவோ வழிகள் இருக்க...

கீதா

Post a Comment