Friday, December 23, 2016

. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ஊற்றும் செயலை....

நச்சுமரம் அழிக்க...

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்க
முயல்வதைவிட

ஆணிவேரறுத்து
ஆஸிட்   ஊற்றி
வீழ்த்த முயல்வதுவே
உடனடிப்  பலன்தரும்

ஊழல் அரசியல்வாதிகளை...
துணைபோன அதிகாரிகளை

விசாரித்து
கைது செய்து
நீதிமன்றம் மூலம்
நடவடிக்கை எடுத்தலுக்கு முன் ..

அவர்களுக்குத் தெம்பளிக்கும்
பணபலத்தின்  பின்புலத்தின்
தொடர்பறுத்து
அசுரபலமறுத்துப் பின்
குசலம் விசாரித்தலே
கூடுதல் பலனளிக்கும்

அதுவே
ஊளையிடும் ஓநாய்களின்
உளுத்த வாயடைக்கும்

அதுவே
ஊழல்பெருச்சாளிகளின்
கொட்டமும் அடக்கும்

அதுவே
ஊமை ஜனங்களுக்கு
ஜன நாயகத்தின்பால்
நம்பிக்கையும் கொடுக்கும்

எனவே
மத்திய , மாநில அரசுகளே

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்கும்
ஆமை   நிலை விடுத்து

ஆணிவேர் அறுத்து
ஆஸிட்  ஊற்றும்
உடனடிப்  பலன்தரும்
உறுதியாய்ப் பயன்தரும்
 வேங்கை நிலை  தொடர்வீர்

ஊழல் பெருச்சாலிகளின்
அட்டகாசத்தை
தமிழகம் விட்டு
இனியேனும்
விரட்டி  அடிப்பீர்

(அரசு என்பதனை
அசுரபலம்   மிக்கதாயினும்  தூண்டினால்
மட்டுமே செயல்படும்   அரசு  இயந்திரம்
எனப் பொருள் கொள்க  ) 

7 comments:

Bhanumathy Venkateswaran said...

மிகச்சரியான கணிப்பு!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகச் சரி...

தி.தமிழ் இளங்கோ said...

எல்லோருக்கும் உண்டான ஆதங்கத்தை வெளிப்படையாக்ச் சொன்னதற்கு நன்றி.

G.M Balasubramaniam said...

வழிமொழிகிறேன்

K. ASOKAN said...

நல்ல கருத்து

Thulasidharan V Thillaiakathu said...

மிக நல்ல கருத்துப் பகிர்வு!

Post a Comment