Wednesday, December 21, 2016

காசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெரியுமப்பா

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைதல் என்பது
கடவுள்  குறித்துச் சொன்னதாக
நேற்றுவரை நினைத்திருந்தேன்

இப்போது
உயர் அதிகார்களிடமும்
ஊழல் ஆசாமிகளிடம்
தேடத் தேடத்
தோண்டத் தோண்டப்
புதிய நோட்டுக்கள்
கிடைப்பதைக்  கேட்கக் கேட்க

கால் கடுக்க
நாள் முழுவதும்
தேடி ஓடியும்
திறந்திருக்கிற ஏ.டி,எம்மையும்
பணம் கொடுக்கும்  வங்கியையும்
காணுதல் என்பது
குதிரைக் கொம்பாகிப்
போனதைப் பார்க்கப் பார்க்க ....

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி அலைவது என்பது
கடவுளுக்குச் சொன்னதாக
இப்போதெல்லாம் தோணுவதில்லை
மாறாக அது
காசுக்குச் சொன்னதாகவே படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தத் தோண்டுதல் வேலை, இந்தியாவிலேயே இதுவரை எந்த தலைமைச் செயலாளரிடமும் நடைபெறாமல், தமிழகத்துக்கு மட்டுமே வாய்த்துள்ள ஒரு மாபெரும் சாதனையாகும் என சிலர் பெருமையாகச் சொல்லுகிறார்கள்.

சிவகுமாரன் said...

மிகச் சரியாய் சொன்னீர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

தி.தமிழ் இளங்கோ said...

எல்லோருடைய மனதிலும் இருப்பதை ஒலித்தீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
அருமை
தம +1

vidiyalgowri.blogspot.in said...

இருக்கும் இடம் விட்டு இருக்கக்கூடாத இடத்தில் இருக்கும் பணத்தை என்னசெய்வது? எட்டாப் ப்ழம் புளிக்கும் என ஒதுக்கிவிடுவோமா? அல்லது இருக்கும் இடம் நோக்கி படையெடுப்போமா?

கோமதி அரசு said...

அருமையாக சொன்னீர்கள்.

G.M Balasubramaniam said...

தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசின் ஒரு முயற்சி என்றும் கருத்துகள் இருக்கின்றன.செயலரிடம் இருந்தால் அமைச்சர்களிடமும் இருக்கலாமோ

Yarlpavanan said...

அருமையான படைப்பு
பணம் எங்கே உறங்குமோ
அங்கெல்லாம் சோதனையே!

Thulasidharan V Thillaiakathu said...

தமிழக அரசிற்கு இது நெருக்கடி காலம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நெருக்கடி எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும். எல்லா மாநிலங்களிலும் தான் அமைச்சர்கள், பெரிய புள்ளிகள் இருக்கின்றார்கள். எல்லா மாநிலத்து விஐபிக்களிடமிருந்தும் பதுக்கப்பட்டவை, மற்றும் புதுப் பணம் என்றாலும் சொத்துக்கள் என்றாலும் ஸ்விஸ் வங்கிப் பணமும் இங்கு வந்து சேர வேண்டும்....அதற்கு மோடி என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்...

கீதா

Imayavaramban said...

இப்போது புரிகின்றதா தமிழ் நாட்டை முதன்மை மானிலமாக மாற்றுவோம்! என்று மறைந்த முதல்வர் சொன்னதன் பொருள்? ஒரு தலைமைச் செயலரின் வீட்டில் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை செய்தது எங்கள் மானிலத்தில்தான்!

Post a Comment